கோடை விடுமுறை மேலும் நீட்டிப்பு…, பள்ளிகள் ஜூன் 26ம் தேதி தான் திறக்கப்படும்…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதிய ஆண்டுக்கான பள்ளி திறப்பது நிர்ணயிக்கப்பட்ட தேதியை விட தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது முன்பு ஜூன் 7ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜூன் 12 மற்றும் ஜூன் 14 தேதிகளில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


ஆனால், உத்திரப் பிரதேச மாநிலமானது வெயிலின் தாக்கத்தை பொறுத்து முன்கூட்டியே ஜூன் 20ம் தேதி வரை கோடை விடுமுறையை அறிவித்திருந்தது. 

தற்போது, பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆசிரியர்கள்-மாணவர்கள் மற்றும் வகுப்புகள் தொடங்குவது குறித்து திட்டமிடலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதாவது, பள்ளி திறக்கும் நாளான ஜூன் 21ம் தேதி உலக யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடி இனிப்புகள், பழங்கள், சுத்தமான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அடிப்படைக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கு முதலில் ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், உத்தரபிரதேச மாநில அடிப்படை கல்வி கவுன்சில் செயலாளர் பிரதாப் சிங் பாகேல் ஜூன் 15க்கு பதில் கோடை விடுமுறையை நீட்டித்து ஜூன் 26ஆம் தேதி வரை என அறிவித்துள்ளார். இதனை, மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி பூபேந்திர நாராயண் சிங் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...