தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!


தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (டிச.4) ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கனமழை எதிரொலி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வாட்டி வதைத்து வருகிறது. அதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாகி இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த 4 மாவட்டங்களிலும் பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

விடுமுறை காரணமாக நியாய விலை கடைகள் டிசம்பர் 4 ஆம் தேதி இயங்காது என தமிழக உணவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இன்று காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அவசியமான சூழல் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments