வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் – வங்கி மூலம் வழங்கப்படாதது ஏன்?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் – வங்கி மூலம் வழங்கப்படாதது ஏன்?


தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் வங்கியின் மூலமாக வழங்கப்படாத காரணம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ரூ.6000 நிவாரணம்:

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் பலரும் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது வரையிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முழுவதுமாக வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 30 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6000 வழங்க இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.


இது போக, ஆடு, மாடுகள் மற்றும் பயிர்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை மட்டும் வங்கி கணக்கில் வழங்கப்படும் நிலையில் நிவாரண தொகை ரேஷன் கார்டு மூலமாக ரொக்கமாக வழங்க திட்டமிட்டது ஏன் என்கிற கேள்வி எழுக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கியின் மூலமாக பணம் அனுப்பினால் மினிமம் பேலன்ஸ் இல்லாதவர்களின் கணக்கில் பணம் பிடிக்கப்பட்டுவிடும். இதனால், முழுமையாக நிவாரணத்தொகை பொதுமக்களை சென்றடையவே கையில் பணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments