9th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

9th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

9th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

9th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

9th Tamil

9th Tamil - 3rd Mid Term Original Question Paper  2024 -Download Here

9th English

9th English- 3rd Mid Term Original Question Paper  2024- Download Here

9th Maths

9th Maths- 3rd Mid Term Original Question Paper  2024 - Tamil Medium Download Here

9th Maths- 3rd Mid Term Original Question Paper  2024 -English Medium Download Here

9th Science

9th Science- 3rd Mid Term Original Question Paper  2024 - Tamil Medium Download Here

9th Science- 3rd Mid Term Original Question Paper  2024 -English Medium Download Here

9th Social

9th Social - 3rd Mid Term Original Question Paper  2024 -Tamil Medium  Download Here

9th Social - 3rd Mid Term Original Question Paper  2024 -English Medium Download Here

Share:

8th std - 3rd Mid Term Question Paper 2024

8th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

8th std - Third Mid Term Question Paper 2024 , Important Model

8th Tamil

8th Tamil - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

8th English

8th English - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

8th Maths

8th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

8th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

8th science

8th science - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

8th science - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium  Download Here

8th Social

8th Social - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

8th Social - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

Share:

7th std - 3rd Mid Term Question Paper 2024

7th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

7t std - Third Mid Term Question Paper 2024 , Important Model


7th Tamil

7th  Tamil - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

7th English

7th English - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

7th Maths

7th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

7th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

7th science

7th science - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

7th science - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium  Download Here

7th Social

7th Social - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

7th Social - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

Share:

தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம்..!!

தமிழ் வழி படிப்பு சான்றிதழ்; பல்கலைகளில் இனி பெறலாம்..!!

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய, 2010ல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, நேரடி நியமனத்திற்கான காலியிடங்களில், 20 சதவீதம் பணியிடங்களை, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, அந்த சட்டம் வழிவகை செய்தது.

ஒன்றாம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை, முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, சட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில், பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது உரிய அலுவலரிடமிருந்து, தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உயர் கல்வி, வேளாண், மக்கள் நல்வாழ்வு, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், சட்டத்துறை ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட கல்லுாரிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், அக்கல்லுாரிகள் ஏற்கனவே இணைவு பெற்றிருந்த, பல்கலைப் பதிவாளரிடம், தமிழ் வழியில் கல்வி கற்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.


Share:

AI இளநிலை படிப்பு சென்னை ஐஐடி -யில் ஜூலை மாதம் தொடக்கம்..!!

 AI இளநிலை படிப்பு சென்னை ஐஐடி -யில் ஜூலை மாதம் தொடக்கம்..!!

சென்னை ஐஐடியில் `வாத்வானி தரவு அறிவியல்' மற்றும் `செயற்கைநுண்ணறிவு' (ஏஐ) மையத்தை தொடங்குவதற்கான அறிமுக நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நிறுவனவளாகத்தில் நேற்று நடைபெற்றது.

சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, முதல்வர் மகேஷ் பஞ்சக்னுலா, ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக் டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில்தரவு அறிவியல் மற்றும் செயற்கைநுண்ணறிவு துறை அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த துறையின் அடுத்தகட்டவளர்ச்சிக்காக தற்போது ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக்டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, ரூ.110 கோடி நிதி அளித்திருக்கிறார்.

அடுத்து வரும் 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிலே இந்த துறை முதலிடத்திலும், உலக அளவில் முதல் 5 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு.

இதையொட்டி தரவு அறிவியல்,செயற்கை நுண்ணறிவுத் துறையில்மருத்துவம், வேளாண்மை, உற்பத்திஉள்ளிட்டவைகளில் தனி கவனம்செலுத்தி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

சென்னை ஐஐடியில் ஏற்கெனவே பி.எஸ். தரவு அறிவியல் ஆன்லைன் படிப்பில் 25 ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், உலக அளவில் முதல்முறையாக இளநிலை படிப்புகளில் பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுஎன்ற படிப்பையும் ஜூலை மாதம்தொடங்க உள்ளோம். இந்த படிப்பானது போதிய அளவு வேலை வாய்ப்பை வழங்கக் கூடியதாக இருக்கும்.

இந்தப் படிப்புக்கான மாணவர்சேர்க்கை ஜேஇஇ நுழைவுத்தேர்வுவழியாகவே நடத்தப்படும். முதல்கட்டமாக 30 இடங்களுடன் இந்த படிப்புஆரம்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, முதுநிலை எம்.டெக். தரவு அறிவியல் - செயற்கை நுண்ணறிவு படிப்பும் தொடங்கப்படும். இதற்கான மாணவர்சேர்க்கை கேட் தேர்வு மூலம் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.


Share:

நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் பிப்ரவரியில் தொடக்கம்..!!

நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் பிப்ரவரியில் தொடக்கம்..!!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, 2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை அறிவிக்க உள்ளது.


Share:

TNPSC GROUP 4 & VAO 2024 Notification – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

TNPSC GROUP 4 & VAO 2024 Notification – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!


விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2024 – 28.02.2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Group 4 தேர்வு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 6244 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே ஒவ்வொரு தலைப்பின் தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அதனை தற்போதே ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.

TNPSC-ன் கீழ் வெளியாகும் குரூப் 4 பணிக்கு மொத்தமாக 6244 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Village Administrative Officer - 108

Junior Assistant - 2442

Junior Assistant & 44

Junior Assistant - 10

Junior Assistant - 27

Junior Assistant - 49

Junior Assistant - 15

Junior Assistant - 7

Junior Assistant - 10

Typist - 1653

Typist - 3

Typist - 39

Typist - 7

Steno-Typist (Grade – III) - 441

Steno-Typist - 2 

Steno-Typist - 2

Personal Assistant to Chairman (StenoTypist II) - 1
Personal Clerk to Managing Director/General Manager (Steno Typist III) - 2

Private Secretary (Grade-III) - 4

Junior Executive (Office) - 34

Junior Executive (Typing) - 7

Receptionist cum Telephone Operator -1

Milk Recorder, Grade III - 15

Laboratory Assistant - 25

Bill Collector - 66

Senior Factory Assistant - 49

Forest Guard - 171

Forest Guard with Driving Licence - 192

Forest Watcher - 526

Forest Watcher (Tribal Youth) - 288

Junior Inspector of Cooperative Societies1

TNPSC கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேலும், Steno-Typist (Grade – III) பதவிக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC VAO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 42 (பிரிவுகளுக்கு ஏற்ப) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பதவிகளுக்கு வயது வரம்பு கிடையாது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு அவரவர் பணிக்கு ஏற்ப குறைந்த பட்சம் ரூ.16,600 முதல் அதிகபட்சம் ரூ.75,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.

TNPSC Group 4 தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வு ஆனது தமிழ் தகுதி தேர்வு மற்றும் பொதுப் படிப்பு மற்றும் திறன் மற்றும் மன திறன் தேர்வு என 3 வகைப்படும்.

TNPSC Group 4 விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ. 150/- (இது முறை செலுத்தினால் 5 வருடங்களுக்கு செல்லும்)

தேர்வுக் கட்டணம் – ரூ.100/-

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.01.2024 முதல் 28.02.2024 வரை தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Notification PDF Download

Share:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா நீங்கள் ???அப்போ இதை மறக்காம படிங்க ..!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா நீங்கள் ???அப்போ இதை மறக்காம படிங்க ..!

பொதுத்தேர்வு நெருங்கவுள்ள நிலையில், எப்படி படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம், கவனசிதறல்களை குறைப்பது எப்படி என்பது குறித்து, உளவியல் ஆலோசகர் கவிதா பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இதை பின்பற்றினாலே, முழு மதிப்பெண்கள் உறுதியாக பெறலாம்.அட்டவணை தயாரித்தல்எதையும் பிளான் பண்ணி பண்ணனும் என்கிற டயலாக்குக்கு ஏற்றாற்போல், பொதுத்தேர்வு அட்டவணை, இடைப்பட்ட நாட்கள் எத்தனை, தினசரி படிக்க வேண்டிய பாடங்கள் குறித்த அட்டவணையை முதலில் தயாரித்து கொள்ளுங்கள். அனைத்து பாடங்களிலும் குறிப்பிட்ட பகுதியாவது, தினமும் படிக்க வேண்டுமென்பதை உறுதி கொள்ளுங்கள். கடின பாடங்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்கிவிடுங்கள். ஒருமுறை எழுதி பார்ப்பது, இருமுறை படிப்பதற்கு சமம்.

ஆரோக்கிய உணவு

சுற்றுச்சூழல் மாற்றம், புதிய வகை நோய்கள் என, தினசரி மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. பருவக்கால நோய்களில் இருந்து விடுபட, உடலின் ஆரோக்கியம் கிரீன் சிக்னலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீண்ட நேரம் படிக்க முடிவெடுத்தால், அருகில் வாட்டர் பாட்டில் இருப்பது அவசியம்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். தேர்வு நெருங்குவதால், அடிக்கடி துரித உணவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இறுதிநேரத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டால், ஓராண்டு முழுவதும் படித்த படிப்பு வீணாகி விடும்.

குட்டி பிரேக் எடுக்கணும்

படிக்கும் போது எடுக்கும் குட்டி பிரேக், மூளையை இன்னும் சுறுசுறுப்பாக்கும். தேர்வு துவங்கிவிட்டால், விளையாட்டு, பொழுதுபோக்கை மூட்டை கட்டி விடுவது நல்லதல்ல. நம் மூளைக்கு எனர்ஜி கொடுப்பதே, சுறுசுறுப்பான உடல், மன இயக்கம் தான். 6-8 மணி நேர துாக்கம், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நடைப்பயிற்சி, தியானம், யோகா அல்லது பாட்டு கேட்பது, டான்ஸ் ஆடுவது என, நம்மை நாமே பிரஷ் ஆக வைத்து கொள்ள வேண்டும்.

பெற்றோரே...இது உங்களுக்கு! பெற்றோரே... உங்கள் குழந்தையை விட, அவர்கள் பெறும் மதிப்பெண்கள் பெரிதல்ல. வீட்டில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி கொடுங்கள். சத்தான உணவு சமைத்து கொடுப்பது, சிறிது நேரம் அவர்களுடன் பேசுவது, அவர்களிடம் உள்ள பயத்தை போக்கி தன்னம்பிக்கை தருவது அவசியம். டார்கெட் கொடுத்து அவர்களிடம் சுமையை ஏற்றாமல், ரிலாக்ஸாக படிக்க உதவுவதே சிறந்த பேரன்டிங்!.

Share:

பிப்ரவரியில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!!

பிப்ரவரியில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!!

பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த முழு பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தற்போது பிப்ரவரி மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களை சேர்த்து 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை காணலாம்.

  • பிப்ரவரி 4, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 10, 2024: இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 11, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 14, 2024: பசந்த பஞ்சமி காரணமாக திரிபுரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 15, 2024: Lui-Ngai-Ni காரணமாக மணிப்பூரின் வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 18, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 19, 2024: சத்ரபதி சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 20, 2024: மாநில தினம் காரணமாக மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 24, 2024: இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 25, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 26, 2024: நியோகம் காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

Share:

தமிழகத்தில் நாளை (ஜன. 30) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை (ஜன. 30) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி ஆராதனை விழா நடைபெற இருக்கும் நிலையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 177 வது ஆராதனை விழா கடந்த ஜனவரி 26ம் தேதி தொடங்கப்பட்டுள்ள நிலையில் முப்பதாம் தேதி வரையிலும் நடைமுறை இருக்கிறது. தியாகராஜ ஸ்வாமிகள் சித்தியடைந்த பஞ்சமி நாளாகிய ஜனவரி 30-ம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆராதனை விழா நடைபெற இருக்கிறது.

இந்த ஆராதனை விழாவன்று இசை கலைஞர்கள் கீர்த்தனைகளை பாடி ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். மேலும், இந்த விழா ஜனவரி 26 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆராதனை விழாவையொட்டி ஜனவரி 30 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் அறிவித்துள்ளார். 

Share:

தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு – ஆசிரியர்கள் பாடம் எடுக்க தடை!!

தமிழக அரசு பள்ளிகளுக்கு பறந்த புதிய உத்தரவு – ஆசிரியர்கள் பாடம் எடுக்க தடை!!

தமிழக அரசு பள்ளிகளில் பாடம் எடுக்க தன்னார்வலர்களை பயன்படுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு பள்ளி:

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தற்போது வரையிலும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் மட்டுமே மாணவர்களின் எண்ணிக்கை படி 13000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனை சமாளிப்பதற்காக பள்ளி நிர்வாகம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகின்றனர்.

மேலும், ஒரு சில பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களையும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், தமிழக அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே பாடல் நடத்த வேண்டும் எனவும், தன்னார்வலர்களை பாடம் நடத்த பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share:

6th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

6th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

6th std - 3rd Mid Term Question Paper 2024 , Important Model

6th Tamil

6th Tamil - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

6th English

6th English - 3rd Mid Term Original Question Paper  2024 - Download Here

6th Maths

6th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

6th Maths - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

6th science

6th science - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

6th science - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium  Download Here

6th Social

6th Social - 3rd Mid Term Model Question Paper  2024 - English Medium Download Here

6th Social - 3rd Mid Term Model Question Paper  2024 -Tamil Medium Download Here

Share:

பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளின் விடுதி உணவு கட்டணம் உயர்வு..!!

பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளின் விடுதி உணவு கட்டணம் உயர்வு..!!

இது குறித்து அவை வெளியிடுள்ள அரசாணையில் தெரிவித்து இருப்பதாவது:பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ,மாணவியர்களின் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் உயர்த்தப்பட்டு உள்ள விடுதி உணவுக்கட்டணம் அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. விடுதி உணவுக்கட்டணம் உயர்த்தி வழங்குவதால் கடந்த ஆண்டு அக்., முதல் இந்தாண்டு மார்ச் வரையில் ஏற்படும் கூடுதல் தொகையான ரூ.9 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 200ஐ வழங்கவும் அரசு ஆணையிட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Share:

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு..!!

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு தேதிகள், வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்குமுன் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப்.12 முதல் 24-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப். 12 முதல் 17-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப். 19 முதல் 24-ஆம் தேதி வரையும் செய்முறைத் தோ்வு நடத்தி முடிக்க வேண்டும்.

இதையடுத்து மாணவா்களின் செய்முறைத் தோ்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பிப்ரவரி 5 முதல் 17-ஆம் தேதிக்குள் தோ்வுத் துறை (‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n) வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவா்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூா்த்தி செய்து மாவட்ட தோ்வுத்துறை அலுவலகங்களில் சமா்பிக்க வேண்டும். தோ்வின் போது மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், தோ்வுக்கு வருகை புரியாதவா்களின் விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் பூா்த்தி செய்து வழங்க வேண்டும். தோ்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியா்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முறையாக செய்ய வேண்டும்.

இதுதவிர செய்முறை தோ்வுக்கான புறத்தோ்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியா்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான காலக்கெடு – பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான காலக்கெடு – பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!



தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு பிப்ரவரி நான்காம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பணியிடங்களை நிரப்புவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வு:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு முதன்முறையாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பிப்.4 ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த போட்டித்தேர்வின் மூலமாகவே பணியிடம் நிரப்பப்பட இருக்கிறது. இந்நிலையில், போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்காக 41,478 ஆசிரியர்கள் தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகளை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனவும், மே 1 ஆம் தேதி முதல் 31ம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டதை போல இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்புவதற்கான காலக்கெடுவினை நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

Share:

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ கடிதம்..!

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ கடிதம்..!


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக முதல்வருக்கு ஜாக்டோ- ஜியோ கடிதம் எழுதியுள்ளது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சார்பில் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-ம் ஆண்டிலும், அதன்பின் 2016-ல் அதிமுக ஆட்சி தொடர்ந்த போதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் முதல்வரான பழனிசாமி எங்கள் வாழ்வதாரங்களுக்காக நியாயமான போராட்டங்களை தொடங்கியபோது, அவற்றை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் எங்களை உதாசீனப்படுத்தினார்.

அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தீர்கள். தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது 3 ஆண்டு முடியும் தருவாயில், எங்கள் கோரிக்கைகளில் ஒன்றின் மீது கூட தாங்கள் உத்தரவிடாத நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இனிமேலும் பொறுமையாக காத்திருப்பது அர்த்தமற்றது என்று உணர்ந்து ஜாக்டோ-ஜியோ போராட்டங்களை அறிவித்துள்ளது.

Share:

அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு Jolly phonics -பயிற்சி SPD proceedings..!

அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு Jolly phonics -பயிற்சி SPD proceedings..!



Samagra Shiksha- In - service Training - to rollout II phase of English language programme using jolly phonics methodology for Primary Teachers of Government Schools - Release of funds to Districts to initiate Training at District level - regarding .

Jolly phonics in service training SPD proceedings👇

Download here

Share:

உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு..!!

உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு..!!


யுஜிசியின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம், பிரதமரின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு தேசிய உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெறுகிறது. இந்நிலையில் நடப்பாண்டு பல தகுதியுடைய மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை புதுப்பிக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து தேசிய உதவித்தொகை தளத்தில் ஆன்லைன் மூலம் உதவித்தொகை புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், அடுத்த ஆண்டிற்கு விண்ணப்பிப்பதற்காக வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களுடன் அமைச்சகத்தை அணுகி, விவரங்களை சரிபார்த்துக் கொண்டால், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

உயர்கல்வி நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகளின் மூலம் மாணவர்களிடைம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


Share:

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – அறிவிப்பு வெளியாவது எப்போது??

தமிழக பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – அறிவிப்பு வெளியாவது எப்போது??

தமிழகத்தில் குடியரசு தினத்தை ஒட்டி வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி விடுமுறை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்றும் ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜனவரி 26 குடியரசு தினத்தை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடியரசு தினம் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வரும் நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்குமா என மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால், கடந்த மாதம் முழுவதும் அதிகளவிலான விடுமுறை விடப்பட்டதாலும், பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் சனிக்கிழமை வேலை நாளாக இருக்குமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Share:

TNPSC Group 4 VAO Syllabus 2024 – Download Exam Pattern!

TNPSC Group 4 VAO Syllabus 2024 – Download Exam Pattern!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2024ம் ஆண்டில் நடத்தப்பட உள்ள TNPSC Group 4 தேர்வுக்கான பாடக்குறிப்பு (Syllabus) குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNPSC Group 4 தேர்வு விவரங்கள்:

தமிழக அரசு அலுவலகங்களில் Village Administrative Officer (VAO), Junior Assistant (Non-Security & Security), Bill Collector, Grade-I, Field Surveyor, Draftsman, Typist, Steno-Typist ( Grade III) போன்ற பல்வேறு பணிகளுக்கென ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC Group 4 தேர்வு மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள TNPSC Group தேர்வுக்கான அறிவிப்பானது இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தேர்வுக்கென சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு எளிமையாக தயார் படுத்திக்கொள்ள பின்வரும் பாடக்குறிப்பை (Syllabus) பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்

TNPSC Group 4 2024 தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு (Objective Type Method)
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • நேர்காணல்


TNPSC Group 4 2024 எழுத்து தேர்வு விவரங்கள்:

TNPSC Group 4 2024 தேர்வின் முதல் கட்டமான எழுத்துத் தேர்வானது சுமார் 03 மணி நேரம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறவுள்ளது.


இத்தேர்வு ஆனது Part A, Part B என இரண்டு சுற்றுகளாக கொள்குறிவகைத் தேர்வு (Objective Type Method) முறைப்படி நடத்தப்படும்.


இந்த தேர்வில் மொத்தமாக 200 வினாக்கள் இடம்பெறும்.


மேலும் இத்தேர்வின் போது அளிக்கப்படும் தவறான விடைக்கு மதிப்பெண்கள் ஏதும் குறைக்கப்படமாட்டாது.


300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் தேர்வர்கள் 90 மதிப்பெண்கள் பெற்றால் போதும் தேர்ச்சி பெற்றவராக கருதப்படுவார்கள். இருப்பினும் தேர்வர்கள் Cut Off Mark அடிப்படையிலே பணியமர்த்தப்படுவார்கள்.

TNPSC Group 4 2024 தேர்வின் வினாக்கள்:

இத்தேர்வில் கேட்கப்படும் 200 வினாக்கள் பின்வரும் முறைப்படி பிரிக்கப்படும்

கொள்குறிவகை வினா (Objective Type Method)

தமிழ் தகுதித் தேர்வு100 வினாக்கள்1503 மணி நேரம்90பொதுத் தேர்வு75 வினாக்கள்150திறன் மற்றும் மன திறன் தேர்வு25 வினாக்கள்மொத்தம்200300

TNPSC Group 4 2024 பாடத்திட்டம் பகுதி வாரியாக:

இந்த TNPSC Group 4 2024 தேர்வுக்கான பாடத்திட்டம் ஆனது பின்வரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தமிழ்:

i.இலக்கணம் / Grammer:

  • பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
  • புகழ் பெற்ற நூல் நாலாசிரியர்
  • தொடரும் தொடர்பும் அறிதல்
  • பிரித்தெழுதுக
  • சேர்த்தெழுதுக
  • எதிர்ச்சொல்
  • பொருந்தாச் சொல்
  • பிழை திருத்தம்
  • மொழிபெயர்ப்பு
  • ஓரெழுத்து ஒருமொழி
  • வேர்ச்சொல்
  • வினைமுற்று
  • வினையெச்சம்
  • வினையாலணையும் பெயர்
  • தொழிற் பெயர்
  • இலக்கணக் குறிப்பறிதல்
  • தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை
  • எதுகை, மோனை, இயைபு

ii.இலக்கியம் / Literature:

  • திருக்குறள்
  • அறநூல்கள்
  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
  • கம்பராமாயணம்
  • ஐம்பெரும் காப்பியங்கள்
  • ஐஞ்சிறுங் காப்பியங்கள்
  • பக்தி இலக்கியங்கள்
  • சிற்றிலக்கியங்கள்
  • சித்தர் பாடல்கள்
  • சமய முன்னோடிகள்

iii.தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் / Author & Literary Work:

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • நாமக்கல் கவிஞர்
  • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  • மரபுக்கவிதை
  • புதுக் கவிதை
  • கடித இலக்கியம்
  • நாட்குறிப்பு
  • நாடகக்கலை & இசைக்கலை
  • தமிழில் சிறுகதைகள்
  • கலைகள் (சிற்பம், ஓவியம்)
  • உரைநடை
  • பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர்
  • தமிழகம் – ஊரும் பேரும்
  • தமிழ் மகளிரின் சிறப்பு
  • தமிழ் மொழியல் அறிவியல் சிந்தனைகள்
  • தமிழர் வணிகம்
  • தமிழ் மகளிரின் சிறப்பு
  • உணவே மருந்து
  • சமயப் பொதுமை

2.பொது அறிவியல் / General Science:

  • Nature of Universe
  • Measurement of Physical Quantities
  • General Scientific Laws in Motion
  • Force, Pressure and Energy
  • Everyday application of the basic principles of Mechanics
  • Electricity, Magnetism, Light, Sound, Heat and Nuclear Physics in our daily life
  • Elements and Compounds
  • Acids, Bases, Salts
  • Petroleum Products
  • Fertilizers
  • Pesticides
  • Metallurgy
  • Food Adulterants
  • Main concepts of Life Science
  • Classification of living organisms
  • Evolution
  • Genetics
  • Physiology
  • Nutrition
  • Health and Hygiene
  • Human diseases
  • Environmental Science

3.நடப்பு நிகழ்வுகள் / Current Affairs:

  • Latest diary of events
  • National symbols
  • Profile of states
  • Eminent personalities and places in the News
  • Sports News
  • Books and Authors
  • Welfare Scheme of Government
  • Political parties
  • Political system in Tamil Nadu and India
  • Latest inventions in Science and Technology
  • Geographical Land Marks
  • Current Socio – Economic issues

4.புவியியல் / Geography:

  • Earth Location
  • Physical Features
  • Monsoon, rainfall, weather and climate
  • Water resources
  • Rivers
  • Soil, Minerals
  • Natural resources
  • Forest and Wildlife
  • Agriculture pattern
  • Transport
  • Communication
  • Population density and distribution in Tamil Nadu and India
  • Calamities
  • Disaster Management
  • Environment
  • Climate change

5.இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு / History And Culture Of India:

  • Indus Valley Civilization
  • Guptas
  • Delhi Sultans
  • Mughals
  • Marathas
  • South Indian History
  • Characteristics of Indian Culture
  • Unity in Diversity
  • Race
  • Language
  • India as a Secular State

6.இந்திய ஆட்சியியல் / Politics:

  • Constitution of India
  • Preamble to the Constitution
  • Salient Features of the Constitution
  • Union, State, and Union Territory.
  • Citizenship
  • Fundamental Rights
  • Fundamental Duties
  • Directive Principles of State Policy
  • Union Executive
  • Union Legislature
  • State Executive
  • State Legislature
  • Local Governments
  • Panchayat Raj
  • Centre – State Relationships
  • Election
  • Judiciary in India
  • Rule of Law
  • Corruption in public life
  • Anti-Corruption measures
  • Lokpal and Lokayukta
  • Right to Information
  • Empowerment of Women
  • Consumer Protection Forums
  • Human Rights Charter

7.இந்திய தேசிய இயக்கம் / Indian National Movement:

  • National Renaissance
  • An early uprising against British Rule
  • Indian National Congress
  • Emergence of Leaders
  • B.R.Ambedkar
  • Bhagat Singh
  • Bharathiar
  • V.O.Chidambaranar
  • Thanthai Periyar
  • Jawaharlal Nehru
  • Rabindranath Tagore
  • Kamarajar
  • Mahatma Gandhi
  • Maulana Abul Kalam Azad
  • Rajaji
  • Subhash Chandra Bose
  • Muthulaksmi Ammaiyar
  • Muvalur Ramamirtham and other National Leaders
  • Different modes of Agitation in Tamil Nadu and movements

8.இந்தியப் பொருளாதாரம் / Indian Economy:

  • Nature of Indian economy
  • Five – year Plan Models
  • Planning Commission and Niti Ayog
  • Sources of revenue
  • Reserve Bank of India
  • Finance Commission
  • Resource sharing between Union and State Governments
  • Goods and Services Tax
  • Employment Generation
  • Land Reforms and Agriculture
  • Application of Science and Technology in Agriculture
  • Industrial growth
  • Rural Welfare programs
  • Social Problems
  • Population
  • Education

9.Unit 8 (தமிழ்நாட்டின் வரலாறு / பண்பாடு / மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்):

  • History of Tamil Society
  • Archaeological Discoveries,
  • Tamil Literature from the Sangam age
  • Role of Tamil Nadu in freedom struggle
  • Early agitations against British Rule
  • Role of women in freedom struggle
  • Various Social reformers
  • Social reform movements and Social transformation of Tamil Nadu

10.தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் / Development Administration in Tamil Nadu:

  • Social Justice
  • Social Harmony as the Cornerstones of Socio-Economic Development.
  • Education and Health Systems in Tamil Nadu
  • Geography of Tamil Nadu and its impact on Economic growth

11.திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் / Aptitude And Mental Ability:

  • Simplification
  • Percentage
  • Highest Common Factor (HCF)
  • Lowest Common Multiple (LCM)
  • Ratio and Proportion
  • Simple Interest
  • Compound Interest
  • Area & Volume
  • Time and Work
  • Logical Reasoning
  • Puzzles & Dice
  • Visual Reasoning
  • Alpha Numeric Reasoning
  • Number Series






Share:

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜன. 27 வரை விடுமுறை – வெளியான முக்கிய உத்தரவு!

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜன. 27 வரை விடுமுறை – வெளியான முக்கிய உத்தரவு!



இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை


இந்தியாவில் கடந்த மாதம் முதல் பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதனை தொடர்ந்து குளிர் காலம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சண்டிகர் மற்றும் ஜம்மு காஸ்மீர் மாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் மூடுபனி நிலவி வருகிறது. அதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் குளிர் குறையாத நிலையில் 5 ஆம் வகுப்பு வரை விடுமுறை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன் படி சண்டிகர் மாநிலத்தில் ஜன. 28 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறையை நீட்டிப்பது குறித்து கல்வித்துறை இன்னும் முடிவு செய்யவில்லை. அதே போல ஜம்மு அரசும் குளிர் காரணமாக விடுமுறையை ஜன.27 வரை நீட்டித்துள்ளது.  அதன் படி 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஜனவரி 22 முதல் 27 வரை விடுமுறை எனவும் குடியரசு தின நிகழ்ச்சி ஒத்திகையில் மாணவர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

NMMS - தேசிய திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்..!!

 NMMS - தேசிய திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்..!!

தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஜன 31., வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர்வதற்கு ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

என்.எம்.எம்.எஸ் எனப்படும் தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் மேல்நிலை படிப்பு முடிக்கும் வரை, ஒன்பதாம் வகுப்பு முதல் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான தேர்வு பிப்., மாதம் நடக்கிறது. 

பள்ளிகளில் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது




Share:

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 2025 முதல் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்..!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 2025 முதல் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்..!!

வரும் 2024 - 25ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 2025ஆம் ஆண்டு பத்து மற்றம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், இரண்டு பொதுத் தேர்வுகளை எழுதும் முதல் தொகுதி மாணவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு அழுத்தத்தைப் போக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆண்டுக்கு ஒரே தேர்வு என்பதால், இந்த அழுத்தம் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், முதல் பொதுத்தேர்வில் ஒரு மாணவர் நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று உறுதியாக இருந்தால், அவர் இரண்டாம் பொதுத்தேர்வை எழுதுவதிலிலுருந்து விலக்கும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2023ஆம் ஆண்டில் உதயமானது. இது குறித்து மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு நேர்காணலில், 2024 - 25ஆம் கல்வியாண்டு முதல் ஒரு கல்வியாண்டில் இரண்டு தேர்வுகள் நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒருவர், முதல் பொதுத் தேர்வை நன்கு எழுத முடியும் என்று முடிவெடுத்தால், அவர் இரண்டாவது பொதுத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்குப் பெறலாம் என்றும், இரண்டுத் தேர்வுகளும் கட்டாயமாக்கப்படாது என்றும் அப்போது பிரதான் தெரிவித்திருந்தார்.

அதாவது, முதல் பொதுத்தேர்வு 2024ல் நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பொதுத் தேர்வு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறும் என்றும், இவ்விரண்டு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எதில் கிடைக்கிறதோ, அதை இறுதித் தேர்வாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது


Share:

16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை!

 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை!

இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

 நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகள் போன்ற இலக்கில் வெற்றி பெற, படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்கள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சியை துவங்கி விடுகின்றனர்.இதனால், தங்களின் பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல், பயிற்சியிலும் கவனம் செலுத்த முடியாமல் திணறுவதுடன், தேர்வுகள் குறித்த பயம் தொற்றிவிடுகிறது. இதனால் மாணவர்கள் விபரீதமான முடிவுகளும் சில நேரங்களில் எடுத்து விடுகின்றனர்.


இதனை கட்டுப்படுத்த கோச்சிங் சென்டர்களை சீர்படுத்தி கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம், இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.பட்டப்படிப்பைக் காட்டிலும் குறைவான தகுதியைக் கொண்ட ஆசிரியர்களை கோச்சிங் சென்டரில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்த பின்னரே, 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.


Share:

காலிப்பணியிடங்களை நிரப்ப 824 பேர் தேர்வு’ - டிஎன்பிஎஸ்சி..!!

காலிப்பணியிடங்களை நிரப்ப 824 பேர் தேர்வு’ - டிஎன்பிஎஸ்சி..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப 824 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தரராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த டிசம்பர் 2023 முதல் தற்பொழுது வரையிலான காலத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கு 675 நபர்களும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல் அலுவலர் நிலை நான்கு பதவிக்கு 65 நபர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


Share:

பள்ளி நேரம் மாற்றம் – ஜன. 25 வரை அமல்.. கடும் குளிர் எதிரொலி!

பள்ளி நேரம் மாற்றம் – ஜன. 25 வரை அமல்.. கடும் குளிர் எதிரொலி!


ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவும் கடும் பனி காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட நேர கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

பள்ளி நேர மாற்றம்:

இந்தியாவில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, உத்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உறைய வைக்கும் அளவிற்கு குளிர் நிலவு வருகிறது. இந்த பனி மூட்டத்தால் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த கால நிலையில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் குளிர் காரணமாக பள்ளிகளில் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கல்வி துறையின் உத்தரவுப்படி மழலையர் பள்ளிகள் மற்றும் 1 – 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி வரை இந்த நேரம் மாற்றம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

தமிழகத்தில் முதுநிலை அரசு டாக்டர்களுக்கு ரூ.9000 ஊக்கத்தொகை – அரசு உறுதி!

 தமிழகத்தில் முதுநிலை அரசு டாக்டர்களுக்கு ரூ.9000 ஊக்கத்தொகை – அரசு உறுதி!



தமிழகத்தில் முதுநிலை அரசு டாக்டர்களுக்கு மாதந்தோறும் ரூ.9000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

டாக்டர் ஊக்கத்தொகை

தமிழகத்தில் அரசு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து, சென்னையில் நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் அனைத்து முதுநிலை டாக்டர்களுக்கும், ஒரே மாதிரியான ஊக்கத்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும், அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். மேலும், அரசாணை 293ன்படி, முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கு ரூ.5000, ரூ.9000 என இரு வகைகளாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து முதுநிலை பட்டப்படிப்பு டாக்டர்களுக்கும் ஒரே மாதியாக ரூ9,000 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக, டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Share:

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Associate பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 29.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறவும்.

அண்ணா பல்கலைக்கழகம் காலியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Project Associate பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி:

Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் UG, Post Graduate Degree, M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Project Associate வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Project Associate மாத ஊதியம்:

இந்த அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Project Associate தேர்வு செய்யும் விதம்:

Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் dircgc@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.01.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Share:

தமிழகத்திற்கும் ஜன.22 பொது விடுமுறை? – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!!

தமிழகத்திற்கும் ஜன.22 பொது விடுமுறை? – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!!



தமிழகத்தில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகுமா என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பொது விடுமுறை:

ஜனவரி 22ஆம் தேதி அன்று உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவிற்கு தலைமை தாங்கி நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. 22 ஆம் தேதி அன்று சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு காரணமாக பொதுமக்களுக்கு அன்றைய தினம் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திற்கும் அரை நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது

இதை தவிர உத்தரபிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மொரிசியஸ் அரசு ஊழியர்களுக்கு இதற்காக 2 மணி நேரம் அனுமதி வழங்கியுள்ளது. இதே போல், தமிழகத்திலும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்குமா என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!


ஜனவரி 20ஆம் தேதி (நாளை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

ஜனவரி மாதம் தொடங்கியது முதல் பள்ளி மாணவர்களுக்கு ஒரே குஷி ஆக இருந்து வருகிறது. நடப்பாண்டு பொங்கல் பண்டிகை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஜனவரி 20 ம் தேதி சனிக்கிழமை அன்று பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு வேலை நாள் ஆகும். ஆனால் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு நாளை பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் நடத்தப்படுகிறது.

இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 3ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Share:

2,000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா நிறுவ திட்டம்..!!

2,000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா நிறுவ திட்டம்..!!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், மாநிலம், 35,000க்கும் அதிகமான, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.

 இவற்றில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளில் ஏற்கனவே, ஹைடெக் ஆய்வகம், உயர்தர அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்த, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்காக, முதற்கட்டமாக, 2,000 பள்ளிகளில் கேமராக்களும், பிராட்பேண்ட் இணைப்புகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, 1,646 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகள், கேமராக்கள் பொருத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த பள்ளிகளில், ஜூன் மாதத்துக்குள் கேமராக்கள் பொருத்தி, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.வளாகங்களில் ஏற்படும் நிகழ்வுகள், பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்வோர், ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை கண்காணிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு கேமரா பொருத்தும் ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

டிப்ளமா, தட்டச்சு பாடத்திட்டம் மாற்றம்..!

டிப்ளமா, தட்டச்சு பாடத்திட்டம் மாற்றம்..!!

வரும் கல்வி ஆண்டு முதல், டிப்ளமா மற்றும் தட்டச்சு படிப்புக்கு, புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகள், இன்ஜினியரிங் படிப்புகள் போன்றவற்றுக்கு, திறன்சார் கல்விக்கு ஏற்ப, பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. 

தன்னாட்சி கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களை புதுப்பித்துக் கொள்ள, பல்கலைகள் சார்பில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.தன்னாட்சி அல்லாத கல்லுாரிகளுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைகள் மற்றும் உயர்கல்வித்துறை சார்பில், பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 

இதன்படி, டிப்ளமா இன்ஜினியரிங் மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படிப்புகளை நடத்தும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், பாடத்திட்டங்களை புதுப்பித்து வருகின்றன.டிப்ளமா படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, தற்கால வளர்ச்சிக்கேற்ப, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தரவு தொழில்நுட்பம், இன்ஜினியரிங்கில் ரோபாட்டிக் முறையின் பயன்பாடு போன்றவை அதில் இடம் பெறஉள்ளன.இதற்கான பணிகள்நடந்து வருவதாக, தொழில்நுட்ப கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம், தட்டச்சு பயிற்சிக்கான புதிய பாடத் திட்டம், 15 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டு உள்ளது.


இந்த புதிய பாடத்திட்டம், அடுத்த மாதம் நடத்தப்படும் தேர்வுகளில் அமலாகிறது.புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளின்படி, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தட்டச்சு பயிற்சியில் சேர நுழைவு தேர்வு எழுத முடியும். ஏற்கனவே, ஆறாம் வகுப்பு முடித்தவர்கள் தட்டச்சு பயிற்சி நுழைவு தேர்வு எழுதும் திட்டம் நடைமுறையில் உள்ளது.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், நுழைவு தேர்வு இன்றி, நேரடியாக இளநிலை தட்டச்சு படிப்பில் சேரலாம். தட்டச்சு முதுநிலை இரண்டாம் தாளில், அரசாணைகள், தொழில் முறை மற்றும் வணிக கடிதங்கள் நீக்கப்பட்டுள்ளன.அதற்கு பதில், சட்ட நடவடிக்கைகள், சுய விபர குறிப்பு, அலுவல் சார் கடிதங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Share:

பிஎச்.டி., மாணவர் சேர்க்கை அறிவிப்பு..!!

பிஎச்.டி., மாணவர் சேர்க்கை அறிவிப்பு..!!

பயோகெமிஸ்ட்ரி, பயோடெக், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், மேனேஜ்மெண்ட், தமிழ் உட்பட பல்வேறு பிரிவுகளில் 21 கல்லூரிகளில் 311 சேர்க்கை இடங்கள் உள்ளன.

தேர்வு செய்யப்படும் முறை: 

பிஎச்.டி., படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 20

மேலும் விபரங்களுக்கு: www.tvu.edu.in

Share:

நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாள் - எந்த மாவட்டத்துக்கு?

நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாள் - எந்த மாவட்டத்துக்கு?

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு : வரையான அனைத்து வகையான பள்ளிகளுக்கும் , வருகை நாட்களை ஈடுசெய்யும் விதமாக நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.




Share:

5 & 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு – தமிழக அரசு எதிர்ப்பு!!

5 & 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு – தமிழக அரசு எதிர்ப்பு!!



மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வினை அறிமுகம் செய்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு:

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வை அறிமுகம் செய்து பல உயிர்களை காவு வாங்குவதை போல புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வருகிறார்கள் என அறிவித்துள்ளார். மேலும், தொடக்க, நடுநிலைப் பள்ளி அளவில் பொதுத்தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. ஆனால், கல்வியை குழந்தைகள் படிக்க கூடாது என்பதற்காகவே இதுபோன்ற கல்வி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support