பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் நீட்டிப்பு அனுமதி கோரி ஏப்.16 வரை விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) நம்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள், தங்களுக்கான அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அதன்படி, பொறியியல் கல்லூரிகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன.
அந்தவகையில் புதிய கல்லூரிகள், படிப்புகள் தொடக்கம் மற்றும் அங்கீகாரம் நீட்டிப்பு ஆகியவை தொடர்பாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றன. இதற்கான அவகாசம் ஏப்.6-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. எனினும், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்.16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறுதல் மற்றும் நீட்டிப்புக்கான அனுமதி கோரி கல்வி நிறுவனங்கள் தேவையான ஆவணங்களுடன் துரிதமாக விண்ணப்பிக்க அபராதத் தொகையுடன் ஏப். 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.