TNTET தேர்வர்களுக்கு மதிப்பெண் குறித்த முக்கிய அறிவிப்பு…, தேர்வு வாரிய தலைவர் வெளியீடு!

TNTET தேர்வர்களுக்கு மதிப்பெண் குறித்த முக்கிய அறிவிப்பு…, தேர்வு வாரிய தலைவர் வெளியீடு!

தகுதியான மற்றும் திறமையான ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் பணி அமர்த்துவதற்கான TNTET தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த TNTET தேர்வின் PAPER 2, கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் நடைபெற்றது. இத்தேர்வினை, 2,54,224 பேர் எழுதிய நிலையில், 15,430 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருந்தனர்.

இந்த தேர்ச்சி விகிதமானது, கல்வி துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிட்ட தக்கது. இதையடுத்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், பணி நியமனத் தேர்விற்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்த PAPER 2 தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் சான்றிதழை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வமான இணைய தளத்தில் https://trb.tn.nic.in/ இருந்து, பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை, (13.4.2023) நேற்று முதல், மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மட்டுமே மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...