பள்ளிகளில் வேலை நேரம் மாற்றம் – இன்று முதல் அமல்!

பள்ளிகளில் வேலை நேரம் மாற்றம் – இன்று முதல் அமல்!

மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பள்ளிகளின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.


பள்ளிகளில் வேலை நேரம் மாற்றம்:

ஆந்திர மாநிலத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. ஆனாலும் மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 42 முதல் 45 டிகிரி செல்ஸியஸ் வரை வெயிலின் தாக்கம் இருக்கிறது. எனவே மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க ஒரு புதிய வழி உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது பள்ளி துவங்கும் முதல் வாரமான ஜூன் 12 முதல் ஜூன் 17 வரை வகுப்புகள் காலை 7.30 முதல் 11.30 வரை நடைபெறும். இதற்கிடையில் காலை 8.30 முதல் 9 மணி வரை காலை சிற்றுண்டி (ராகி ஜாவா) மற்றும் 11.30 முதல் 12 மணி வரை மதிய உணவு (ஜெகன்னா கோரமுத்தா) வழங்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பால் தற்போது மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...