தேர்வு ஒத்திவைத்த சென்னை பல்கலைக்கழகம்..!

 தேர்வு ஒத்திவைத்த சென்னை பல்கலைக்கழகம்..!


தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 2ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இதனிடையே, வட இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், டிசம்பர் 5ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி குறிப்பிடாமல் தேர்வுகளை ஒத்திவைத்துள்ள சென்னை பல்கலைக்கழகம், மழை எச்சரிக்கை காரணமாக மாணவ, மாணவிகள் நலன் கருதி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Share:

டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைமுறைகள் தாமதம் ஆகுமா? உயர் அதிகாரி திடீர் மாற்றம்..!!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைமுறைகள் தாமதம் ஆகுமா? உயர் அதிகாரி திடீர் மாற்றம்..!!


டி.என்.பி.எஸ்.சி செயலாளர் உமா மகேஸ்வரி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைமுறைகள் தாமதம் ஆகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

டி.என்.பி.எஸ்.சி செயலாளராக 2 ஆண்டுகளுக்கும் மேலாக  பதவியில் இருந்த உமா மகேஸ்வரி வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி செயலாளராக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருந்த உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, வணிகவரித்துறை இணை ஆணையராக நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கெனவே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்சி தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி செயலாளர் உமாமகேஸ்வரியும் மாற்றப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சார்ந்த பல்வேறு முக்கிய பணிகளை வந்தார். 

டி.என்.பி.எஸ்.சி செயலாளராக இருந்த உமா மகேஸ்வரி மாற்றம் செய்யப்பட்ட பின், டி.என்.பி.எஸ்சி செயலாளராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. அடுத்த டி.என்.பி.எஸ்.சி செயலாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கும் குரூப் 1, 2, 4, உள்ளிட்ட அரசு  பணிகளுக்கான தேர்வுகளை ஆண்டு தோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதி வருகின்றனர். தேர்வுகள் அறிவிப்பு, தேர்வு நடத்தும் பணிகள், தேர்வு முடிவுகள் என ஆண்டு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி பணிகள் இருக்கும். இந்நிலையில், திடீரென டி.என்.பி.எஸ்.சி செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதங்கள் ஏற்படலாம் என தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி.என்.பி.எஸ்.சி செயலாளர் மாற்றப்பட்டு, அந்த பதவி காலியாக இருப்பதால் குருப் 2 தேர்வு முடிவுகள் தாமதமாகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளதால் தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Share:

ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் : அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது!..!

ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் : அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது!..!

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய் நல்லூர் அருகே ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்...

திருவெண்ணைநல்லுர் அடுத்த பேரங்கியுரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில் 11,12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர் புதன்கிழமை மது போதையில் பள்ளிக்கு வந்தனராம் . அவர்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதுடன் ,அதைக் கண்டித்த ஆசிரியர்கள் ,ஆசிரியைகளை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம் . இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லுர் போலீஸ் வழக்குப் பதிந்து ,17 வயதுடைய 3 மாணவர்கள் 18 வயதுடைய ஒருவர் என மொத்தம் 4 மாணவர்கள் கைது செய்தனர் 

Share:

30 ஆண்டுகள் ஒரே பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறும் விண்ணப்ப படிவம்..!!

30 ஆண்டுகள் ஒரே பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறும் விண்ணப்ப படிவம்..!!

30 ஆண்டுகள் ஒரே பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் போனஸ் ஊதிய உயர்வு பெறும் விண்ணப்ப படிவம்

Download here

Share:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் - குழப்பத்தில் அதிகாரிகள்...!!

 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் - குழப்பத்தில் அதிகாரிகள்...!!

சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவரால் சிவகங்கை கல்வித் துறை அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மேலும் அம்மாணவரை பள்ளியை விட்டு நீக்கியுள்ளனர்.

சிவகங்கை அருகே மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதி முத்துராமன், பார்வதி. இவர்களது 2-வது மகன் சரவணன் 2020-ம் ஆண்டு வி.மலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார். 2022-ம் ஆண்டு மே மாதம் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை எழுதினார். இதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து, அதே ஆண்டு ஆகஸ்டில் நடந்த துணைத் தேர்வில் தோல்வி அடைந்த மூன்று பாடங்களையும் எழுதினார். இதில் கணிதம், சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றார். ஆனால் அறிவியல் பாடத்தில் எழுத்து தேர்வில் (கருத்தியல்) 15 மதிப்பெண்கள், செய்முறையில் 25 மதிப்பெண்கள் என 40 மதிப்பெண்கள் பெற்றார். தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் போதும் என்றாலும், எழுத்து தேர்வில் குறைந்தது 20 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

மேலும் தேர்வுத் துறை வெளியிட்ட இணைய வழி மதிப்பெண் சான்றிதழில் அறிவியல் பாடத்தில் தோல்வி என குறிப்பிடும் இடத்தில் ‘எப்’ என குறிப்பிடாமல் காலியாக இருந்தது. அசல் மதிப்பெண் சான்று வர தாமதமாகும் என்பதால், இணையவழி சான்றை மாணவர் பள்ளியில் கொடுத்துள்ளார்.

அறிவியல் பாடத்தில் 40 மதிப்பெண்கள் என இருந்ததை பார்த்த ஆசிரியர்கள், தேர்ச்சி பெற்று விட்டார் என நினைத்து பிளஸ் 1 வகுப்பில் சேர்த்து கொண்டனர். தொடர்ந்து கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 1 தேர்விலும் 600-க்கு 254 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். தற்போது பிளஸ் 2 காலாண்டு தேர்வு முடிந்து, அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுக்கு மாணவர்களின் பட்டியலை தயாரித்த போது, சரவணனின் அசல் சான்றை சரி பார்த்தனர். அப்போது அவர் 10-ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதது தெரியவந்தது. இதையடுத்து சரவணனின் பெற்றோரை வரவழைத்து, மாற்றுச் சான்று கொடுத்து மாணவரை வெளியேற்றினர். இது குறித்து மாணவரின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.

இதனால் குழப்பம் அடைந்த கல்வித் துறை அதிகாரிகள், தொடர்ந்து விசாரிக்கின்றனர். இது குறித்து பள்ளி நிர்வாகத் தினரிடம் கேட்டபோது, ‘‘இணைய வழி சான்றிதழில் தேர்ச்சி என இருந்தது. அதனால் சேர்த்து கொண்டோம். அசல் சான்று வந்த பிறகு அம்மாணவர் எங்களிடம் கொடுக்காமல் விட்டு விட்டதால் குழப்பம் ஏற்பட்டது’ என்றனர்.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது ‘‘பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.

Share:

6-12 வகுப்புகளுக்கு மாநில அளவிலான அரையாண்டு பொதுத் தேர்வு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

6-12 வகுப்புகளுக்கு மாநில அளவிலான அரையாண்டு பொதுத் தேர்வு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

Assessment cell discussion meeting on forthcoming Half - yearly Examination was held on 08.11.2023 headed by State Project . Director . During the meeting , it was discussed that the assessment cell of SCERT will prepare questions for conduct Term - 2 Summative and Half - yearly examination for classes 6 to 12 in December 2023 , In addition to this , it is also discussed that the time table should be prepared for class 6 to 12 for Term 2 - Summative and Half - Yearly exam .

 In specific , the dates for the Half - Yearly exam for Class 11 and 12 will commence from December 07 to December 22 and similarly , from December 11 to December 21 for class 6 to 10 . In this milieu , the Summative / Half - Yearly Examination time table for Classes 6 to 10 and Higher Secondary ( Classes 11 and 12 ) have been prepared by SCERT and the same is enclosed herewith for information . Based on the discussion held , Assessment Cell , SCERT will prepare 2 sets of question papers from class 6 to 12 for Term -2 summative and Half- Yearly examination . In specific class 6 to 8 question papers for all medium will be uploaded in the portal for download on the previous day ( 2 pm ) for every exam.

 The SOP to conduct the descriptive exam has been prepared by Assessment Cell , SCERT and the same is enclosed herewith . In this regard , the Director , Directorate of School Education and Directorate of Elementary Education is requested to communicate the Proceedings regarding the Term - 2 summative and Half - Yearly exam to all the Districts as early as possible for the smooth conduct of Examination at field level .

 இணைப்பு: 6-12 தேர்வு அட்டவணை!

SPD - 1 To 12th Half-yearly Examination Time Table


Share:

கனமழை காரணமாக இன்று (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் :

* ராணிப்பேட்டை ( பள்ளிகளுக்கு மட்டும் )

* சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் )

* காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்.)

* திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு...)

விடுமுறை இல்லை

* செங்கல்பட்டு , விழுப்புரம் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்

Share:

10th Std - half yearly Exam Question paper 2023

10th Std - half yearly Exam Question paper 2023

10th Std - half yearly Exam Question paper 202

10th Std - half yearly Question paper 2023

Tamil

10th Tamil half Yearly Model Question paper 2023 - Download Here

10th Tamil half Yearly Original Question paper 2023 - Download Here

10th Tamil half Yearly Original Question paper 2022 - Download Here

English

10th English half Yearly Model Question paper 2023 - Download Here

10th English half Yearly Original Question paper 2023 - Download Here

10th English half Yearly Original Question paper 2022 - Download Here

Maths

10th Maths half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

10th Maths half Yearly Model Question paper 2023 English Medium -Download Here

10th Maths half Yearly Original Question paper 2023 Tamil Medium -Download Here

10th Maths half Yearly Original Question paper 2023 English Medium - Download Here

10th Maths half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

10th Maths half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Science

10th Science half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

10th Science half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

10th Science half Yearly Original Question paper 2023 Tamil Medium - Download Here

10th Science half Yearly Original Question paper 2023 English Medium - Download Here

10th Science half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

10th Science half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Social science

10th Social science half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

10th Social science half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

10th Social science half Yearly Original Question paper 2023 Tamil Medium - Download Here

10th Social science half Yearly Original Question paper 2023 English Medium -Download Here

10th Social science half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

10th Social science half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Share:

10th English - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original

10th English - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original With Answer key

      10th std All District Previous year original and Model Half yearly Exam 2023 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2023.

English

10th English - Half Yearly Important Questions 2023 - PDF Download Here

10th English - Half Yearly Model Question paper 2023 - PDF Download here

10th English - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 - PDF Download here ( selected Most Important Question ) Kallakurichi

10th English - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - PDF Download here ( theni )

10th English - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - PDF Download here ( Tenkasi )

10th English - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Tirupattur )

10th English - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Karur )

Share:

10th Science - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original

10th Science - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original With Answer key

      10th std All District Previous year original and Model Half yearly Exam 2023 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2023.

Science

10th Science - Half Yearly Important Questions 2023 - PDF Download Here

10th Science - Half Yearly Model Question paper 2023 -English Medium PDF Download here

10th Science - Half Yearly Model Question paper 2023 -Tamil Medium PDF Download here

10th Science - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 - English Medium PDF Download here ( Tiruvannamalai  )

10th Science - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - English Medium PDF Download here ( Krishnagiri )

10th Science - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - PDF Download here ( Kallakurichi )

10th Science - Half Yearly Exam Original Question paper - English Medium PDF Download here ( Tenkasi )

10th Science - Half Yearly Exam Original Question paper -English Medium PDF Download here ( virudunagar )

10th Science - Half Yearly Exam Original Question paper -( Viruthunagar ) PDF Download here ( Tamil Medium )

10th Science - Half Yearly Exam Original Question paper -( Tiruvannamalai ) PDF Download here ( Tamil Medium )

Share:

10th Maths - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original

10th Maths - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original With Answer key

      10th std All District Previous year original and Model Half yearly Exam 2023 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2023.

Maths

10th Maths - Half Yearly Important Questions 2023 - PDF Download Here

10th Maths - Half Yearly Model Question paper 2023 -English Medium PDF Download here

10th Maths - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 - English Medium PDF Download here ( kallakurichi  )

10th Maths - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - English Medium PDF Download here ( Tirupatture )

10th Maths - Half Yearly Exam Original Question paper 2022 -2023 - PDF Download here

10th Maths - Half Yearly Exam Original Question paper - English Medium PDF Download here ( Tenkasi )

10th Maths - Half Yearly Exam Original Question paper -Tamil Medium PDF Download here ( virudunagar )

10th Maths - Half Yearly Exam Original Question paper - PDF Download here ( Tamil Medium )

Share:

10th Tamil Half Yearly Important Questions 2023 - Full portion

10th Tamil Half Yearly Important Questions 2023 / | Public Exam 2024

இந்த  )10th Tamil Half Yearly Important Questions 2023 | Public Exam 2024 டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும்  English Medium

 

Download



Share:

10th Tamil - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original

10th Tamil - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original With Answer key

      10th std All District Previous year original and Model Half yearly Exam 2023 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2023.

Tamil

10th Tamil - Half Yearly Important Questions 2023 - PDF Download Here

10th Tamil - Half Yearly original Question paper 2023 - PDF Download here ( Karur )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Madurai, Dindigul )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Tenkasi )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Tirupattur )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( virudhunagar )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Tanjavor )

10th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( salem

Share:

9th Std - half yearly Question paper 2023

9th Std - half yearly Exam Question paper 2023 

9th Std - half yearly Question paper 2023 -  - All district

9th Std - half yearly Question paper 2023

Tamil

9th Tamil half Yearly Model Question paper 2023 - Download Here

9th Tamil half Yearly Original Question paper 2023 - Download Here

9th Tamil half Yearly Original Question paper 2022 - Download Here

English

9th English half Yearly Model Question paper 2023 - Download Here

9th English half Yearly Original Question paper 2023 - Download Here

9th English half Yearly Original Question paper 2022 - Download Here

Maths

9th Maths half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

9th Maths half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

9th Maths half Yearly Original Question paper 2023 Tamil Medium -Download Here

9th Maths half Yearly Original Question paper 2023 English Medium - Download Here

9th Maths half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

9th Maths half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Science

9th Science half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

9th Science half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

9th Science half Yearly Original Question paper 2023 Tamil Medium - Download Here

9th Science half Yearly Original Question paper 2023 English Medium - Download Here

9th Science half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

9th Science half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Social science

9th Social science half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

9th Social science half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

9th Social science half Yearly Original Question paper 2023 Tamil Medium - Download Here

9th Social science half Yearly Original Question paper 2023 English Medium -Download Here

9th Social science half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

9th Social science half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Share:

9th English - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original

9th English - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original With Answer key

      9th std All District Previous year original and Model Half yearly Exam 2023 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2023.

English

9th English - Half Yearly Important Questions 2023 - PDF Download Here

9th English - Half Yearly Exam Model Question paper 2023 - PDF Download here ( soon)

9th English - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 ( 1 ) - PDF Download here

9th English - Half Yearly Exam Original Question paper 2023 ( 2) - PDF Download here

9th English - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( 3 ) )

9th English - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( virudhunagar )

Share:

9th Maths - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original

9th Maths - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original With Answer key

      9th std All District Previous year original and Model Half yearly Exam 2023 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2023.

Maths

9th Maths - Half Yearly Important Questions 2023 - PDF Download Here

9th Maths - Half Yearly Exam Model Question paper 2023 - PDF Download here ( soon)

9th Maths - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 ( English Medium ) - PDF Download here

9th Maths - Half Yearly Exam Original Question paper 2023 ( English Medium) - PDF Download here

9th Maths - Half Yearly Exam Original Question paper 2023 -English medium  PDF Download here

9th Maths - Half Yearly Exam Original Question paper 2023 -English Medium PDF Download here ( Tenkasi )

9th Maths - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 ( Tamil Medium ) - PDF Download here

9th Maths - Half Yearly Exam Original Question paper 2023 ( Tamil Medium) - PDF Download here

9th Maths - Half Yearly Exam Original Question paper 2023 -Tamil medium  PDF Download here

9th Maths - Half Yearly Exam Original Question paper 2023 -Tamil Medium PDF Download here ( Viruthunagar )

Share:

9th Science - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original

9th Science - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original With Answer key

      9th std All District Previous year original and Model Half yearly Exam 2023 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2023.

Science

9th Science - Half Yearly Important Questions 2023 - PDF Download Here

9th Science - Half Yearly Exam Model Question paper 2023 - PDF Download here 

9th Science - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 ( English Medium ) - PDF Download here

9th Science - Half Yearly Exam Original Question paper 2023 ( English Medium) - PDF Download here

9th Science - Half Yearly Exam Original Question paper 2023 -English medium  PDF Download here

9th Science - Half Yearly Exam Original Question paper 2023 -Tamil Medium PDF Download here

9th Science - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 ( Tamil Medium ) - PDF Download here

9th Science - Half Yearly Exam Original Question paper 2023 ( Tamil Medium) - PDF Download here

Share:

9th social Science - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original

9th social Science - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original With Answer key

      9th std All District Previous year original and Model Half yearly Exam 2023 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2023.

social Science

9th social Science - Half Yearly Important Questions 2023 - PDF Download Here

9th social Science - Half Yearly Exam Model Question paper 2023 - PDF Download here 

9th social Science - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 ( English Medium ) - PDF Download here

9th social Science - Half Yearly Exam Original Question paper 2023 ( English Medium) - PDF Download here

9th social Science - Half Yearly Exam Original Question paper 2023 -English medium  PDF Download here

9th social Science - Half Yearly Exam Original Question paper 2023 -Tamil Medium PDF Download here

9th social Science - Half Yearly Exam Original Question paper 2022 - 2023 ( Tamil Medium ) - PDF Download here

9th social Science - Half Yearly Exam Original Question paper 2023 ( Tamil Medium) - PDF Download here

Share:

9th Tamil - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original

9th Tamil - Half Yearly Question Paper 2023 - 2024 , Model, Original With Answer key

      9th std All District Previous year original and Model Half yearly Exam 2023 Question papers PDF Download Available Here. You can Download printable PDF format for half yearly Exam Original, Model Question paper 2023.

Tamil

9th Tamil - Half Yearly Important Questions 2023 - PDF Download Here

9th Tamil - Half Yearly Exam Model Question paper 2023 - PDF Download here ( soon)

9th Tamil - Half Yearly Exam Original Question paper  - PDF Download here ( Madurai, Dindigul )

9th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Tenkasi )

9th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( Tirupattur )

9th Tamil - Half Yearly Exam Original Question paper 2023 - PDF Download here ( virudhunagar )


Share:

7th Std - half yearly Question paper 2023

7th Std - half yearly Exam Question paper 2023 ( Term 2 - Summative Assesment )

7th Std - half yearly Question paper 2023 - All district

Tamil

7th Tamil half Yearly Model Question paper 2023 - Download Here

7th Tamil half Yearly Original Question paper 2023 - Download Here

7th Tamil half Yearly Original Question paper 2022 - Download Here

English

7th English half Yearly Model Question paper 2023 - Download Here

7th English half Yearly Original Question paper 2023 - Download Here

7th English half Yearly Original Question paper 2022 - Download Here

Maths

7th Maths half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

7th Maths half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

7th Maths half Yearly Original Question paper 2023 Tamil Medium -Download Here

7th Maths half Yearly Original Question paper 2023 English Medium - Download Here

7th Maths half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

7th Maths half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Science

7th Science half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

7th Science half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

7th Science half Yearly Original Question paper 2023 Tamil Medium - Download Here

7th Science half Yearly Original Question paper 2023 English Medium - Download Here

7th Science half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

7th Science half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Social science

7th Social science half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

7th Social science half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

7th Social science half Yearly Original Question paper 2023 Tamil Medium - Download Here

7th Social science half Yearly Original Question paper 2023 English Medium -Download Here

7th Social science half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

7th Social science half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Share:

6th std - half yearly Question paper 2023

6th Std - half yearly Exam Question paper 2023 ( Term 2 - Summative Assesment )

6th std - half yearly Question paper 2023 - All district

Tamil

6th Tamil half Yearly Model Question paper 2023 - Download Here

6th Tamil half Yearly Original Question paper 2023 - Download Here

6th Tamil half Yearly Original Question paper 2022 - Download Here

English

6th English half Yearly Model Question paper 2023 - Download Here

6th English half Yearly Original Question paper 2023 - Download Here

6th English half Yearly Original Question paper 2022 - Download Here

Maths

6th Maths half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

6th Maths half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

6th Maths half Yearly Original Question paper 2023 Tamil Medium - Download Here

6th Maths half Yearly Original Question paper 2023 English Medium - Download Here

6th Maths half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

6th Maths half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Science

6th Science half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

6th Science half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

6th Science half Yearly Original Question paper 2023 Tamil Medium - Download Here

6th Science half Yearly Original Question paper 2023 English Medium - Download Here

6th Science half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

6th Science half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Social science

6th Social science half Yearly Model Question paper 2023 Tamil Medium - Download Here

6th Social science half Yearly Model Question paper 2023 English Medium - Download Here

6th Social science half Yearly Original Question paper 2023 Tamil Medium - Download Here

6th Social science half Yearly Original Question paper 2023 English Medium -Download Here

6th Social science half Yearly Original Question paper 2022 Tamil Medium - Download Here

6th Social science half Yearly Original Question paper 2022 English Medium - Download Here

Share:

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – ஹால்டிக்கெட் வெளியீடு!

 TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – ஹால்டிக்கெட் வெளியீடு!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கால்நடை பராமரிப்பு பணிகளுக்கான தேர்வின் நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டு உள்ளது.

ஹால் டிக்கெட் வெளியீடு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்திருந்தது. இதற்கான எழுத்து தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கான நுழைவு சீட்டுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிகளை உள்ளிட்டு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இது தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ தளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

OFFICIAL NOTICE

HALL TICKET DOWNLOAD

Share:

முதல்வரின் காலை உணவுத் திட்டம்; தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்!

 முதல்வரின் காலை உணவுத் திட்டம்; தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்குதல், கல்வி இடைநிற்றலைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டம், ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக சென்னை மேயர் பிரியா தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சென்னையில் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்குத் தனியாருக்கு ஒப்பந்தம் செய்வது விடுவது தொடர்பான தீர்மானம், முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வெளியிட்டக் குறிப்பில், `பெருநகர சென்னை மாநகராட்சியில், மத்திய வட்டாரத்திலுள்ள 164 பள்ளிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகள்) பயிலும் 25,468 மாணவ மாணவியருக்குக் காலை உணவுத் திட்டத்தினை வெளி நிறுவனம் மூலம் ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்தம் கோரி பணி மேற்கொள்ள அனுமதி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மீது வாக்கெடுப்பு நடந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, `ஏற்கெனவே சென்னை மாநகராட்சியின்கீழ் காலை உணவுத் திட்டம் நன்றாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதற்காக தனியாருக்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் விடவேண்டும்' என கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு, சென்னை தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே தனியாருக்கு இவ்வாறு ஒப்பந்தம் விடப்பட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் ஓராண்டுக்கு மட்டும் தனியாருக்கு ஒப்பந்தம் அளிப்பதாகவும் மேயர் பிரியா பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில், பெரும்பான்மை அடிப்படையில் சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தைத் தனியாருக்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் அளிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share:

சைனிக் பள்ளிகள் மாணவர் சேர்க்கை 2023 -2024 | நுழைவுத் தேர்வு அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசிநாள்: 15.12.2023..!!

சைனிக் பள்ளிகள் மாணவர் சேர்க்கை 2023 -2024 | நுழைவுத் தேர்வு அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசிநாள்: 15.12.2023..!!


சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: 

நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் (Sainik schools) அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு,

இணையதளம் வழியாக டிச.16-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.

Click here

கட்டண விவரம்

இதற்கு விண்ணப்ப கட்டண மாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும். 

இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை என்டிஏ வலைதளத்தில்

 Click here

அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கபட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.வி.கிருஷ்ண மேனன் அவர்களால் 1961 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. 

இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.  

பள்ளியின் நோக்கம் சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாதமி ( NDA - National Defence Academy) அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவதாகும்

அமராவதி சைனிக் பள்ளி என்பது இந்தியாவிலுள்ள 33 சைனிக் பள்ளிகளில் ஒன்று ஆகும். இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இந்தப் பள்ளியானது இந்திய மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து உண்டு உறைவிடப் (Boarding school) பள்ளியாகும். இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கிலவழிப் பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. 

இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2018 ஆண்டு காலகட்டத்தில் அமராவதி சைனிக் பள்ளியில் 600 மாணவர்கள் பயில்கின்றனர்.

அமராவதி நகர் சைனிக் பள்ளி, சமுதாயத்தின் ஒரு பகுதியாக 16 ஜூலை 1962 இல் தொடங்கப்பட்டது. இது 1975 வரை சைனிக் பள்ளி, மெட்ராஸ் (எஸ்.எஸ்.எம்) என அழைக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாதமியில் சேர மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சைனிக் பள்ளி, உருவாக்கப்பட்டது. என்.டி.ஏ (என்.டி.ஏ இந்தியாவில் உள்ள மூன்று படைகளிலும் நுழையும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கிறது ). இந்திய கடற்படை அகாதமி (ஐ.என்.ஏ) இந்திய கடற்படைக்குள் நுழையும் கடற்படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு (அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு- AISSEE) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப் பள்ளி கல்வி வழங்கப்படுகிறது. தலைமைத்துவ திறன் கொண்ட மாணவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக ஆக பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் மட்டுமே பள்ளிக்குள் நுழைய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

இந்தப் பள்ளியில் சேர ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 6ஆம் வகுப்பில் சேர, 10இல் இருந்து 11 வயதுக்குள் இருக்க வேண்டும். 9ஆம் வகுப்பில் சேர 13- இருந்து 14 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் 9ஆம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு. இந்தப் பள்ளியில் சேர்வதற்குத் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றும், நேர்முகத் தேர்விலும் உடல் தகுதியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

இந்தப்பள்ளியில் பட்டியல் வகுப்பினருக்கு 15 விழுக்காடும் பழங்குடி வகுப்பினருக்கு 7.5 விழுக்காடும் படை வீரர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

என்.டி.ஏ-வில் சேருவது பெரும்பாலான மாணவர்களின் லட்சியமாகும். அதனால் இப் பிரிவில் பணி செய்ய விரும்பும் மாணவர்கள் இங்கு சேர்ந்து படிக்கின்றனர்.

மூன்று படைகளுக்கும் ஒரே போட்டித் தேர்வின் மூலம் என்.டி.ஏ தேர்வு இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது, அதைத் தொடர்ந்து தேர்வு வாரியம் நடத்தும் நேர்காணல் மூலமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

இப்பள்ளியின் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு திறந்த முறையில் நடத்தப்படுகிறது.

Share:

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. பொங்கல் பரிசுடன் ரூ.2000 ரொக்கம் – அரசு ஆலோசனை!

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. பொங்கல் பரிசுடன் ரூ.2000 ரொக்கம் – அரசு ஆலோசனை!


தமிழகத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை தை முதல் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான பொருள்களுடன் ரொக்கமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படாமல் இருப்பதால் அது குறித்த அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் வர இருக்கும் நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000க்கு பதிலாக ரூ.2000 வழங்கலாமா என அரசு பரிசீலித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

Share:

அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்..!!

அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்..!!

அன்னூர் அருகேயுள்ள ஆனையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு புதுமைப்பெண்  திட்டம் சார்ந்தும், குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்த  விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் மு.ச.ராஜலட்சுமி தலைமை வகித்தார்.

அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம சேவிகா A.லட்சுமி மற்றும் C.ராஜாமணி ஆகியோர் பள்ளியில் பயிலும்  பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளிடம் பேசும் போது: தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.பள்ளிப் படிப்பை நீங்கள் முடித்து கல்லூரியில் சேர வேண்டும்.பாதியில் படிப்பை நிறுத்தக் கூடாது.

இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த தொகை மாதம்தோறும் வரவு வைக்கப்படுகிறது என்றார்.

மேலும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம், பெண் குழந்தைகளுக்கு திருமண வயது முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு திருமணம் செய்யப்பட வேண்டியதன் அவசியம், கட்டாய திருமணத்தை தடுக்கும் வழிமுறைகளை மாணவிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்கள்.இந்நிகழ்ச்சியில்,பெண் குழந்தைகளுக்கான உதவி மையம் எண் 1098, பெண்களுக்கான உதவி மைய எண் 181, ஆண், பெண் மாணவர்களுக்கான உதவி மையம் எண் 14417 ஆகிய உதவி எண்களை பயன்படுத்துமாறும்கேட்டுக் கொள்ளப்பட்டது.

Share:

JEE தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை அவசியம் படியுங்கள்; நீங்கள் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்!!!

JEE தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை அவசியம் படியுங்கள்; நீங்கள் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்!!!

ஜே.இ.இ தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா? இந்த 32 பாடங்களை அவசியம் படியுங்கள்; நீங்கள் 150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து, என்.ஐ.டி.,களில் சீட் பெறலாம்.

JEE Mains 2024: தேசிய தேர்வு முகமை இந்த வாரம் கூட்டு நுழைவுத் தேர்வுகளுக்கான (JEE) முதன்மை தேர்வு 2024க்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் — http://jeemain.nta.ac.in/ இல் தொடங்கியது. இந்த பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் உள்ளது.

இந்தநிலையில், குறைவான பாடத்திட்டத்தை படித்து அதிக மதிப்பெண் பெறும் ரகசியத்தை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். அதில், ஜே.இ.இ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் 98 அத்தியாயங்கள் உள்ளன. இதில் வெறும் 32 அத்தியாயங்களை மட்டும் தெளிவாக படித்தால் 150+ அல்லது 96%க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறலாம். நீங்கள் 150+ மதிப்பெண்களை எடுத்தால், திருச்சி, வாராங்கல் உள்ளிட்ட முன்னணி என்.ஐ.டி.,களில் சீட் பெறலாம்.

இயற்பியலில் அத்தியாயம் வாரியாக எதிர்ப்பார்க்கப்படும் மதிப்பெண்கள்

Current Electricity – 6.94

Gravitation – 5.42

Magnetic Effects of Current – 4.86

Electrostatics – 4.72

Ray Optics – 4.58

Work Power Energy – 3.61

Semiconductors – 3.47

Thermodynamics – 3.47

Dual Nature of Matter – 3.47

Motion in Two Dimensions – 3.33

Electromagnetic Induction – 3.33

Motion in One Dimension – 3.19

வேதியியலில் அத்தியாயம் வாரியாக எதிர்ப்பார்க்கப்படும் மதிப்பெண்கள்

Coordination Compounds – 7.36

General Organic Chemistry – 5.69

S Block Elements – 5.28

Chemical Bonding and Molecular Structure – 4.86

Solutions – 4.31

Thermodynamics (C) – 4.17

Structure of Atom – 4.03

P Block Elements (Group 15, 16, 17, 18) – 3.75

D and F Block Elements – 3.61

Amines – 3.47

Chemical Kinetics – 3.47

கணிதத்தில் அத்தியாயம் வாரியாக எதிர்ப்பார்க்கப்படும் மதிப்பெண்கள்

Three Dimensional Geometry – 10.00

Binomial Theorem – 6.81

Sequences and Series – 6.25

Vector Algebra – 5.83

Permutation and Combination – 5.69

Functions – 5.56

Definite Integration – 4.72

Matrices – 4.17

Probability – 3.75

Share:

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 2023 - தேர்வு முடிவுகள் - செய்திக்குறிப்பு_.!

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 2023 - தேர்வு முடிவுகள் - செய்திக்குறிப்பு_.!

அரசு பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு , 07.10.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்றது . 1,27,673 மாணவ மாணவியர்கள் இத்தேர்வெழுதினர்.

இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ .1000 / வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ .10,000 / - வழங்கப்படும் . இத்தேர்வின் முடிவுகள் 01.12.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . எனவே இத்தேர்வெழுதிய மாணாக்கர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் மாணாக்கர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

Share:

04.12.2023 ( திங்கட்கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...!

04.12.2023 ( திங்கட்கிழமை ) - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...!


கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சவேரியார் பேராலய கோட்டாறு தூய திருவிழாவினை முன்னிட்டு 04.12.2023 ( திங்கட்கிழமை ) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

Share:

பொதுத்தேர்வு மாணவர் விபரம்: அப்டேட் செய்ய உத்தரவு...!

 பொதுத்தேர்வு மாணவர் விபரம்: அப்டேட் செய்ய உத்தரவு...!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் விபரங்களை, வரும், 30ம் தேதிக்குள் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 

தேர்வு நடக்கும் நாள் குறித்த விபரம் தெரிய வந்துள்ள நிலையில், தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை துவக்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக, எமிஸ் தளத்தில் தேர்வர் பெயர், பிறந்த தேதி, போட்டோ உள்ளிட்ட, 14 தகவல்களை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு, திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.எனவே, ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், உடனடியாக திருத்தம் மேற்கொண்டு, நவ., 30 க்குள் அப்டேட் செய்திட வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, விரிவான வழிகாட்டுதல்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், தேர்வுத்துறை இயக்குனரகத்தின் அறிவுறுத்தல்கள் குறித்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால், தலைமை ஆசிரியர் நேரடி கவனத்தில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Share:

8698 ஆசிரியர்கள் தேவை - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் -03.12.2023

8698 ஆசிரியர்கள் தேவை - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் -03.12.2023


8698 ஆசிரியர்கள் தேவை - தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது... வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்....

இடம் -

St.joesph college Hr.sec.School

சத்திரம் பேருந்து நிலையம் - திருச்சி -1

Interview நடைபெறும் நாள் 

03.12.2023

Contact numbers- 

82484 70862

80153 43462

86101 56109

Share:

10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு?

10, 11 மற்றும் 12ம் பொதுத்தேர்வு - வருகை பதிவுக்கு ஏற்ப மார்க் அளிக்க முடிவு?


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.

இதற்கான வழிகாட்டுதல் விதிகளை, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்களின் வருகைப்பதிவுக்கு ஏற்ப, அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பொது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, குறைந்தபட்சம், 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும். அதில், 80 சதவீதம் வரை பள்ளிக்கு வந்தவர்களுக்கு, 1 மதிப்பெண்ணும்; 80 முதல் 100 சதவீதம் வந்தவர்களுக்கு, 2 மதிப்பெண்ணும் வழங்கப்படுகின்றன.

நாட்டு நலப்பணி திட்டம், அறிவியல் மன்றம் உள்ளிட்ட, 33 மன்றங்களில், ஏதாவது, மூன்றில் பங்கேற்றவர்களுக்கு, 2 அகமதிப்பீடு வழங்கப்படும்.

தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டும், வருகைப்பதிவுக்கு அதிகபட்சம், 5 மதிப்பெண்களும், கல்வி இணை செயல்பாடுகளுக்கு, 5 மதிப்பெண்களும் வழங்கலாம். இந்த விதிகளின்படி, பள்ளிகளுக்கு நீண்டநாள் வராதவர்களுக்கு, அக மதிப்பீடு மதிப்பெண் கிடைக்காது.

Share:

ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு..!

ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு..!



தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு கற்பித்தலை முன்னெடுக்க பள்ளிகளில் கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்குவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 79,723 டேப்லெட்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் கோரப்பட்டுள்ளது. பொதுவாக மடிக்கணினி, டேப்லெட் போன்ற எண்ம சாதனங்கள் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலமாக கொள்முதல் செய்யப்படும். ஆனால், இந்தமுறை வெளி நிறுவனங்களிடம் நேரடியாக டேப்லெட்களை பள்ளிக் கல்வித் துறை கொள்முதல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த கையடக்கக் கணினியில் பாடக்குறிப்பேடுகள், எண்ணும், எழுத்தும் சாா்ந்த பயிற்சி கையேடுகள், காணொலிகள் உள்ளிட்ட கல்விசாா்அம்சங்கள் பதிவேற்றப்பட்டு ஆசிரியா்களுக்கு வழங்கப்படும். அதைக் கொண்டு குழந்தைகளுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும், இதன்மூலம் ஆசிரியா்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் முடியும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Share:

2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை..!!

2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை..!!


2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / அரசு உதவி பெறும் சென்னை பள்ளிகள் / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளின் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா தேர்வு அரையாண்டு தேர்விற்கு முன் நடைபெறவுள்ளது . 

இத்தேர்விற்கான கால அட்டவணை

One Mark Test Time Table - Download here


Share:

ITBP எல்லைக் காவல்படையில் வேலை – 248 காலியிடங்கள் || ரூ.69,100 மாத ஊதியம்!

ITBP எல்லைக் காவல்படையில் வேலை – 248 காலியிடங்கள் || ரூ.69,100 மாத ஊதியம்!

Constable (General Duty) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் இந்திய – திபெத்திய எல்லைக் காவல்படை வெளியிட்டது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 248 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • ITBP எல்லைக் காவல்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய – திபெத்திய எல்லைக் காவல்படையில் (ITBP) Constable (General Duty) பதவிக்கு என மொத்தம் 248 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு தகுதியானவர்கள் Matrix Level – 3 படி, ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத சம்பளமாக பெற உள்ளனர்.
  • Written Test, Interview, Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2023 Pdf


Share:

TNPSC- மூலம் 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் - விரைவில் வெளியாகிறது...

TNPSC- மூலம் 15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் - விரைவில் வெளியாகிறது...

 போட்டி தேர்வு அட்டவனை வெளியீடு

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு 2024ம் ஆண்டு அட்டவணை டிசம்பர் 15ல் வெளியாகிறது 

15 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.



Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support