+2,+11,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. தமிழக பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் குட் நியூஸ்

 +2,+11,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. தமிழக பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் குட் நியூஸ்

தமிழ்நாட்டில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

 பொதுத்தேர்வு எழுதப்போகும் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மார்ச் 13ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ள நிலையில் மே 5ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 17ஆம் தேதியும் +1 மாணவர்களுக்கு மே 19ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு தேதியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்பு தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுத்தவுள்ளனர். 3,169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. மாணவர்களுக்கு பெற்றோர்கள் எந்த வித அழுத்தமும் தரக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை

மார்ச் 13, 2023 திங்கட்கிழமை - மொழித்தாள்

மார்ச் 15, 2023 புதன்கிழமை - ஆங்கிலம்

மார்ச் 17, 2023 வெள்ளிக்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஸ், எதிக்ஸ் அன்ட் இன்டியன் கல்ட்ச்சர்,கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், பயோ கெமிஸ்ட்ரி,பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியியல், நர்ஸிங் வொகேசனல், பேசிக் எலட்க்ரிகல் இஞ்சினியரிங்

மார்ச் 21, 2023 செவ்வாய்க்கிழமை - பிசிக்ஸ், எகனாமிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி

மார்ச் 27,2023 திங்கட்கிழமை - கணக்கு, விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசன் அன்ட் டயடிக்ஸ், டெக்ஸ்டைல் அன் டிரஸ் டிசைனிங், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்சுரல் சயின்ஸ், நர்ஸிங்

மார்ச் 31, 2023 வெள்ளிக்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங், பேசிக் சிவில் இஞ்சினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்,டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆபிஸ் மேனேஜ்மென்ட் செக்ரட்டரிஷிப்

ஏப்ரல் 03, 2023 திங்கட்கிழமை - வேதியியல், அக்கவுண்டன்ஸி, ஜியாகிரபி


11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி தேதியன்று முடிவடையும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.50 லட்சம் பேர் எழுத உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பிளஸ்1 பொதுத் தேர்வு 2023 அட்டவணை


மார்ச் 14, 2023 - செவ்வாய்கிழமை - மொழித்தாள்

மார்ச் 16, 2023 - வியாழக்கிழமை - ஆங்கிலம்

மார்ச் 20, 2023 திங்கட்கிழமை - பிசிக்ஸ், எகனாமிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி

மார்ச் 24, 2023 வெள்ளிக்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங், பேசிக் சிவில் இஞ்சினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்,டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆபிஸ் மேனேஜ்மென்ட் செக்ரட்டரிஷிப்

மார்ச் 28, 2023 செவ்வாய்க்கிழமை - வேதியியல், அக்கவுண்டன்ஸி, ஜியாகிரபி

மார்ச் 30, 2023 வெள்ளிக்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஸ், எதிக்ஸ் அன்ட் இன்டியன் கல்ட்ச்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், பயோ கெமிஸ்ட்ரி,பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியியல், நர்ஸிங் வொகேசனல், பேசிக் எலட்க்ரிகல் இஞ்சினியரிங்

ஏப்ரல் 05,2023 திங்கட்கிழமை - கணக்கு, விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசன் அன்ட் டயடிக்ஸ், டெக்ஸ்டைல் அன் டிரஸ் டிசைனிங், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்சுரல் சயின்ஸ், நர்ஸிங்


10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதவுள்ளனர். 3,986 மையங்களில் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 - அட்டவணை


ஏப்ரல் 06, 2023 வியாழக்கிழமை - மொழித்தாள்

ஏப்ரல் 10, 2023, திங்கட்கிழமை - ஆங்கிலம்

ஏப்ரல் 13, 2023 வியாழக்கிழமை - கணிதம்

ஏப்ரல் 15, 2023 சனிக்கிழமை - விருப்ப மொழி

ஏப்ரல் 17, 2023 திங்கட்கிழமை - அறிவியல்

ஏப்ரல் 20,2023 வியாழக்கிழமை - சமூக அறிவியல்


மாணவர்கள் அனைவரும் முழு கவனத்துடன் பொதுத்தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் 10,11,12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறவிருந்த செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கும் செய்முறை தேர்வுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே நடத்த திட்டம் என தகவல் தெரிவித்துள்ளது.Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...