DEO தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு....!!

DEO தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் விலக்கு..!!

மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான முதல்நிலைத் தேர்வு கணினிவழி தேர்வாக ஏப்ரல் 20-ம்தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வுப்பணி மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்குநியமிக்கப்பட்டிருந்தால் அவர்கள்டிஇஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆவணத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் காண்பித்து எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் கூறியுள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...