புயலால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு நிம்மதி – இலவசமாக வழங்க நடவடிக்கை!

 புயலால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு நிம்மதி – இலவசமாக வழங்க நடவடிக்கை!

மிக்ஜாம் புயல் காரணமாக தங்களது கல்வி சான்றிதழ்களை இழந்து உள்ளவர்களுக்கு இலவசமாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

கல்வி சான்றிதழ்கள்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகபட்ச மழைப்பொழிவின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களையும் சந்திக்கும் நிலை உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் நடைபாண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழை நீர் குடியிருப்புகளில் புகுந்து மக்களை அலைக்கழிப்பிற்கு உள்ளாகியது. இதன் காரணமாக மக்கள் தங்கள் உடைமைகளை அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

மக்களுக்கான அனைத்து வகையான நிவாரண பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் இலவசமாக சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் சிறப்பு முகாம்கள் இதற்காக நடத்தப்பட உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். இதன் காரணமாக கல்வி சான்றிதழ்களை இழந்த மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments