வெள்ள நிவாரண நிதி... ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வெளியான குட் நியூஸ்

வெள்ள நிவாரண நிதி... ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வெளியான குட் நியூஸ்

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவதற்கு அருகில் உள்ள ரேசன் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனைதொடர்ந்து, ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ. 6,000 வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.


இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாதவர்களும் வெள்ள நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள நிவாரணம் பெற விரும்புவோர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் பெற்று, அதில், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு விவரம், வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


அதனைதொடர்ந்து, விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள் என தெரிகிறது. ரேஷன் அட்டை அடிப்படையில் வெள்ள நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments