11ஆம் மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து? என்பது தவறான தகவல் என அறிவிப்பு!


தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளில் கிட்டத்தட்ட 50,000 மாணவர்கள் வரை தேர்வு எழுதவில்லை என கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இனி வரும் காலங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்பு என தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வருவதால் சோர்வடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகி உள்ளனர் என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்து வருகின்றனர்.எனவே முன்பு போல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்த வேண்டும். 11ஆம் மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக கல்வித்துறை அறிவிப்புக்காக மாணவர்கள் உட்பட பெற்றோர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பது பொய்யான தகவல் எனவும் ரத்து செய்வது குறித்து எந்த வித ஆலோசனையும் நடத்தப்படவில்லை வதந்திகளை யாரும் நம்பி குழப்பமடைய வேண்டாம் எனவும் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments