School morning Prayer Activities 30-06-2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

விளக்கம்:

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் அறக்கடவுளே எண்ணியவர்க்கு தீமையைத் தர எண்ணும்.

பழமொழி :

  A little stream will run a light mill

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.. தந்தை பெரியார்

பொது அறிவு :

1. மிகப் பெரிய மலர் எது? 

விடை: ரஃப்லேசியா அர்னால்டி 

2. மின் விளக்கின் உலோக இழை எதனால் ஆனது? 

விடை: டங்ஸ்டன்

English words & meanings :

 highway - a public road நெடுஞ்சாலை; impress - fix deeply in the mind மனத்தில் பதிய வை

ஆரோக்ய வாழ்வு :

பேரிச்சை பழத்தில் இருக்கும் மெக்னீசியம் கை, கால் பகுதிகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உடையது

ஜூன் 30

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.

நீதிக்கதை

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய்காற்று வீசிக்கொண்டு இருந்தது..!!"
காற்றை கண்டதும்...
'அமைதி' என்ற முதல் மெழுகுவர்த்தி ஐயோ காற்று வீசுகின்றது. நான் அணைந்து விடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.
 "அன்பு '' என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது' என்று அணைந்துவிட்டது. 
''அறிவு '' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.
நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான். "அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே' என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது, 'வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்' என்றது.
சிறுவன் உடனே  நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்.. 'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது...!

இன்றைய செய்திகள்

30.06. 2023

*தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா நியமனம். தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெறுவதை அடுத்து அறிவிப்பு.

*தமிழக டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் நியமனம்.

*சென்னையில் ட்ரோன்கள் மூலம் முக்கிய இடங்களை கண்காணிக்கும் காவல்துறையின் டிரோன் யூனிட் பிரிவை துவங்கி வைத்தார் டி.ஜி.பி சைலேந்திரபாபு.  

*கோவை ஆர்.எஸ்.புரம் அடுத்த தடாகம் சாலையில் அரை நூற்றாண்டை கடந்த நூலகம் மூடப்படுவதையொட்டி சலுகை விலையில் விற்கப்படும் புத்தகங்கள்.

*குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்துத் தர தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு கடிதம் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவன். இறையன்பு, மாணவனை நேரில் அழைத்து திருக்குறள் புத்தகம் மற்றும் பேனா பரிசளித்து வாழ்த்தினார்.

*ஸ்டீவ் ஸ்மித் சதம்: 

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவிப்பு.

Today's Headlines

* Shiv Das Meena was appointed as the new Chief Secretary of Tamil Nadu.  The announcement follows the retirement of Iraiyanbu, Chief Secretary.

 * Shankar Jiwal was appointed as Tamilnadu DGP.

 *DGP Shailendrababu started the drone unit of the police to monitor important places through drones in Chennai.

 *Books sold at concessional prices due to the closure of the half-century-old library on Thadakam Road next to RS Puram, Coimbatore.

 *Sixth standard student who wrote a letter to the Chief Secretary Iraiyanbu to repair the damaged road.  He called the student in person and congratulated him by gifting him a Thirukural book and a pen.

 *Steve Smith's century:

 Australia scored 416 runs in the first innings.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

மாலை நேர வகுப்பு அரசு பள்ளிகளில் அவசியமா? விறுவிறுப்பான விவாதம்!


தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. 

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

சில நாட்களுக்கு முன், தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலை, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டியது கட்டாயம் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டதாக, தகவல் பரவியது.

ஆனால், 'அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை; பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்தது.

மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தடை விதித்தனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாலை நேர வகுப்பு அவசியமா என்பது குறித்து விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு

காண கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=OS698SHKyZc

Share:

திருக்குறள் - அதிகாரம் 3 - நீத்தார் பெருமை - விளக்கம்

திருக்குறள் பாடல் : 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

  • தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

திருக்குறள் பாடல் : 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


  • ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.


திருக்குறள் பாடல் : 23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.


  • இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.


திருக்குறள் பாடல் : 24 

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.


  • மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.


திருக்குறள் பாடல் : 25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.


  • அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.


திருக்குறள் பாடல் : 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.


  • பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.


திருக்குறள் பாடல் : 27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.


  • சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.


திருக்குறள் பாடல் : 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.


  • நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.


திருக்குறள் பாடல் : 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.


  • நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம். எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.


திருக்குறள் பாடல் : 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.


  • எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.


Share:

திருக்குறள் - அதிகாரம் 2 - வான் சிறப்பு- விளக்கம்

திருக்குறள் பாடல் : 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


  • உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.


திருக்குறள் பாடல் : 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.


  • நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.


திருக்குறள் பாடல் : 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.


  • உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.


திருக்குறள் பாடல் : 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.


  • மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.


திருக்குறள் பாடல் : 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.


  • பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.


திருக்குறள் பாடல் : 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.


  • மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.


திருக்குறள் பாடல் : 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.


  • பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.


திருக்குறள் பாடல் : 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


  • மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.


திருக்குறள் பாடல் : 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.


  • மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.


திருக்குறள் பாடல் : 20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.


  • எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.


Share:

திருக்குறள் - அதிகாரம் 49 - காலமறிதல் - விளக்கம்


481.பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

விளக்கம்:

  • தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.

482.பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை யாக்கும் கயிறு.

விளக்கம்:

  • காலத்தோடு பொருத்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மைவிட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.

483.அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

விளக்கம்:

  • ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?

(484) ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்.

விளக்கம்:

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.

(485) காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

விளக்கம்:

  • உலகை வெற்றி கொள்ளக் கருகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

(486) ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.


விளக்கம்:

  • ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர்மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக் கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

(487) பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

விளக்கம்:

  • அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக் கணமே தன் சினத்தை வெளியே காட்ட மாட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.

(488) செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.


விளக்கம்:

  • தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவு காலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும்.

(489) எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.


விளக்கம்:

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.

(490 )கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

 குத்தொக்க சீர்த்த இடத்து.

விளக்கம்:

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து, காலம் வாய்த்த போதில், கொக்கு மீனைக் குத்தினாற்போலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

Share:

திருக்குறள் - அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து - விளக்கம்

குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

குறள் விளக்கம் 
  • எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது
 
குறள்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

குறள் விளக்கம் 
  • தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
 
குறள்: 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

குறள் விளக்கம் 

  • மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

 
குறள்: 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

குறள் விளக்கம் 
  • விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
 
குறள்: 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

குறள் விளக்கம் 
  • இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
 
குறள்: 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

குறள் விளக்கம் 
  • மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்
 
குறள்: 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

குறள் விளக்கம் 
  • ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
 
குறள்: 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

குறள் விளக்கம் 
  • அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
 
குறள்: 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

குறள் விளக்கம் 
  • உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
 
குறள்: 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

குறள் விளக்கம்
  • வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
Share:

ஆசிரியரை தாக்கிய மாணவனை கைது செய்து சிறையில் அடைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்!

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் வாஞ்சிநாதன்(41) த/பெ துரைசாமி காமராஜபுரம், திருச்சி. என்பவர் ஊருக்கு செல்வதற்காக கிருஷ்ணா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது மேற்படி ஆசிரியரிடம் 10 -ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர் பெரம்பலூரை சேர்ந்த ஜேம்ஸ் பாண்டி (18) த/பெ பாண்டியன், விளாமுத்தூர் ரோடு சங்குப்பேட்டை பெரம்பலூர் என்பவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னை ஏன் அடித்தாய் என்று கேட்டு அந்த ஆசிரியரை 

 தாக்கி கத்தியை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்படி எதிரியை பெரம்பலூர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.


என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக *பெரம்பலூர் மாவட்ட காவல்துறை


Share:

School morning Prayer Activities 28-06-2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :203

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

விளக்கம்:

தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.

பழமொழி :

A little learning is a dangerous thing

அரை குறை படிப்பு ஆபத்தானது.
இரண்டொழுக்க பண்புகள் :
1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. தந்தை பெரியார்.

பொது அறிவு :

1. ”வெள்ளை யானைகளின் நாடு” என்று அழைக்கப்படும் நாடு எது?

விடை: தாய்லாந்து

2. உலகின் மிகப்பெரிய சூடான பாலைவனம் எது?

விடை: சஹாரா பாலைவனம்

ஆரோக்ய வாழ்வு :

பழங்கள்: தினம் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் இதயநோய் ,இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.

ஜூன் 28

பி. வி. நரசிம்ம ராவ்  அவர்களின் பிறந்தநாள்

பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.

நீதிக்கதை
நீதி - துஷ்டருக்கு அறிவுரை கூறக் கூடாது

ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.
அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல் · குரங்காரே..என்னைப்பாரும் வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உன்னைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?...
இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.
பறவைக்கு அப்போதுதான் புரிந்தது அறிவுரைகளைக்கூட அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று
துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது. நாமும் ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று
புரித்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

இன்றைய செய்திகள்

28.06. 2023

*ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. 

*தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை- முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு. 

*தமிழ்நாட்டிற்கு மூலதன முதலீட்டிற்காக ₹4079 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மத்திய அரசு.

*உலகக்கோப்பை தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

*ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்: இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Today's Headlines

* Prime Minister Modi inaugurated 5 Vande Bharat trains in one day.

 *Action to create 6 new industrial estates in Tamilnadu- Chief Minister announced.

 *Allocation of ₹4079 crore for capital investment in Tamil Nadu - Central Govt.

 * The India-Pakistan match, which is considered to be the most important match in the World Cup series, is scheduled to be held on October 15 at the Narendra Modi Stadium in Gujarat.

 *ICC 50 Over World Cup Series: India's first match is scheduled to take place on October 8 against Australia at Chennai's Chepauk Stadium.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் - புதிய உத்தரவு!

10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


 தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு வகுப்புகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த வகுப்புகளில் மாணவர்களின் பாட சம்மந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Share:

School morning Prayer Activities 27-06-2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :202

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

விளக்கம்:

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

பழமொழி :

A lie has no legs

கதைக்கு காலில்லை.
இரண்டொழுக்க பண்புகள் :
1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்
பொன்மொழி :
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி. தந்தை பெரியார்.
பொது அறிவு :
1. புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?

விடை: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

2. பையின் மதிப்பை கண்டுபிடித்தவர் யார்?

விடை: ஆர்க்கிமிடிஸ்

English words & meanings :

 Extrodinary - wonderful,அசாதாரணமான. diffusion - the spreading of something so widely,பரவல்

ஆரோக்ய வாழ்வு :

யோகா செய்ய வேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவு (Fast food) போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது.

ஜூன் 27

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்
பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்

ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்
ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.  
பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்

பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கதை

சிங்கம்  இறைச்சிகளைச்  சேர்த்து வைப்பதில்லை. குகையினுள் பல நாள் படுத்து உறங்கும். இனி பசி தாங்காது என்றதும் மெல்ல எழுந்து குகையின் வாயிற்படிக்கு வந்து உடலை அசைத்து தலையை ஆட்டி—ஆ என்று கர்ச்சிக்கும்.
அந்த ஒலி எதிர்மலையிலே தாக்கித் திரும்பவரும். அங்கே காடு முழுதும் பரவியுள்ள மானும் முயலும் இதோ சிங்கம்—அதோ சிங்கம் என்று பயந்து நடுங்கிக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிவரும். அப்போது, தன் குகை வாயிலண்டையிலே வருகிற ஒரு விலங்கை அடித்துத் தின்று, மீதியை அங்கேயே போட்டுவிட்டு. உள்ளே போய்ப் படுத்துக்கொள்ளும்.
எந்தக் கணம் தேவைப்படுகிறதோ அந்தக் கணமே தனக்கு உணவு தன் வாயண்டை வரும் என்ற திடமான நம்பிக்கை அதற்கு உண்டு. அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு!
பகுத்தறிவில்லாத வனவிலங்குகளுக்குள்ள இந்தத் தன்னம்பிக்கை—பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் பலரிடத்திலே இருப்பதில்லை.

தன் அறிவை நம்புவது; தன் பலத்தை நம்புவது; தன் பொருளை, தன் சமுதாயத்தை நம்பி வாழ்வது; இதுதான் தன் நம்பிக்கை!
 இனியாவது தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்துவோமாக.

இன்றைய செய்திகள்

27.06. 2023

*  பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம். 102 பேர் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

*மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு.

*கிரீஸ் நாட்டில் புதிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார் மிட்சோடாகிஸ்.

*பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யாரும் அர்ச்சகர் ஆகலாம். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

*TNPL கிரிக்கெட் : டாஸ் வென்று வந்து வீச்சை தேர்வு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

Today's Headlines

* Engineering rank list published Tiruchendur student Nethra topper.  102 people scored 200 out of 200.

 * Increase in water release in Mettur Dam.

 *The New Democratic Party is back in power in Greece.  Mitsotakis became Prime Minister for the second time.

 *Anyone can become a priest if he has mastered the methods of worship ordered Madras High Court.

 *TNPL Cricket: Chepak Super Gillies won the toss and chose to bowl.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் பொழுது ஏற்படும் பொருத்தமின்மைக்கு தீர்வுகள்..!

 ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் பொழுது ஏற்படும் பொருத்தமின்மைக்கு தீர்வுகள்..!



ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் பொழுது ஏற்படும் பொருத்தமின்மைக்கு தீர்வுகள் (Remedies for mismatch when linking PAN with Aadhaar)...

Kind Attention PAN holders! 

While linking PAN with Aadhaar, demographic mismatch may occur due to mismatch in:

• Name 

• Date of Birth 

• Gender

To further facilitate smooth linking of PAN & Aadhaar, in case of any demographic mismatch, biometric-based authentication has been provided and can be availed of at dedicated centers of PAN Service Providers (Protean & UTIITSL).   

For details, please check the website of Service Providers.

பான் எண் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 

ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் போது, ​​ 

• பெயர் 

• பிறந்த தேதி 

• பாலினம்

போன்றவை பொருந்தாததால் இணைக்க முடியாத நிலை ஏற்படலாம்.

 பான் மற்றும் ஆதார் இணைப்புகளை மேலும் எளிதாக்க,  பொருத்தமின்மையின் போது, ​​பயோமெட்ரிக் அடிப்படையிலான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .

இவற்றைPAN சேவை வழங்குநர்களின் (புரோட்டீன் & UTIITSL) பிரத்யேக மையங்களில் பெறலாம். 

விவரங்களுக்கு, சேவை வழங்குநர்களின் இணையதளத்தைப் பார்க்கவும்.

Share:

ஆசிரியர் சங்கங்களுக்கு சைவ விருந்து; நள்ளிரவு வரை நடந்தது கருத்து கேட்பு..!

 ஆசிரியர் சங்கங்களுக்கு சைவ விருந்து; நள்ளிரவு வரை நடந்தது கருத்து கேட்பு..!



பள்ளிக் கல்வித் துறைக்கு எதிராக போராட்டம் அறிவித்த, ஆசிரியர் சங்கங்களை சமாதானப்படுத்த, சைவ விருந்துடன், இரண்டு நாட்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகளிடம், நள்ளிரவு வரை அமைச்சரும், அதிகாரிகளும் பேச்சு நடத்தினர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தங்கள் பிரச்னைகள் தீரும் என, ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் தீர்வு கிடைக்காததால் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இதற்கு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விஷயத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ ஜியோ அமைதியாக இருந்தது.

அதனால், தொடக்க பள்ளி ஆசிரியர் சங்கங்களும், உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர் சங்கங்களும் தனித்தனியாக, கூட்டமைப்புகளை உருவாக்கின.

அமைச்சர் பேச்சு

புதிய கூட்டமைப்புகள் சார்பில், மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதனால், ஆசிரியர் சங்கங்களை சமாதானப்படுத்தும் வகையில், அமைச்சர் மகேஷ் தலைமையில், கடந்த, 22, 24ம் தேதிகளில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.

பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், தனியார் பள்ளி இயக்குனர்கள் நாகராஜ முருகன், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, பாடநுால் கழக செயலர் குப்புசாமி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

மொத்தம், 75 சங்கங்களின் நிர்வாகிகள் தனித்தனி குழுவாக அழைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு சைவ விருந்து வழங்கப்பட்டதுடன், நண்பகல் முதல் நள்ளிரவு வரை, அவர்களிடம் அமைச்சர் மகேஷும், அதிகாரிகளும் கருத்துக் கேட்டனர்.

அப்போது, 'கடந்த காலத்தை மறந்து விடுங்கள். இனி, எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். போராட்டத்தை கைவிடுங்கள்' என, கேட்டுக் கொண்டனர்.

பிரச்னைகளுக்கு தீர்வு

இதனால், 'பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறதோ, இல்லையோ; அமைச்சரும், அதிகாரிகளும் நேரடியாக குறை கேட்டார்களே' என்ற திருப்தியில், சங்க நிர்வாகிகள் ஊருக்கு திரும்பினர்.

'அப்பாடா, இன்னும் சில மாதங்களுக்கு போராட்டம் இருக்காது, சங்கங்களை சமாளித்து விட்டோம்' என்ற பெருமூச்சுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகளும், தங்கள் வழக்கமான பணிகளை துவக்கி உள்ளனர்.

'நம்பிக்கை இருக்கு!'

'ஆசிரியர்கள், மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் சிக்கல் நிலவியது. தற்போது பள்ளிக்கல்வி துறை செயல்பாட்டில் மாற்றம் தெரிகிறது. அமைச்சரின் கருத்து கேட்பும், இயக்குனர்களின் எளிய அணுகுமுறையும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனாலும், எங்கள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், எங்கள் சங்க நடவடிக்கைகள் தொடரும்.

- பேட்ரிக் ரெய்மாண்ட்

பொதுச் செயலர்,

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

Share:

இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு – அரசின் புதிய ஏற்பாடு!

பள்ளி மாணவர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நான்காவது சனிக்கிழமை மட்டும் மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நோ பேக் டே:

தமிழக உட்பட பல்வேறு மாநிலங்களில் நீண்ட நாள் விடுமுறைக்கு பிறகு தற்போது 2023-24 ஆம் கல்விஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், அதிக நாட்கள் விடுமுறை அறிவித்ததன் காரணத்தினால் இனி வரும் அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனால், தெலுங்கானா மாநிலத்தில் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் புத்தக சுமையை குறைப்பதற்காக இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை நோ பேக் டே கொண்டாடப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தகவல் தொடர்பு திறன், படையாற்றலை வளர்ப்பதற்கான திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

தொடர்ந்து, 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றலின் ஒரு பகுதியாக வாழ்வாதாரம் குறித்த தீம் வடிவமைக்கப்பட்டு அவர்களுக்கு விரும்பிய தொழிலை பற்றி பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குடும்பத்தில் வரவு செலவுகளை திட்டமிட, அஞ்சலகம், கட்டுமான தளங்கள், ரேஷன் கடைகளுக்கு செல்வது, நிதி பரிவர்த்தனைகள் ஆகிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக்கள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

Share:

அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023!

பு. மூ. மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி தளவாய்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விருதுநகர் மாவட்டம்

ஆசிரியர்கள் தேவை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எங்கள் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கீழ்க்கண்ட பாடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்...30.06.2023


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தமிழ்

நேர்முகத் தேர்வு வருகை புரிய வேண்டிய நாள்..06.07.2023- காலை 10 மணி

முதுகலை பட்டதாரி ஆசிரியர் வரலாறு 


நேர்முகத் தேர்வு வருகை புரிய வேண்டிய நாள்..07.07.2023- காலை 10 மணி


மேலும் விபரங்களுக்கு


👇👇👇👇👇👇👇👇



Share:

TNSED SCHOOLS APP NEW VERSION UPDATE LINK



TNSED SCHOOLS APP NEW VERSION UPDATE LINK

What's New

Ennum ezhuthum , sports , health & well - being module changes . Bug fixing & performance improvements

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


Share:

School Morning Prayer Activities - 26.06.2023



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

விளக்கம்:

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

பழமொழி :

A guilty conscience needs no Accuser

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்
பொன்மொழி :
உண்மையில் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரே மூலதனம் நேரம் தான், மேலும் அவன் இழந்தால் பெற முடியாத ஒரே விடயம் நேரம். --தாமஸ் அல்வா எடிசன்
பொது அறிவு :
கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: சார்லஸ் பாபேஜ்

சதுரங்கம் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

விடை: இந்தியா

English words & meanings :

 Disease –sickness. நோய். Entrance –a passage or gate to go inside a place. வாசல்

ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் : யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் அரைமணி நேரம் பயிற்சி அந்நாள் முழுவதற்கும் போதுமானது. முறையான பயிற்சி அவசியம்.

ஜூன் 26


நீதிக்கதை

பாலைவனத்தில்_பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன் குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது.

அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்.

குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் அடி பம்பும் அருகே ஒரு ஜக்கில், தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்.

குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில்

 தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா? தண்ணீர் வருமா?

என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

அது இயங்கா விட்டால், அந்தத் கொஞ்சத் தண்ணீரும் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்

தாகமும் தணியும் உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான்

தண்ணீரைக் குடித்து விடுவதே

புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து

அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் நான் குடித்து விட்டால்

அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.....!!

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை

ஆனது ஆகட்டும் என்று......

அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.

தண்ணீர் வர ஆரம்பித்தது....!!தாகம் தீர வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான்.

அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்த்து.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை பிறருக்கும்

அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்.

எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்

இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"....!!!

இன்றைய செய்திகள்

26.06. 2023

*26 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து சென்ற முதல் இந்திய பிரதமர் மூவர்ணக் கொடியுடன் உற்சாக வரவேற்பு.

*பறவைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசின் சார்பில் தமிழ்நாடு மாநில பறவை ஆணையம் அமைப்பு.

*எல்நினோ காலநிலை நிகழ்வு காரணமாக மீண்டும் உயிர்க்கொல்லி வைரஸ்கள் உருவாகும் அபாயம். கடுமையான வெப்பம் காரணமாக வெப்ப மண்டல நோய்கள் உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.  

*செவ்வாய் கிரகத்தில் மாறிவரும் பருவநிலையை படம் பிடித்தது நாசா. சூரியனுக்கு அருகே செங்கோள் சென்ற போது எடுக்கப்பட்ட புற ஊதாக்கதிர் படம் வெளியானது. 

*தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவு அதிகபட்சமாக மதுரை புறநகர் பகுதியில் 104.4 டிகிரி பதிவானது. 

*TNPL : திண்டுக்கல் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை.

Today's Headlines

*The first Indian Prime Minister to visit Egypt after 26 years and he was welcomed with the tricolor flag.

 * On behalf of the Tamil Nadu government to strengthen the protection of birds A State Bird Commission has been set up.

 *Risk of resurgence of life-killing viruses due to El Niño climate event.  The World Health Organization has warned that tropical diseases will develop due to extreme heat.

 *NASA captured the changing climate on Mars.  An ultraviolet image was released when the constellation passed close to the Sun.

 * 6 places in Tamilnadu crossed 100 degrees and the highest recorded temperature was 104.4 degrees in Madurai suburbs.

 *TNPL: 

Coimbatore beat Dindigul by 59 runs.

 Prepared by

Covai women ICT_போதிமரம்


Share:

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்- மாற்றி அமைக்கப்பட்ட புதிய உணவு வகைகள்!

பின்வரும் பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும்.


ஒரு மாணவ/மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை / கோதுமை ரவை / சேமியா. உள்ளூரில் / அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் (சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு மற்றும் 100மி.கி காய்கறியுடன் கூடிய சாம்பார்) ஒரு வாரத்தில் குறைந்தது நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய 2 சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம்.

Share:

11 வகை பூக்கள்?

மல்லிகை

முல்லை

செவ்வந்தி

சம்பங்கி

ரோஜா

நந்தியா வட்டம்

செம்பருத்தி

செவ்வரலி

கனகாம்பரம்

நாகலிங்கம்

தாமரை


Share:

NIT Trichy நிறுவனத்தில் Research Assistant காலிப்பணியிடங்கள்..!

 NIT Trichy நிறுவனத்தில் Research Assistant காலிப்பணியிடங்கள்..!


NIT Trichy Recruitment 2023 - Apply here for Research Assistant Posts - 01 Vacancies - Last Date - 05.07.2023

NIT Trichy .லிருந்து காலியாக உள்ள Research Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.07.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

NIT Trichy

பணியின் பெயர்: 

Research Assistant

மொத்த பணியிடங்கள்: 

01

தகுதி: 

விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.E./ M.Tech / MSC/ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணத்தை இனைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாள் முடிவடைவதற்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

05.07.2023

Notification for NIT Trichy 2022: Download Here

Official Site: Check Now

Share:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி..!

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி..!




திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓராண்டு சான்றிதழுடன் அர்ச்சகர் பயிற்சியில் மாணவருக்கு இலவசமாக உணவு, தங்குமிடம் மற்றும் மாதம் ரூபாய் மூன்றாயிரம் மட்டும் உதவித் தொகை வழங்கப்படும்.

பயிற்சியில் சேரும் மாணவர்கள் இந்து சமயத்தை சார்ந்தவராகவும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். வயது வரம்பு 14 முதல் 24 வயதுக்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை parthasarathy.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share:

ஆசிரியர்களுக்கு பெங்களூர் (RIESI) நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்..!

 ஆசிரியர்களுக்கு பெங்களூர் (RIESI) நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்..!



பள்ளிக் கல்வி கர்நாடக மாநிலம் பெங்களூர் Regional Institute of English , South India ( RIESI ) என்ற பயிற்சி நிறுவனம் முகாம் வழியில் “ Certificate of Course in English Language Teaching " 03.07.2023 முதல் 01.08.2023 வரை 30 நாட்கள் பயிற்சி பயிற்சியில் அரசு நடத்துதல் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியரை தேர்வு செய்து பட்டியல் அனுப்பக் கோருதல் – சார்பு . - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

DSE Proceedings - Download here...



Share:

பள்ளி கல்வி வளர்ச்சி தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் உரையாடல்...!

 பள்ளி கல்வி வளர்ச்சி தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் உரையாடல்...!



அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் கலந்துரையாடினார்.

 இதில் 75 சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்று பள்ளிக்கல்வி, தொடக்க கல்வி வளர்ச்சிக்கான கருத்துகள், சங்கங்களின் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். சென்னை கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று நடந்தது.

 இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் நாகராஜ முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு சங்கங்களில் இருந்து வந்திருந்தவர்களை ஒவ்வொரு பணியின் வாரியாக பிரித்து தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என்று சுமார் 75 சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடி அவர்களின் குறைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்தார்.

Share:

23.06.2023 SMC கூட்ட கருப்பொருள்!

 23.06.2023 SMC கூட்ட கருப்பொருள்:



*பள்ளி செல்லா குழந்தைகளை PARENT TNSED APP மூலமாக தெரிந்து கொண்டு, அந்த மாணவர்களை சேர்க்க அவர்களின் பெற்றோர் மற்றும் அந்த மாணவர்களை சந்தித்து பள்ளியில் சேர்க்க வேண்டும்

 *10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களை சந்தித்து அந்த மாணவர்களின் படிப்பை தொடரவும், அல்லது ITI போன்ற வேலை வாய்ப்பு சார்ந்த படிப்பை அரசு தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்

*சிறந்த பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு விருது வருகின்ற சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை SMC உறுப்பினர்களிடம் தெரிவித்து பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாட்டை ஊக்கவிக்கவேண்டும்

 *5,8,10 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்கள்  அடுத்த வகுப்பில் சேர்ந்து பள்ளியில் பயில்வதை உறுதி செய்யவேண்டும்

*10,11,12 போன்ற வகுப்புகளை சேர்ந்த துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்

*பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார்களா? என்பதை உறுதி செய்தல்; சேராத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல்

 *நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்கள், மறுதேர்விற்கு விண்ணப்பித்த தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்ச்சி அடைந்தும் உயர்க்கல்விக்கு செல்லாத மாணவர்கள் விவரங்களை கண்டறிந்து அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்தல்

 *1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சேர்ந்து பயின்று வருவதை உறுதி செய்தல்

 *மேலும் பள்ளியின் தேவை சேர்ந்து திட்டமிடுதல்

 *முந்தைய தீர்மானத்தின் தற்போதைய நிலை பற்றி விவரித்தல்

*பள்ளியின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் ஆகியவற்றை விவாதித்து தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் எடுத்து நிறைவேற்றுதல்


Share:

" எலைட் " பள்ளி ஆசிரியர்களுக்கு இரட்டை சுமை...!

" எலைட் " பள்ளி ஆசிரியர்களுக்கு இரட்டை சுமை...!




தமிழகத்தில் எலைட் ' மாதிரி பள்ளிகளின் திட்ட ஆசிரியர்கள் இரண்டு பள்ளிகளுக்கு பொறுப்பேற்க வேண்டியுள்ளதால் மன உளைச்சலில் உள்ளனர்.



Share:

School Morning Prayer Activities - 23.06.2023

School Morning Prayer Activities - 23.06.2023


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.06.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

விளக்கம்:

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாத சொற்களை சொல்ல கூடாது.

பழமொழி :

A good reputation is a fair estate

நற்குணமே சிறந்த சொத்து.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

 2. அனைவரையும் மதித்து நடப்பேன்.

பொன்மொழி :

இழந்த செல்வத்தை உழைப்பால் திரும்பப் பெறலாம், இழந்த அறிவை படிப்பால் திரும்பப் பெறலாம், இழந்த ஆரோக்கியத்தை பத்தியம் அல்லது மருத்துவத்தால் திரும்பப் பெறலாம், ஆனால் இழந்த நேரம் என்றென்றும் இழந்ததுதான். --சாமுவேல் ஸ்மைல்ஸ்

பொது அறிவு :

1. நிலவில் முதன் முதலில் இறங்கியவர் யார்?

விடை: நீல் ஆம்ஸ்ட்ராங்

2. எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறியவர்கள் யார்?

விடை: எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே

English words & meanings :

 Disease –sickness. நோய். 

Entrance –a passage or gate to go inside a place. வாசல்

ஆரோக்ய வாழ்வு :

யோகா வாரம் : ஆரோக்கியம், ஆனந்தம், அன்பு, மன அமைதி என உங்கள் தேடல் இதில் ஏதுவாக இருந்தாலும் அதனைத் தரும் மருந்தாக இருந்து வருகிறது யோகாசனங்கள். முறையான பயிற்சி அவசியம்

ஜூன் 23 இன்று

கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

நீதிக்கதை

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு  அரசு மருத்துவமனையில் 23 நாட்களாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவரைக்காண அவருடைய குடும்பத்தினர் யாருமே வராத நிலையில் ஒரு புறா மட்டும் தினமும் வந்து அந்த முதியவர் சிகிச்சையிலிருந்த ஜன்னலின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்ததாம். 


தொடர்ந்து ஓரிறு நாட்கள் இதைக்கவனித்த  நர்ஸ் பெண்மணி புறா வந்த நேரம் ஜன்னலைக் கொஞ்சம் திறந்து விட்டாராம். அதற்கெனவே காத்திருந்ததைப்போல உடனே அந்தப்புறா உள்ளே வந்து இந்த முதியவரின் மேல் சிறிதுநேரம் அமர்ந்திருந்துவிட்டு பறந்து போய்விட்டதாம். அதன் பிறகும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மாலை வேளைகளில்  அந்தப் புறா வந்து ஜன்னலோரம் அமர்வதும் நர்ஸ்கள் ஜன்னலைத் திறந்து விடுவதும் சில நிமிடங்கள் அந்த முதியவரின் மேல் இருந்துவிட்டுப் புறா பறந்து செல்வதும் வழக்கமாகியிருந்ததாம். 

இந்த விசித்திரமான நடைமுறையைக் கேள்விப்பட்ட  தலைமை மருத்துவர் அந்த முதியவரின் பின்புலத்தை அறிந்துவருமாறு மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார். அந்த ஊழியரும் இந்த முதியவர் தங்கியிருந்த முகவரிக்குச் சென்று விசாரித்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாமல் தனிமையில் வாழ்ந்துவந்த அந்த முதியவர் தினந்தோறும் காலை மாலை வேளைகளில் அங்கு சுற்றித்திரியும் புறாக்கூட்டத்திற்கு உணவும் தண்ணீரும் வைத்து வந்தவராம். அந்தக் கூட்டத்துப் புறாக்களில் ஒன்றுதான் தன் எஜமானனைத் தேடி தினமும் மருத்துவமனைக்கே வந்து சென்றுள்ளது.

நீதி: அவரவர் செய்த செயல்களின் பலனை ( நன்மையோ & தீமையோ) அனுபவிக்காமல் யாருமே இந்தப் பூமியை விட்டுப் போய்விட முடியாது.

தீதும் நன்றும் பிறர்தர வாரா…

இன்றைய செய்திகள் - 23.06. 2023

*அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றிய பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட வெள்ளை எள், கர்நாடக சந்தனக் கட்டை, பஞ்சாப் நெய், உத்தரகாண்ட் பாஸ்மதி அரிசி, மகாராஷ்டிரா வெல்லம் ஆகியவை வழங்கினார்.

*இந்திய விமானப்படைக்கு உள்நாட்டிலேயே போர் விமான என்ஜின்கள் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

*சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த மழை.

*பேனா நினைவு சின்னம் அமைக்க இறுதி அனுமதி வழங்கியது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம்.

*பூரன்-ஹோப் சதம் நேபாளம் அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 339 ரன்கள் குவிப்பு.

*புதிய சாதனை படைத்த ரொனால்டோவுக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்.

Today's Headlines

* Prime Minister Modi gave a historic speech in the US Parliament yesterday.  He provided white sesame brought from Tamil Nadu.Karnataka sandalwood, Punjab ghee, Uttarakhand basmati rice and Maharashtra jaggery 

 *A deal was signed with an American firm to indigenously manufacture fighter engines for the Indian Air Force.

 *Thunderstorm in Chennai and surrounding districts.

 * Coastal Regulatory Authority of the Central Government has given final approval for setting up Pena Memorial.

 * Pooran-Hope strike century. West Indies piled up 339 runs against Nepal.

 *Guinness Record certificate for Ronaldo who set a new record.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: 20% வரை இடம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தகவல்!

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: 20% வரை இடம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தகவல்!

கலை அறிவியல் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் 20 சதவீதம் வரை கூடுதல் இடங்கள் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.


இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: முதல்வர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக உயர்கல்வித் துறை வளர்ச்சி பெற்று வருகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 2,46,295 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 1,07,299 இடங்கள் உள்ளன. இவற்றில் இதுவரை 80,804 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகளவில் வந்துள்ளதால், கடந்தாண்டைப் போல், இந்த ஆண்டும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்.


அதன்படி, அரசு கல்லூரிகளில் 20 சதவீதம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம், சுயநிதிக் கல்லூரிகளில் 10 சதவீதம் இடம் கூடுதலாக வழங்கப்படும். ஜூலை மாதம் 3-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். கல்லூரிகள் திறந்த பின்னர் அங்கு காலியிடங்கள் இருந்தால், அக்கல்லூரிகளில் அப்போது முதல், மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஒரு கல்லூரியில் சேர்ந்த மாணவர் தனக்கு விருப்பமான கல்லூரியில் இடம் கிடைத்தால், ஏற்கெனவே சேர்ந்த கல்லூரியில் செலுத்திய பணத்தை அவர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.


மாநில கல்விக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இன்னும் 2 மாதத்தில் மாநில கல்விக் கொள்கை குழுவின் அறிக்கை வெளியாகும். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு 3 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரி தன்னாட்சி அதிகாரம் காலாவதியானதாக வெளியான தகவல் தவறானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share:

முதுகலை ஆசிரியர்களுக்கு 24-06-2023 சனிக்கிழமை அன்று CRC பயிற்சி!

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை ( Teacher Professional Development ) 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு மாநில அளவில் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி 19.06.2023 அன்று நடத்தப்பட்டது.


 இரண்டாம் கட்டமாக மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி 21.06.2023 மற்றும் 22.06.2023 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது. பெறும் . பார்வை 3 இல் காணும் செயல்முறைகளின்படி 11-12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 24.06.2023 அன்று குறு / வட்டார வளமைய கூட்டம் நடைபெறவுள்ளதால் , அனைத்து மாவட்டக் கருத்தாளர்களும் மற்றும் 11-12 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Share:

தமிழக அரசின் கல்விச் சலுகைகளால் தேனிக்கு இடம்பெயரும் கேரள மாணவர்கள்!

 தமிழக அரசின் கல்விச் சலுகைகளால் தேனிக்கு இடம்பெயரும் கேரள மாணவர்கள்!

தரமான கல்வி, தமிழக அரசின் சலுகைகளால், கேரளாவின் இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேனிக்கு கல்விக்காக இடம்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தேனி மாவட்டத்துக்கு அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படுவதுக்கு முன்பு இப்பகுதி சென்னை மாகாணமாக ஒருங்கிணைந்து இருந்தது. தமிழர்கள் இங்கு அதிகளவில் வசித்து வந்தனர்.மாநிலம் பிரிக்கப்பட்ட போது மூணாறு உள்ளிட்ட பகுதிகள் கேரளாவுடன் இணைந்தது. இருப்பினும் பல தலைமுறையாக தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களாக தொடர்ந்து அங்கு அதிகளவில் வசித்து வருகின்றனர்.



இதனால் திருவிழா, பண்டிகை, குடும்ப நிகழ்வுகளுக்கு அடிக்கடி தமிழகம் வந்து செல்வதுடன், தமிழை முதன்மொழியாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளுக்கும் தமிழ்வழி கல்வியையே போதித்து வருகின்றனர். இருப்பினும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளைப் பொறுத்தளவில் தமிழ்வழி கல்விநிலையங்கள் குறைவாக இருப்பதுடன், வெகுதூரமும் செல்ல வேண்டியதுள்ளது. எனவே மூணாறு, சூரியநல்லி, நெடுங்கண்டம், குமுளி, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட இடுக்கி மாவட்டத்தின் பல பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்விக்காக தேனி மாவட்டத்துக்கு வரும்நிலை உள்ளது.

தேனி அரசு மாணவர் விடுதியில் மாணவர்களை கண்காணிக்கும் கேமரா பதிவுகள்

தமிழகத்தைப் பொறுத்தளவில் மாணவர்களுக்காக பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இலவசமாக மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பேருந்து அட்டை, பாடப்புத்தகம் போன்ற பல்வேறு சலுகைகளுடன் இலவச விடுதி வசதியும் உள்ளது. இது இடுக்கி மாவட்ட தமிழர்களுக்கு பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில் உள்ளது. எனவே கேரளாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்விக்காக தேனி மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இவர்களுக்காக தமிழக விடுதிகளில் ஒதுக்கீடும் உள்ளது. தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் 37 பள்ளி, கல்லூரி விடுதிகள் உள்ளன. இதில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட ஒதுக்கீடு போக கேரளா மாணவர்களுக்கு 100இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதியில்இடம் கிடைக்காதவர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கி படிக்கின்றனர்.

அரசு மாணவர் விடுதியில் நவீன முறையில் உணவு தயாரிக்கும் இயந்திரம்

இதுகுறித்து தேனி மாவட்ட விடுதிக்காப்பாளர்கள் கூறுகையில், "விடுதியில் தங்கும் இடம், உணவு முற்றிலும் இலவசம். முதல் மற்றும் மூன்றாம் வாரம் ஆட்டு இறைச்சியும், இரண்டு மற்றும் நான்காம் வாரம் கோழி இறைச்சியும், வாரம் 5 முட்டையும், சோப்பு, தேங்காய் எண்ணெய், முடிவெட்டிக் கொள்ள மாதம் ரூ.75 மாணவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. போர்வை மற்றும் பாயும் வழங்கப்படுகிறது. இது தமிழக மாணவர்களுக்கு மட்டுமல்லாது கேரளாவில் இருந்து கல்வி பயில வருபவர்களுக்கும் உதவிகரமாக உள்ளது" என்றனர்.


Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support