உதவித்தொகைக்கு பிரத்யேக இணையதளம்!

உதவித்தொகைக்கு பிரத்யேக இணையதளம்!

தமிழ்நாடு முழுதிலும் உள்ள மாணவர்களின் உதவித்தொகை விண்ணப்பங்களை விரைவாகவும், திறம்படவும் பரிசீலிக்க உதவும் இந்த இணையதளம், வெளிப்படைத்தன்மையுடன் எளிதாகவும், நேரடியாகவும் மாணவர்களின் கணக்கில் நிதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்தல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு உதவித்தொகை திட்டங்களுக்கான பொதுவான தொழில்நுட்ப வசதியை வழங்குதல் போன்ற முக்கிய பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

பயன்கள்

அனைத்து உதவித்தொகை தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்* அனைத்து உதவித்தொகைகளுக்கும் ஒரே ஒருங்கிணைந்த விண்ணப்பம்* ஒரு மாணவர் தகுதியுள்ள திட்டங்களை கணினியே பரிந்துரைக்கிறது அகில இந்திய அளவில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் படிப்புகளுக்கான தகவல்களை வழங்குகிறது உதவித்தொகை விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும், கண்காணிக்க வசதியாக விரிவான எம்.ஐ.எஸ்., அமைப்பை கொண்டுள்ளது.

உதவித்தொகை திட்டங்கள்:

மத்திய அரசின் துறை மற்றும் அமைச்சகம் வாரியாக உதவித்தொகை திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமரின் பல்வேறு உதவித்தொகை திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, சிறுபான்மையினருக்கான உதவித்தொகை, யு.ஜி.சி.,/ஏ.ஐ.சி.டி.இ., உதவித்தொகை திட்டங்கள், மாநில அரசுகளின் உதவித்தொகை திட்டங்கள் என ஏராளமானவற்றிற்கு இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக், மீன்ஸ்-கம்-மெரிட் போன்ற பிரபலமான உதவித்தொகை திட்டங்களில் பயன்பெறவும் இந்த இணையதளம் உதவிகிறது.

விண்ணப்பிக்கும் முறை: 

இணையதளத்தில் கேட்கப்படும் தகவல்களை அளித்து, ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கான கணக்கை இலவசமாக துவங்கலாம். அதனை தொடர்ந்து, தகுதியுள்ள உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

தற்போது பிரதமரின் உதவித்தொகை, மீன்ஸ்-கம்-மெரிட் உட்பட சில முக்கிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

டிசம்பர் 31

விபரங்களுக்கு: 

https://scholarships.gov.in/

Share:

6 ஆம் வகுப்பு முதல் +2 மாணவர்களுக்கு அறிவிப்பு..!!

6 ஆம் வகுப்பு முதல் +2 மாணவர்களுக்கு அறிவிப்பு..!!

6 ஆம் வகுப்பு முதல் +2  மாணவர்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கனமழையால். நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்பட பல  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, +1,  +2 வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 11 வரை, 6-முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜன.4 முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது.


Share:

எம்.பில். படிப்பு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு கிடையாது - பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை..!!

எம்.பில். படிப்பு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு கிடையாது - பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை..!!

புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எம்.பில். படிப்பை முடித்தவா்கள் கல்லூரியில் பாடம் நடத்தத் தகுதி உடையவா்களாக முன்பு பாா்க்கப்பட்டு வந்தது. இதனால், பெரும்பாலான மாணவா்கள் இளநிலை, முதுநிலை படிப்பை முடித்து, எம்.பில். படிப்பைத் தோ்வு செய்து வந்தனர். இந்த நிலையில் கற்பித்தல் பணிக்கு எம்.பில். படிப்பு தகுதியானது இல்லை, எம்.பில். படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாகக் குறிப்பிட முடியாது என்று கூறி 2022-23 -ம் ஆண்டு கல்வி ஆண்டில் இருந்து எம்.பில். படிப்பு முழுவதுமாக நீக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணையாக வெளியிடப்பட்டது.

இதனை பொருட்படுத்தாமல் சில கல்வி நிறுவனங்கள் எம்.பில். படிப்பில் மாணவர்களை சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எம்.பில். பட்டமானது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டம் கிடையாது என கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டி காட்டி பல்கலைக்கழக மானியக்குழு மீண்டும் அறிவித்துள்ளது. அதன்படி புதிய கல்வி ஆண்டில் எம்.பில். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.




Share:

விஜயகாந்துக்கு திடீரென என்ன நடந்தது? மருத்துவமனை சொன்ன விளக்கம்!

விஜயகாந்துக்கு திடீரென என்ன நடந்தது? மருத்துவமனை சொன்ன விளக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 1 மாத சிகிச்சைக்கு பிறகு இந்த மாதம் 12ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொடர்ந்து நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை தான் என தேமுதிக அறிவித்திருந்த நிலையில், இன்று திடீரென அவரின் உடலில் பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிறுது நேரத்திலேயே அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ பணியாளர்கள் மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் இன்று காலமானார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே அவருக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருந்த நிலையில், மேலும் இந்த நுரையீரல் அழற்சியால் சுவாச பிரச்சனை ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறிய விஜயகாந்த் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி சிறுது நேரத்திலேயே காலமானார்.

Share:

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தேதி மாற்றம்..!!

 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தேதி மாற்றம்..!!

பட்டதாரி ஆசிரியர்கள் , வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற இருந்தது.

மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக தேர்வு தேதி மாற்றப்படுவதாக அறிவிப்பு

 2022 காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிப் .4 ல் , போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

Share:

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!


தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச.27 (இன்று) முதல்‌ ஜன.10-ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவைமையங்களுக்கு சென்று இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறுபவர்கள், ஜன. 11, 12-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 11, 12-ம் வகுப்புக்கு ரூ.1000, பத்தாம்‌ வகுப்புக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கூடுதல் தகவல்களை www.dge.in.gov.in என்ற இணையதளத்தில்‌ அறிந்துகொள்ளலாம்.


Share:

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு – காவல்துறை அதிரடி!

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு – காவல்துறை அதிரடி!



புத்தாண்டு பண்டிகையை ஒட்டி சென்னையில் கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து சென்னை காவல்துறை அதிரடி உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்:

புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் விடிய விடிய இளைஞர்கள் பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். இது போன்ற கொண்டாட்டங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் சென்னை காவல்துறை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், சென்னை நகர் முழுவதும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதாகவும், 400 இடங்களில் வாகன தணிக்கைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் அருகிலோ அதற்கு மேலோ மேடை அமைக்க கூடாது. பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண் பாதுகாவலர்களையும் நியமிக்க வேண்டும். பைக் ரேஸ் போன்றவை நடைபெறுவதை தவிர்ப்பதற்கு 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

jio net work mobile Recharge new year offer..!!

 jio net work mobile Recharge new year offer..!!

புத்தாண்டை முன்னிட்டு 1 வருடத்திற்கு ரீசார்ஜ் செய்யும் < 2999 Plan -னுக்கான Validity -ஐ நீட்டித்தது ஜியோ ! 365 நாட்களுக்கு பதிலாக 389 நாட்களுக்கு Plan நீட்டிப்பு ஒரு நாளைக்கு 2.5 GB டேட்டாவை பயனர்கள் பெறலாம்.



Share:

பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஒத்தி வைப்பா??

பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஒத்தி வைப்பா??

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை கேட்ட பிறகு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்பு பயிற்சி முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இன்று காலை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாதிய தீண்டாமை இருக்கிறது என்பது தொடர்பான சர்வே வெளியிட்டு இருக்கிறார்கள். அது தொடர்பாக ஆய்வு நாங்களும் ஆய்வு செய்வோம். அவர்கள் கூறுவதுபோல தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இல்லை.

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சான்றிதழ்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி 7ல் நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக முதல்வரின் ஆலோசனை கேட்கப்படும். 

இரண்டு லட்சம்பேர் பங்கேற்ற முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகணினி வழியில் நடத்தியதில் 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வை பழைய முறையில் நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும்.

மழை பாதித்த நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடக்கவில்லை.விடுபட்ட அந்த தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்படும். பள்ளிக் கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இன்று தமிழக முதல்வர் 1000 வகுப்பறைகளை தொடங்கி வைத்தார். ஜனவரியில் 1200 வகுப்பறைகள் திறந்து வைக்க இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Share:

CBSE - 10-ம் வகுப்பு தேர்வு; கணிதம், இயற்பியல், வேதியியலில் முக்கிய தலைப்புகள் இங்கே..!!

CBSE - 10-ம் வகுப்பு தேர்வு; கணிதம், இயற்பியல், வேதியியலில் முக்கிய தலைப்புகள் இங்கே..!!

வாரியத் தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கும் என்று சி.பி.எஸ்.இ (CBSE) அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான தலைப்புகளின் முழுமையான பட்டியல் இங்கே.

பாடம் வாரியாக முக்கியமான தலைப்புகள்

கணிதம்

கணிதம் என்பது துல்லியமான மற்றும் பயிற்சியின் விளையாட்டாகும், அங்கு சில அத்தியாயங்கள் மதிப்பெண்களின் புதையலுக்கு திறவுகோலாக இருக்கும். இயல் எண்கள், பல்லுறுப்புக்கோவைகள் மற்றும் இருபடி சமன்பாடுகள் போன்ற அத்தியாயங்கள் முக்கியமானவை, ஏனெனில் அவை உயர் கணிதக் கருத்துகளின் முதுகெலும்பாக அமைகின்றன. இதேபோல், முக்கோணங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு வடிவவியலைப் புரிந்துகொள்வது அவற்றின் வெயிட்டேஜ் மற்றும் சிக்கலான கணக்குகளில் அவற்றின் பயன்பாடு காரணமாக கணிசமான வித்தியாசத்தை ஏற்படுத்தும். எண்கணித முன்னேற்றம் மற்றும் முக்கோணவியல் ஆகியவற்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது ஒரு நல்ல மதிப்பெண்ணுக்கும் சிறந்த மதிப்பெண்ணுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். மாணவர்கள் மேற்பரப்பு பகுதிகள் மற்றும் தொகுதிகளின் முக்கியத்துவத்தை கவனிக்க மறக்கக்கூடாது, அதே போல் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு, இவை பெரும்பாலும் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதிகளாகக் காணப்படுகின்றன.
வேதியியல்

வேதியியல் பெரும்பாலும் 'மத்திய அறிவியல்' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இயற்பியலை உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பிற இயற்கை அறிவியல்களுடன் இணைக்கிறது. சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில், வேதிவினைகள் மற்றும் சமன்பாடுகள் மற்றும் அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் ஆகியவை பெரும்பாலும் அதிக மதிப்பெண்களைக் கொண்ட அத்தியாயங்களாகும். உலோகங்கள் மற்றும் உலோகங்கள் அல்லாதவை, கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், ஆகியவை நன்கு புரிந்து கொண்டு மதிப்பெண் பெறும் கருத்தியல் கேள்விகளால் நிரம்பியுள்ளன. தனிமங்களின் தனிம வரிசை அட்டவணை வாரியத் தேர்வுகளுக்கு ஒரு முக்கியமான அத்தியாயமாக நிற்கிறது, மேலும் எதிர்கால வேதியியல் படிப்புகளுக்கான களத்தையும் அமைக்கிறது.

இயற்பியல்

10 ஆம் வகுப்பில், இயற்பியல் என்பது பிரபஞ்சத்தின் தன்மையை நடைமுறை அணுகுமுறையுடன் புரிந்துகொள்வதாகும். ஒளி - பிரதிபலிப்பு மற்றும் ஒளிவிலகல், மற்றும் மனிதக் கண் மற்றும் வண்ணமயமான உலகம் ஆகியவை வரைபடங்கள் மற்றும் எண்ணியல் கேள்விகளால் நிரம்பிய அத்தியாயங்கள், அவை நன்கு பயிற்சி செய்தால், ஒருவரின் மதிப்பெண்களை கணிசமாக அதிகரிக்க முடியும். மின்சாரம் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் அதிக மதிப்பெண்களை அளிப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் நிகழ்வுகளை விளக்குவதால் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இவற்றில் தேர்ச்சி பெற்றால், மதிப்பீட்டின் போது ஒரு மாணவர் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.

பாடப் புத்தகங்களின் வியூகம்

இந்த அத்தியாயங்களைப் பயன்படுத்திக் கொள்ள, மாணவர்கள் தங்கள் தயாரிப்பில் புத்தக உதவிகளை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்வு முறை மற்றும் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளின் வகையைப் புரிந்துகொள்ள மாதிரித் தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை விடாமுயற்சியுடன் பயிற்சி செய்ய வேண்டும். நேர நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், தேர்வுச் சூழலின் அழுத்தத்திற்குப் பழகுவதற்கும் மாதிரித் தேர்வுகள் முக்கியமானவை.

வழிகாட்டிகள் மற்றும் குறிப்புகள் நியாயமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். வழிகாட்டிகள் பரந்த பாடத்திட்டத்தின் மூலம் ஒரு தீர்க்கமான பாதையை வழங்கும் அதே வேளையில், தனிப்பட்ட குறிப்புகள் விரைவான குறிப்புகளாக செயல்படலாம் மற்றும் கடைசி நிமிட திருப்புதல்களுக்கு உதவலாம். வீடியோ டுடோரியல்கள், குறிப்பாக இயற்பியல் மற்றும் வேதியியலில் உள்ள சிக்கலான கருத்துக்களுக்கு, வித்தியாசமான கண்ணோட்டத்தை வழங்குவதோடு சிறந்த புரிதலுக்கு உதவும்.

நிலைத்தன்மை மற்றும் புரிதலின் பங்கு

படிப்புப் பழக்கவழக்கங்களில் நிலைத்தன்மையும் கருத்துகளைப் பற்றிய ஆழமான புரிதலும் இன்றியமையாதது. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை விரைவில் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் புரிதலை உறுதிப்படுத்திக் கொள்ள சக விவாதங்களில் ஈடுபட வேண்டும். வழக்கமான திருப்புதல்கள் மற்றும் பல்வேறு கணக்குகளைப் பயிற்சி செய்வது கருத்துகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கும் அவசியம்.

அழுத்தத்தை சமாளித்தல்

தேர்வு நெருக்கடி அடிக்கடி மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது எதிர்விளைவாகும். மாணவர்கள் தங்கள் மனதை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க போதுமான இடைவெளிகள் மற்றும் ஓய்வு நேர செயல்பாடுகளுடன், சீரான வழக்கத்தை வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவையும் ஒரு மாணவரின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும்.

மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு  வாரியத் தேர்வுகளுக்குத் தயாராகும்போது, ​​இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய
பாடங்களில் மதிப்பெண்களைப் பெறுவதில் கவனம் செலுத்துவது இறுதி முடிவில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இது மூலோபாய திட்டமிடல், நிலையான நடைமுறை மற்றும் பாடப் புத்தகங்களின் திறம்பட பயன்பாடு ஆகியவற்றின் கலவையாகும், இது திறனை சிறந்ததாக மாற்றும்.

Share:

பள்ளி மாணவர்களின் சுமையை குறைக்க சூப்பர் திட்டம் – புதிய உத்தரவு!!

பள்ளி மாணவர்களின் சுமையை குறைக்க சூப்பர் திட்டம் – புதிய உத்தரவு!!


பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க மாநில அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

புத்தக சுமை:

கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கென ஏகப்பட்ட சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை (DSERT) சார்பில் குழுவை அமைத்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, 1, 2 ஆம் வகுப்பு மாணவர்களின் பை எடை 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை இருக்க வேண்டும் எனவும், 3 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பை 2 முதல் 3 கிலோ வரையிலும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பை 3 கிலோ முதல் 4 கிலோ வரையிலும், 9 மற்றும் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பை 4 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் இந்த அறிவிப்பை பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share:

நாளை நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை? – பாதிக்கும் இயல்புநிலை!

 நாளை நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை? – பாதிக்கும் இயல்புநிலை!


வெள்ள பாதிப்புகளில் சிக்கியுள்ள நெல்லை நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த புதிய உத்தரவு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வந்தது. கனமழையின் எதிரொலியால் இந்த நான்கு மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் மழை வெள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.


இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் கலெக்டர் கார்த்திகேயன் வெள்ள பாதிப்பு காரணமாக நெல்லை மாவட்டத்தின் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் மட்டும் செயல்படும் என்று உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வரும் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.


Share:

பொதுமக்கள் / மாணவர்களுக்கான இணையவழி சேவைகள் - தேர்வுத்துறை..!

பொதுமக்கள் / மாணவர்களுக்கான இணையவழி சேவைகள் - தேர்வுத்துறை..!


SSLC / +2 இரண்டாம் படி (Duplicate) மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் (Certified Copy) போன்ற சேவைகளைப் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

இதுவரை தபால்வழி விண்ணப்பங்களாக பெறப்பட்டு வந்த இத்துறை சேவைகளான மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம்படி , மதிப்பெண் இடப்பெயர்வுச் சான்றிதழ் பிற சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் , மாநிலங்களில் உயர்கல்வி பயில ( Migration Certificate ) இணையவழி விண்ணப்பங்களாக பெறுவதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது . பொதுமக்கள் / மாணவர்கள் இவ்வியக்கக இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) விண்ணப்பிக்கலாம் .

DGE online Service - Press News - Download here

Share:

திட்டமிட்டபடி அரையாண்டு விடுமுறை?

 திட்டமிட்டபடி அரையாண்டு விடுமுறை?


தொடர் விடுமுறை காரணமாக அரையாண்டு தேர்வுகளை ஜனவரியில் நடத்தி கொள்ள ஆலோசனை

திட்டமிட்டபடி அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரியில் பள்ளிகள் திறப்பின் போது விடுபட்ட அரையாண்டு தேர்வுகளை நடத்த திட்டம்

Share:

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 18.12.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ..!

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 18.12.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ..!

அதிகனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று ( 18.12.2023 )  விடுமுறை அறிவிப்பு.


கொடைக்கானல் வட்டம் ( பள்ளிகள் மட்டும்...).


தேனி ( பள்ளிகள் மட்டும்...).


விருதுநகர் ( பள்ளிகள் மட்டும்...).


இராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்...).


நெல்லை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


 தூத்துக்குடி  ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


கன்னியாகுமாரி ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


தென்காசி  ( பள்ளி,  கல்லூரிகளுக்கு )


Share:

கனமழை - 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 18.12.2023 ) விடுமுறை அறிவிப்பு..!!

கனமழை - 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 18.12.2023 ) விடுமுறை அறிவிப்பு..!!

அதிகனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை ( 18.12.2023 )  விடுமுறை அறிவிப்பு.

*நெல்லை

* தூத்துக்குடி

* கன்னியாகுமாரி

* தென்காசி 



Share:

காவல் உதவி ஆய்வாளர் பதவி: 18ல் மாதிரி நேர்முகத் தேர்வு..!

 காவல் உதவி ஆய்வாளர் பதவி: 18ல் மாதிரி நேர்முகத் தேர்வு..!


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான உடற்தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.உடற்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தயாராக ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வரும், 18ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 10:30 மணிக்கு மாதிரி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே விண்ணப்பித்த படிவத்துடன் மாதிரி நேர்முகத் தேர்வில் பங்கேற்று, தயார்படுத்திக் கொள்ளலாம்.

 கலந்துகொள்ள விரும்புவோர், 0422 - 2642 388, 93615 76081 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்ய கொள்ளலாம். கோவை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள், இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

Share:

விரைவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ ரிசல்ட்: அமைச்சர் தகவல்..!

விரைவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ ரிசல்ட்: அமைச்சர் தகவல்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி சார்பில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. இதற்கான முதனிலை தேர்வுகள் முடிந்து, கடந்த பிப்வரி 25ல் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவித்தும் 10 மாதம் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை. 

இதனால் தேர்வெழுதிய மாணவர்கள் பாதிப்படைந்தனர்.தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும், தாமதத்திற்காக காரணம் குறித்த அறிக்கை இன்று (டிச.,15) மாலை வெளியாகும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Share:

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: ஜன., 11 வரை விண்ணப்பிக்கலாம்..!

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: ஜன., 11 வரை விண்ணப்பிக்கலாம்..!


அரசு தொழில்நுட்ப கல்வி துறை சார்பில், 2024 பிப்., மாதம் நடைபெறவுள்ள வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், நேற்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், நேற்று முதல், 2024 ஜன., 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜன., 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை, வாய்ப்பு அளிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள், 

விண்ணப்ப கட்டணம் 30 ரூபாய், இளநிலை 100 ரூபாய், இடைநிலை 120 ரூபாய், முதுநிலை 130 ரூபாய், உயர்வேகம் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களை, www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Share:

மறைமுக பொதுத்தேர்வு தமிழக அரசு மீது ஆசிரியர்கள் அதிருப்தி..!!

மறைமுக பொதுத்தேர்வு தமிழக அரசு மீது ஆசிரியர்கள் அதிருப்தி..!!

தேசிய கல்வி கொள்கையில், 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற போது எதிர்ப்பு தெரிவித்த, தி.மு.க., அரசு, தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் அரையாண்டு தேர்வை, மாநில பொதுத்தேர்வாக நடத்துவது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அரையாண்டு தேர்வினை, மாநில அளவிலான பொதுத்தேர்வாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை பள்ளியளவில் நடத்தப்பட்டு வந்த துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கூட, மாநில அளவில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து, தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 



இது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து அவர்கள் கூறியதாவது:தேசிய கல்வி கொள்கையில், 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, பொதுத்தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக்கூறி, தமிழகத்தில் பெற்றோர் தரப்பிலும், தி.மு.க., தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது போன்ற காரணத்தால், தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுத்து வருகிறது.ஆனால், பள்ளியளவில் நடத்தப்பட்டு வந்த இரண்டாம் பருவ தேர்வினை, தற்போது ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை டிச.,15 முதலும், 4, 5 வகுப்புகளுக்கு டிச., 12 முதலும், மாநில அளவில் ஒரே வினாத்தாள்களை கொண்டு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 



துவக்கப்பள்ளிகளில், ஒவ்வொரு தேர்வுக்கும் அருகில் உள்ள நடுநிலை பள்ளிகளுக்கு சென்று, வினாத்தாள்களை அச்சிட்டு வந்து தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினம் எப்படி செய்வது என்ற தெளிவுரை வழங்கப்படவில்லை.ஓராசிரியர் பள்ளிகளில், இந்த நடைமுறையால் பல சிக்கல்கள் ஏற்படும். மேலும் இத்தேர்வுகளால், மாணவர்களும் பதட்டத்துக்குள்ளாகியுள்ளனர். தற்போது பொதுத்தேர்வு போன்று, துவக்க வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத்தேர்வை நடத்த வேண்டிய அவசியம் ஏன் என தெரியவில்லை. மத்திய அரசு அறிவிக்கும் போது எதிர்ப்பதும், அதே திட்டத்தை பின் மறைமுகமாக அமல்படுத்துவதும் என, தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.இவ்வாறு கூறினர்.


Share:

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு பணிகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியீடு!

10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மறு மதிப்பீடு திட்டம்.

தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு திட்டம் அமலில் உள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மறு மதிப்பீடு திட்டம்,மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கவும் அனுமதி- பள்ளிக் கல்வித்துறை.

10th Public Exam - Revision Proceedings - Download here..

Share:

மாணவர்களின் சாலை மறியல்: பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை..!

மாணவர்களின் சாலை மறியல்: பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை..!

கோவை: ஆலாந்துறை பள்ளியில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதற்கு யார் காரணம் என்ற கோணத்தில், ஆசிரியர்களிடம் துறை ரீதியான விளக்கம் பெறப்பட்டுள்ளது.

ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், 821 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி ஆசிரியர் ஆனந்தகுமார் சமீபத்தில், போக்சோ வழக்கில் கைதாகியுள்ளார். இவரை விடுவிக்க கோரி, கடந்த 7ம் தேதி, அனைத்து மாணவர்களும், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர் ஆனந்தகுமாரை விடுவிக்க கோரி, அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை, மாணவர்கள் கைகளில் வைத்திருந்ததால், திட்டமிட்டு சாலை மறியல் செய்தது தெரியவந்தது.தேர்வு நேரத்தில், பள்ளி ஆசிரியர்களே ஒரு போக்சோ குற்றவாளிக்கு ஆதரவாக, மாணவர்களை துாண்டி விட்டு சாலை மறியலில் ஈடுபடுத்தியது வெட்டவெளிச்சமானது.இது குறித்து, நமது நாளிதழில், என்ன தைரியம் பாருங்க என்ற தலைப்பில் செய்தி வெளியானது.இதையடுத்து, 

இது குறித்து விசாரிக்க, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில், அனைத்து ஆசிரியர்களிடமும் விளக்க கடிதம் பெறப்பட்டுள்ளது.இதோடு, முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு சார்பிலும், அடுத்தடுத்து பள்ளியில் நடக்கும் பிரச்னை தொடர்பாகவும், அதற்கான தீர்வு வலியுறுத்தியும், எழுத்துப்பூர்வ விளக்கம், முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) கார்த்திகேயனிடம் கேட்டபோது, டி.இ.ஓ., தலைமையில் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி, எழுத்துப்பூர்வ விளக்கம் பெறப்பட்டுள்ளது. இரு ஆசிரியர்கள் விடுப்பில் உள்ளதால் அவர்களிடம் மட்டும், விளக்கம் பெறப்படவில்லை. அரையாண்டு தேர்வு துவங்கவுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதில், கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறோம், என்றார்.

Share:

உதவி பேராசிரியர் பணி பதிவு அவகாசம் அளிக்க கோரிக்கை..!

உதவி பேராசிரியர் பணி பதிவு அவகாசம் அளிக்க கோரிக்கை..!

அண்ணா பல்கலையின் உதவி பேராசிரியர் பணி விண்ணப் பதிவுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அண்ணா பல்கலையின் உதவி பேராசிரியர், உதவி நுாலகர், உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில், 232 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, கடந்த மாதம், 29ம் தேதி துவங்கியது. இன்று முடிவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவின்போது, விண்ணப்பதாரின் மொபைல்போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., என்ற ஒரு முறை பதிவு எண் அனுப்பி, அதனை விண்ணப்பதாரர் பதிவு செய்ய வேண்டும்.ஆனால், இரண்டு நாட்களாக இந்த பதிவு எண் கிடைக்காமல், விண்ணப்ப பதிவை மேற்கொள்ள முடியாமல், பட்டதாரிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை, அண்ணா பல்கலை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டுமென, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

வெள்ள நிவாரண நிதி... ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வெளியான குட் நியூஸ்

வெள்ள நிவாரண நிதி... ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வெளியான குட் நியூஸ்

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவதற்கு அருகில் உள்ள ரேசன் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனைதொடர்ந்து, ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ. 6,000 வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.


இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாதவர்களும் வெள்ள நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள நிவாரணம் பெற விரும்புவோர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் பெற்று, அதில், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு விவரம், வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


அதனைதொடர்ந்து, விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள் என தெரிகிறது. ரேஷன் அட்டை அடிப்படையில் வெள்ள நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Share:

சென்னையில் அடுத்த மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட அப்டேட்.!!

சென்னையில் அடுத்த மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட அப்டேட்.!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 19-21 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதையடுத்து தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளப்பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு வரும் சூழலில் இந்த மாவட்டங்களில் அடுத்து எப்பொழுது மழை பெய்யும் என்ற அப்டேட்டை வெளியிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்…


இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டிச. 19-21 தேதிகள் சுவாரஸ்யமாக மாறி உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், என்ன நடக்கும் என்பது வரும் டிசம்பர் 15ஆம் தேதியில் தான் இன்னும் தெளிவாகத் தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.


Share:

ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா? – எளிய வழிமுறைகள் இதோ!

 ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதா? – எளிய வழிமுறைகள் இதோ!


இந்திய மக்களின் முக்கிய ஆவணமான ஆதாரை பான் எண்ணுடன் இணைத்துள்ளதா என்பதை எப்படி சரிபார்க்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் பான் இணைப்பு

இந்தியாவில் உள்ள அனைவரும் ஆதார் அட்டையை பான் உடன் இணைக்க வேண்டும் என இந்திய வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. வருமான வரி விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த முக்கியமான செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆதாரை பான் உடன் இணைத்தால் தான் வரி செலுத்துதல்கள், டிடிஎஸ்/டிசிஎஸ் வரவுகள், வருமான அறிக்கைகள், வரையறுக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பரிவர்த்தனைகளை சரியாக செய்ய முடியும்.

உங்களுடைய ஆதார் அட்டையை, பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை தெரிந்து கொள்ள, முதலில் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in/iec/foportal/ என்பதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். அதில் இணைப்பு ஆதார் நிலையை தேர்வு செய்ய வேண்டும். பின் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட வேண்டும். பின் ‘‘View Link Aadhaar Status’விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். திரையில் பான்-ஆதார் இணைப்பு நிலை காட்டும். உங்களுடைய பான் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், திரை “இணைக்கப்பட்டது” என காட்டும். இல்லை என்றால் அது அது இரண்டு கார்டுகளை இணைப்பதற்கான விவரங்களை காட்டும். அதன் மூலம் நீங்கள் இணைக்கலாம்.

Share:

நிவாரணத்தொகை ரூ. 6,000 இவர்களுக்கு மட்டும் தான் – அரசு திட்டவட்டம்!

நிவாரணத்தொகை ரூ. 6,000 இவர்களுக்கு மட்டும் தான் – அரசு திட்டவட்டம்!

தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரூ. 6000 வெள்ள நிவாரணத் தொகை வழங்க முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

நிவரணத்தொகை:

சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பலரும் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக ரூ. 6,000/- வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் அதற்கான டோக்கன் வழங்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தனர்
இந்த நிலையில் வெளியூர் வாசிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் தங்கம் அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது ரேஷன் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்க முடியும் என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

Share:

அடுத்தடுத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 அடுத்தடுத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘மழையில் புத்தகங்கள் நனைந்து விட்டது என்று சொன்னால் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தகங்கள் எப்போதும் இருப்பு வைத்துள்ளோம். 


அதனால் அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அதனால்தான் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு கூட 13ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் காலை வேலையில் மாணவர்கள் கூடும் பொழுது அவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்கி விட்டு தான் வகுப்பறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.



அந்த வகையில் மாணவர்கள் ஒரு நல்ல மனநிலையில் பள்ளிக்கு வர தொடங்கியுள்ளனர். மழை பெய்த 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கூடங்களில் கட்டிடங்கள் உறுதித் தன்மையுடன் இருக்கிறதா என்பதை அறிய 20 வகையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். 


மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில், இன்னும் 32 பள்ளிகளில் பணி செய்ய வேண்டியது உள்ளது. பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு அங்கு மாணவர்கள் அமர்ந்து படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் விடுமுறை விடும்பொழுது அதனை ஈடு செய்ய அடுத்தடுத்து வரக்கூடிய சனிக்கிழமைகளில் பள்ளிகளை வைத்து தான் அந்த விடுமுறையை ஈடு செய்வோம்’ என்றார்.


Share:

வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்குள் கைகலப்பு?

வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்குள் கைகலப்பு?

ஏற்காடு வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்குள் கைகலப்பு



Share:

TNPSC - குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!

TNPSC - குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!

குரூப் 4 - தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட காலக்கெடு

குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்

Video News - Click here

Share:

தமிழகத்தில் நாளை ( 11.12.2023 ) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை டிச .13 - ஆம் தேதி முதல் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

தமிழகத்தில் நாளை ( 11.12.2023 ) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை டிச .13 - ஆம் தேதி முதல் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!



11.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் , புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை ( 11.12.2023 ) தொடங்கவிருக்கும் தேர்வுகளை புதன்கிழமை ( 13.12.2023 ) அன்று தொடங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன . பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

Share:

2024 புத்தாண்டு ராசி பலன்: இந்த 6 ராசிக்காரர்களுக்கு வேலையில் புரமோசன் .. வெளிநாடு செல்வது யார்?

2024 புத்தாண்டு ராசி பலன்: இந்த 6 ராசிக்காரர்களுக்கு வேலையில் புரமோசன் .. வெளிநாடு செல்வது யார்?

2024ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. 2024ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு உயர்கல்வி யோகம் கைகூடி வரும்? படித்து முடித்தவர்களில் யாருக்கு வேலை கிடைக்கும், புரமோசன் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்

மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு தேடி வரப்போகிறது. 2024ஆம் ஆண்டில் நிலையான நிரந்தரமான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகமும் நினைத்த கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

ரிஷபம்: 2024ஆம் ஆண்டில் வேலை செய்யும் இடத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. சனிபகவான் நல்ல வேலையை தரப்போகிறார். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வந்துள்ளது. வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வெளிநாடு செல்லப்போகிறீர்கள்.

மிதுனம்: ராகு பதவி யோகத்தை தரப்போகிறார். எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வந்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிரந்தரமான வேலைக்காகவும், புரமோசனுக்காகவும் காத்திருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது.


கடகம்: 2024ஆம் ஆண்டு உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைப்பதால் பண வருமானம் அதிகரிக்கும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல வேலை கிடைக்கும் வரை இருக்கும் வேலையை அவசரப்பட்டு விட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறையும் கவனமும் செலுத்துங்கள். உயர்கல்விக்காக முயற்சி செய்பவர்கள் பெற்றோர்களின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வது நல்லது.


சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். கண்டகச்சனி இருந்தாலும் வேலைக்காக வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகம் வரப்போகிறது. வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். குரு பகவான் பதவி யோகத்தை தரப்போகிறார். வேலை, தொழிலில் மாற்றம் வரப்போகிறது. சொந்தத்தொழில் செய்வதற்கான யோகம் கைகூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. படிப்பில் படு சுட்டியாக இருப்பீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வந்துள்ளது.

கன்னி: 2024ஆம் ஆண்டில் உங்களுக்கு கேட்டது எல்லாம் கிடைக்கப்போகிறது. புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் மாற்றம் வரப்போகிறது. கை நிறைய சம்பளம், புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு தொட்டதெல்லாம் பொன்னாகும். : வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். உங்களுடைய வேலையை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். படிக்கும் மாணவர்கள் விளையாட்டுத்தனத்தை விட்டு விட்டு அக்கறையோடு படிக்கவும். மே மாதத்திற்குப் பிறகு படிப்பிற்காக வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும்.

விருச்சிகம்: 2024ஆம் ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு விமானத்தில் ஏறும் யோகம் வரப்போகிறது. வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் சிக்கித்தவிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மே மாதத்திற்குப் பிறகு புதிய தொழில் தொடங்கலாம். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

தனுசு: பிறக்கப்போகும் 2024ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறது. செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்காக உயரப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். வெளிநாட்டில் கல்வி, வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கையில் கடந்த காலங்களில் சோதனைகளை சந்தித்தவர்களுக்கு சாதனை புரியும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது

மகரம்: 2024ஆம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக வெற்றிகளை தேடித்தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. வேலையில்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்த உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. கடந்த காலங்களில் வேலையை இழந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வேலையில் இருந்தாலும் புரமோசனும் சம்பள உயர்வும் இல்லையே என்று ஏங்கித்தவித்தவர்களுக்கு புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கப்போகிறது. பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கும்பம்: 2024ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். உண்மையான உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள்.

மீனம்: 2024ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. நிறைய பண வருமானம் வரும். மே மாதத்திற்குப் பிறகு புதிய வேலைக்காக செய்யும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். வேலையை விட்டு விட்டு மற்றொரு வேலைக்கு ஆசைப்படாதீர்கள் பாதியில் விட்டு விட்டு போய்விடுவார்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. நமக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று ஏங்கித்தவித்தவர்களுக்கு புத்தாண்டு நல்ல செய்தியை தரப்போகிறது. மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வந்துள்ளது. 

Share:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் – வங்கி மூலம் வழங்கப்படாதது ஏன்?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் – வங்கி மூலம் வழங்கப்படாதது ஏன்?


தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6000 நிவாரணம் வங்கியின் மூலமாக வழங்கப்படாத காரணம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ரூ.6000 நிவாரணம்:

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் பலரும் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது வரையிலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முழுவதுமாக வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 30 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6000 வழங்க இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.


இது போக, ஆடு, மாடுகள் மற்றும் பயிர்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை மட்டும் வங்கி கணக்கில் வழங்கப்படும் நிலையில் நிவாரண தொகை ரேஷன் கார்டு மூலமாக ரொக்கமாக வழங்க திட்டமிட்டது ஏன் என்கிற கேள்வி எழுக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கியின் மூலமாக பணம் அனுப்பினால் மினிமம் பேலன்ஸ் இல்லாதவர்களின் கணக்கில் பணம் பிடிக்கப்பட்டுவிடும். இதனால், முழுமையாக நிவாரணத்தொகை பொதுமக்களை சென்றடையவே கையில் பணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Share:

கனவு ஆசிரியர் தேர்வு - 3-ஆம் நிலை மதிப்பெண் வெளியீடு..!

 கனவு ஆசிரியர் தேர்வு - 3-ஆம் நிலை மதிப்பெண் வெளியீடு..!


கனவு ஆசிரியர் தேர்வு - 3-ஆம் நிலை மதிப்பெண் EMIS இணையத்தில் வெளியீடு.

கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 3-ஆம் நிலையில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்குமான மதிப்பெண் EMIS இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள் தங்களது EMIS ID மூலமாக மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்....

Kanavu Asiriyar Result - Click here

Share:

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பொது வினாத்தாள்களை அச்சிடுவதில் சிக்கல்!

 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பொது வினாத்தாள்களை அச்சிடுவதில் சிக்கல்!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பொது வினாத்தாள்களை அச்சிடுவதில் சிக்கல்!



Share:

புயலால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு நிம்மதி – இலவசமாக வழங்க நடவடிக்கை!

 புயலால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு நிம்மதி – இலவசமாக வழங்க நடவடிக்கை!

மிக்ஜாம் புயல் காரணமாக தங்களது கல்வி சான்றிதழ்களை இழந்து உள்ளவர்களுக்கு இலவசமாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

கல்வி சான்றிதழ்கள்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகபட்ச மழைப்பொழிவின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களையும் சந்திக்கும் நிலை உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் நடைபாண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழை நீர் குடியிருப்புகளில் புகுந்து மக்களை அலைக்கழிப்பிற்கு உள்ளாகியது. இதன் காரணமாக மக்கள் தங்கள் உடைமைகளை அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

மக்களுக்கான அனைத்து வகையான நிவாரண பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் இலவசமாக சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் சிறப்பு முகாம்கள் இதற்காக நடத்தப்பட உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். இதன் காரணமாக கல்வி சான்றிதழ்களை இழந்த மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

Share:

TET தேர்ச்சி பெறாததால் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு நிலைக்கு மீண்டும் அங்கீகாரம் - ஆசிரியர்கள் நிம்மதி !!!

TET தேர்ச்சி பெறாததால் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு நிலைக்கு மீண்டும் அங்கீகாரம் - ஆசிரியர்கள் நிம்மதி !!!

டெட் தேர்ச்சி பெறாததால் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு நிலை அங்கீகாரம் மீண்டும் வழங்கியதால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அரசுப்பணியில் சேருவோருக்கு, அனுபவம் அடிப்படையில், தேர்வு நிலை, சிறப்பு நிலை அங்கீகராம் வழங்கி ஊக்கத்தொகை வழங்கப்படும். 

இதன்படி, பள்ளிக்கல்வித்துறையில், 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள், தேர்வு நிலை அந்தஸ்து வழங்க வேண்டும்.ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாதோருக்கு, பதவி உயர்வு வழங்கக்கூடாதென, ஐகோர்ட் மதுரை கிளையில் வெளியான தீர்ப்பு அடிப்படையில், தேர்வு நிலை கருத்துரு, ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், அரசாணை வெளியிடாத நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும், ஆசிரியர்களின் கருத்துருக்கள் திருப்பி அனுப்பியதை கண்டித்து, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், கடந்த செப்டம்பரில் போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து, கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு நிலை அங்கீகாரம் மீண்டும் வழங்கப்பட்டு வருவதால், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் இல்லாத நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும், தேர்வு நிலை கருத்துரு நிறுத்தி வைத்து ஆசிரியர்கள் அலைகழிக்கப்பட்டனர். பலகட்ட போராட்டங்களுக்கு பின், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேறியுள்ளது என்றார்.


Share:

தேர்வு தேதி மாற்றம் மாணவர்கள் ஏமாற்றம்..!!

தேர்வு தேதி மாற்றம் மாணவர்கள் ஏமாற்றம்..!!

அரையாண்டு தேர்வுக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு தயாராக இருந்த மாணவர்கள், திடீரென தேதி மாற்றப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.பள்ளிக்கல்வித்துறை, டிச., 7 மற்றும் 8 ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடக்கும் என, அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இதனால், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் எழுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அலகு தேர்வு நடத்தப்பட்டது.தொடர்ந்து, அரையாண்டுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக இருந்த நிலையில், நேற்றுமுன்தினம், பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வுகளை, 14 மற்றும் 20ம் தேதிகளில் மாற்றி, மாவட்ட கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், தேர்வுக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்


Share:

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

 அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!


மிக்ஜாம் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு கால அட்டவணை:

சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் அணைத்து பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை உருவாகியது, இத்தகைய காரணத்தால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. அத்துடன் அரசு அலுவலர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது புதிய தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 2024 பிப்.17ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு தாலுகாக்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு தாலுகாக்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!


மிக்ஜாம் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை:

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதன்காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மழை நின்ற நிலையிலும், வெள்ளம் வடியாமல் இருக்கிறது. இதனால் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே, டிசம்பர் 8ம் தேதியான நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

மழை பாதிப்பு - நாளை (.08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்..!!

மழை பாதிப்பு - நாளை (.08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்..!!

சென்னையில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 08-12-2023 விடுமுறை தாம்பரம் , பல்லாவரம் , செங்கல்பட்டு , திருக்கழுக்குன்றம் , திருப்போரூர் , வண்டலூர் வட்டங்களில் பள்ளி , கல்லூரிகள் இயங்காது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


Share:

NMMS தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவு..!!

NMMS தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவு..!!

NMMS தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE - NMMS Uploading Instructions - Download here

Share:

தெற்கு ரயில்வேயில் Railway Officer Level 2 காலிப்பணியிடங்கள்..!!

தெற்கு ரயில்வேயில் Railway Officer Level 2 காலிப்பணியிடங்கள்..!!

Southern Railway – Railway Officer (Level 2 of VII) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்                  காலியிடங்கள்

Railway Officer (Level 2 of VII)        02

தகுதி:

Southern Railway பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு + ITI, 12ம் வகுப்பு, Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

Southern Railway பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

Southern Railway பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை:

Southern Railway பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test / Computer Based Test, Practical Demonstration and Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / EXSM / PWBD / Women – ரூ.250/-

மற்ற நபர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை:

Southern Railway பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (31.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.12.2023

முக்கிய இணைப்புகள்:

விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

Share:

இலவச கம்ப்யூட்டர் புரோகிராமிங் பயிற்சி..

 இலவச கம்ப்யூட்டர் புரோகிராமிங் பயிற்சி..!


ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ., வளாகத்தில் சி.ஐ.டி.டி., விரிவாக்க மையம் செயல்படுகிறது.

இம்மையத்தில் கம்ப்யூட்டர் புரொகிராமிங் முழுநேர பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.பயிற்சி: புரொகிராமிங் லேங்குவேஜ் பைத்தான்பயிற்சி காலம்: 6 வாரங்கள்தகுதி:

ஏதேனும் ஒரு டிப்ளமா அல்லது இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். குறைந்தது 18 வயது நிரம்பியிருத்தல் அவசியம். தேவையான ஆவணங்கள்:

10ம், 12ம் மற்றும் டிப்ளமா / டிகிரி சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம்.பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20விபரங்களுக்கு: 9791161148, 9444923726

Share:

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

 கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த திருவள்ளூர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு நடைபெறும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு:

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இரவு பகலாக பெய்த தொடர் கனமழையால் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இத்தகைய சூழலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளூர் மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. தற்போது வரை சில இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.

அதே நேரம் மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மழை மற்றும் புயல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் கடந்த டிச. 4 & 5ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 12 மற்றும் 13 ம் தேதிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகளில் மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு....

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகளில் மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு....


மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு....

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும்

ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும்



Share:

புயல் பாதிப்பு - நாளையும் ( 07.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு உத்தரவு..!!

 புயல் பாதிப்பு - நாளையும் ( 07.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு உத்தரவு..!!



சென்னையில் நாளை அனைத்து பள்ளி , கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.



வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணி நடப்பதால் சென்னையில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support