பள்ளியில் ஆப்சென்டான மாணவர்களுக்கு எச்சரிக்கை ! கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து, 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை கொண்டாடி வருகின்றனர். ஆனால், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள மாணவர்கள், தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வி துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முதல் மொழி தேர்வுக்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட்டாகி இருந்தனர். இதற்கு, ஆப்சென்டான மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளி வருவதே இல்லை என பல்வேறு பள்ளிகள் கூறி இருந்தனர்.

இதையடுத்து, நீண்ட நாட்களாக, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கான முழு லிஸ்ட்டையும் வரும் மே 2 ஆம் தேதிக்குள் பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தையும், அதற்காக பள்ளி நிர்வாகம் செய்த நடவடிக்கையும் சேர்த்து சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இனி வரும் கல்வியாண்டில் இது போன்ற, ஆப்சென்ட்டிஸ் இருக்க கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.

Share:

10, 12ம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? எந்த பணிக்கு எந்த துறை சிறந்தது – தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சூப்பரான நடவடிக்கை!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்கள் 11ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் எந்த பாட பிரிவை தேர்வு செய்யலாம் என்று மாணவர்களுக்கு உதவுவதற்காக உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வி உதவிக்குழு:

தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறது. பள்ளி மாணவர்கள் இடைநிற்றல், உதவித்தொகை போன்ற பல திட்டங்களின் மூலம் பலனடைந்து வருகின்றனர். இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிந்துள்ளது. இந்த மாணவர்கள் தங்கள் வாழ்வை தீர்மானிக்கும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதாவது 10ம் வகுப்பு முடித்தவர்கள் 11ம் வகுப்பில் தேர்வு செய்யும் பாடங்களை பொறுத்து தான் கல்லூரியில் படிக்கும் துறையை தேர்வு செய்ய முடியும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இது குறித்த விழிபுணர்களை பெற்றுள்ளனர். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிலும் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வுகள் எதுவும் இல்லை.

இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை அளிக்க அனைத்து பள்ளியிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான இணையதள இணைப்பையும் அதிகாரதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Share:

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை இயக்கத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பதிவுகள் - ஒன்றியங்கள் வாரியாக!

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை இயக்கத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பதிவுகள் - ஒன்றியங்கள் வாரியாக...

மாணவர் சேர்க்கை - ITK Volunteers Responses.pdf - Download here

Share:

இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை!


மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விருப்பத்திற்கு இணங்க இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம்.

பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும்  மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் நடைபெறுகின்றன. அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நூலகங்களில்   குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்த்து நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை  ஊக்கப்படுத்துங்கள். 

இக்கோடை விடுமுறை காலத்தில் தன்னார்வலர்கள்  பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! மாணவர் சேர்க்கை  குறித்த பதிவை இல்லம் தேடிக் கல்வி மொபைல் செயலியில் தவறாது பதிவு செய்யவும். அதிக குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு  சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்!

அனைவருக்கும் வாழ்த்துகள்!

Share:

4 ஆம் 5 ஆம் வகுப்பு எண்ணும் எழுத்தும் பாடநூல்களின் பெயர்கள் 2023-2024

Ennum Ezhuthum 4th 5th Text Book Names 2023-2024


Ennum Ezhuthum 4th Text Book Names 2023-2024, Ennum Ezhuthum 5th Text Book Names 2023-2024.

எண்ணும் எழுத்தும் அறிமுகம்:

முதல் வகுப்பு - அரும்பு

இரண்டாம் வகுப்பு - மொட் டு

மூன்றாம் வகுப்பு - மலர்

நான்காம் வகுப்பு - காய்

ஐந்தாம் வகுப்பு - கனி

(4,5 வகுப்புக்கு கண்ணும் கருத்துமாக) அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்க உள்ளது.

Share:

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு RTE மூலமாக 70,000 பேர் விண்ணப்பம்!


இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.   மாநிலம் முழுவதுமுள்ள 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85,000 இடங்கள் உள்ளன. இந்ததிட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம்.    

வரும் கல்வியாண்டு (2023-24) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கியது. இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். வரும் மே 18-ம் தேதி வரை அவகாசம் உள்ளதால், விருப்பமுள்ள பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.    சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் பள்ளிக்கல்வியின் உதவி மைய எண்ணுக்கு 14417 தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு!

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு.

(Notification of TN EMIS for those who have applied for Teacher transfer counseling)...

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு (Notification of TN EMIS for those who have applied for Teacher transfer counseling)...

Transfer முக்கிய குறிப்பு

முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல் கட்ட ஒப்புதலுக்காக ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை மீண்டும் நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று BEO / CEO இடம் ஒப்படைக்கவும் )

1. விண்ணப்ப நகல் கையொப்பத்துடன்,

2.தலைமை ஆசிரியரால் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட விண்ணப்ப நகல்) ஒப்படைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியரால் EMIS தளத்தின் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர் தலைமை ஆசிரியராக இருப்பின் முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, கையொப்பமிட்டு BEO / DEO(S) / CEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

நாள் :
29/04/2023.

TN EMIS IMPORTANT INFORMATION
ஆசிரியர்கள் கவனத்திற்கு,

மாறுதல் விண்ணப்பம் online மூலம் விண்ணப்பித்ததில் தவறு இருக்கும் பட்சத்தில் த.ஆ. ஆல் ஏற்கனவே approve கொடுத்திருந்தாலும் Reject செய்து மீண்டும் சரியான தகவலுடன் reapply செய்து த.ஆ. ஆல் approve கொடுக்கப்பட வேண்டும். 

(Reasons : wrong data, missing data, wrong priority, changing priority etc.,) 

Note :  5years priority க்கு அடுத்தே spouse priority எடுத்துக் கொள்ளப்படும். 
TN EMIS.

Share:

TNPSC வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: ரூ.1 லட்சம் வரை மாதச் சம்பளம்!



TNPSC Junior Scientific Officer (JSO) Notification 2023

வேலை பிரிவுGovernment Job
துறைகள்- Tamil Nadu Public Service Commission
காலியிடங்கள் -  31
பணிகள்-Junior Scientific Officer
கல்வி தகுதி-M.Sc
தேர்வு செயல்முறை-Written Exam/Interview
பணியிடம்- Tamilnadu 
கடைசி நாள் - 26.05.2023 
விண்ணபிக்கும் முறை -ஆன்லைன் மூலம்
இணையதளம் -www.tnpsc.gov.in

TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது Junior Scientific Officer பணிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 31 காலியிடங்கள் உள்ளன.

Chemistry – 20 Posts

Biology – 04 Posts

Physics – 03 Posts

Physics and Chemistry – 04 Posts

TNPSC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் முதுகலை அறிவியல் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC சம்பம் விவரம்:

TNPSC பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகள் படி சம்பம் வழங்கப்படும்.

Junior Scientific Officer (JSO) –ரூ. 36,900/- முதல் ரூ.1,35,100/-

வயது விபரம்:

அரசு விதிமுறைகள் படி வயது வரம்புகள் உள்ளன.

SCs,SC(A)s,STs,MBCs/DCs,BC(OBCM)s,BCMs,Destitute Widows – வயது வரம்பு இல்லை

பிற பிரிவினர்கள் – 18 to 32 வருடம்

தேர்வு செய்யப்படும் முறை:

TNPSC Junior Scientific Officer (JSO) Recruitment 2023 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மிகவும் தகுதியான விண்ணப்பதாரர்களைக் கண்டறிய கடுமையான தேர்வு செயல்முறையைப் பயன்படுத்துகிறது. இந்த செயல்முறை இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது.

எழுத்துத் தேர்வு

கணினி அடிப்படையிலான தேர்வு (CBT))

Oral Test on interview

விண்ணப்பிக்கும் முறை:

TNPSC Latest Recruitment 2023 மேற்கூறிய அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் TNPSC இணையதளத்தின் தொழில் வலைப்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், குறிப்பாக தற்போதைய திறப்புகள் பிரிவின் கீழ். விண்ணப்பக் காலம் ஏப்ரல் 27, 2023 முதல் மே 26, 2023 வரை இருக்கும். வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF - Click Here

விண்ணப்ப படிவம் - Click Here


Share:

TET - பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழ்(Genuineness Certificate )


அரியலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் உண்மைத்தன்மை (Genuineness of Teacher Eligibility Certificate issued in Ariyalur District).

Share:

TNPSC Group 4 - 2023-2024 இப்போது இருந்தாவது தேர்வுக்கு தயாராகுங்க - தேர்வு தேதி அறிவிப்பு எப்போதோ வந்துவிட்டது !

 

குரூப் 4 தேர்வானது 2024ஆம் ஆண்டு பிப்ரவரி-யில் நடத்தப்படும் என தேர்வு கால அட்டவணை (Annual Planner) – யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியாகும் நாள்         நவம்பர் 2023

விண்ணப்பம் தொடங்கும் நாள்   -      நவம்பர் 2023

விண்ணப்பிக்க இறுதி நாள்       -          டிசம்பர் 2023

குரூப் 4 தேர்வு நாள்                         -       பிப்ரவரி 2024

தேர்வு முடிவு வெளியாகும் நாள்     -           மே 2024

TNPSC குரூப் 4 தேர்வு 2023 பாடத்திட்டம்

குரூப் 4 பாடத்திட்டத்தை (Syllabus) 10 ஆம் வகுப்பு தரத்தில் வடிவமைத்துள்ளது TNPSC.

TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் சுருக்கிய வடிவத்தை கீழே கொடுக்கின்றோம், பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொது தமிழ்

  • இலக்கணம்
  • இலக்கியம்
  • தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்

பொது அறிவு / General Studies

  • பொது அறிவியல்
  • நடப்புநிகழ்வுகள்
  • புவியியல்
  • இந்திய அரசியல்
  • இந்தியா & தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு
  • இந்திய பொருளாதாரம்
  • இந்திய தேசிய இயக்கம்
  • திறனறிவு மற்றும் புத்திகூர்மை தேர்வு. 

ஒவ்வொரு ஆண்டும் தேர்வர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்னவென்றால் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் அப்ளிகேஷன் தொடங்கிய பிறகு படிப்பதற்கு தொடங்க வேண்டும் என்ற நிலையில் உள்ளதால் தான் கடைசியில் தோல்வி மிஞ்சுகிறது. Annual Planner வெளியிட்ட தேதியிலிருந்து அடுத்த ஆண்டுக்கான தேர்வுக்கு நீங்கள் தொடர்ச்சியாக தயாராவதன் மூலமாக தேர்வில் வெற்றி பெறலாம் இதற்கு முந்தைய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை நீங்கள் விசாரிக்கும் போது அவர்கள் எந்த ஒரு நொடியையும் வீணாக்கியதாக தெரிவிப்பதில்லை .அனைத்து நேரங்களிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதே அவர்களுடைய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதால் தான் எங்களால் வெற்றி பெற முடிந்தது என்று பலர் கூறியுள்ளனர். இந்த ஆண்டும் டிஎன்பிஎஸ்சியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இப்போது இருந்தே நீங்க படிக்க தொடங்கும் போது நீங்கள் கண்டிப்பாக அடுத்த ஆண்டு ஒரு அரசு அதிகாரியாக ஆக முடியும்.

#இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் .

Share:

JEE முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு.!

2023 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

என்ஐடி, ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.  ஜேஇஇ முதன்மை தேர்வை எழுதியவர்களில் 43 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


ஜேஇஇ தோ்வானது ஜேஇஇ-முதல்நிலை (மெயின்), ஜேஇஇ-முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வு என்டிஏ (தேசிய தோ்வு முகமை) சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும்.


ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.

jeemain.nta.nic.in என்ற அதிகார்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

Share:

நிர்வாக நலன் கருதி முதன்மை கல்வி அலுவலராக பணிபுரியும் திருமதி கோ கிருஷ்ண பிரியா என்பவரை பணியிடம் மாறுதல் மூலம் நியமனம் செய்து- அரசு ஆணை இடுகிறது !

பள்ளிக் கல்வித் துறையில் பள்ளிக்கல்விப் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை ஒத்த பணியிடங்கள் பணிபுரியும் திருமதி. சரஸ்வதி என்பாருக்கு பதிலாக நிர்வாக நலன் கருதி தற்போது

 விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரியும் திருமதி கோ கிருஷ்ண பிரியா என்பவரை பணியிடம் மாறுதல் மூலம் நியமனம் செய்து அரசு ஆணை இடுகிறது தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் திருமதி. சரஸ்வதி  என்பவருக்கு பணியிடம் பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.




Share:

2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 2023 ஆம் மாதத்திற்கு ஊதியக் கொடுப்பாணை!


பள்ளிக் கல்வி 1990-1991 மற்றும் 2002-2003 முதல் 2006-2007 , 2011-2012 , 2014-2015 மற்றும் 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 2023 ஆம் மாதத்திற்கு ஊதியக் கொடுப்பாணை ( pay Authorization ) ஆணை!

2760 Posts April 2023 Pay authorization.pdf - Download here

Share:

கனவு ஆசிரியர் 2ம்நிலை தேர்வு Hall Ticket வெளியீடு!


கனவு ஆசிரியர் 2ம்நிலை தேர்வு Hall Ticket வெளியீடு DOWNLOAD செய்து PRINT எடுக்கும் வழிமுறை


Share:

கடனை வாங்கி அடைக்க முடியாமல் தினம் தினம் தவிப்பவர்கள், ஏழு கிராம்பை இப்படி மட்டும் வைத்து விடுங்கள் போதும்.....

 

 கடல் போன்ற கடன் பிரச்சனையும் காணாமல் போக கூடிய அற்புத பரிகாரம். -இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கூட கடன் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும். இந்த அளவிற்கு கடனானது பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது. இந்த கடனை நாம் தீர்க்க எத்தனையோ வழிகளில் போராடினாலும் சில நேரங்களில் நாம் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் திணறுவது உண்டு. அப்படியான கடனை அடைக்க இந்த கிராம்பு பரிகாரம் செய்தால் போதும் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். முதலில் இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 இந்த கடனை நம்முடைய அவசர தேவைக்கு வேறு வழியில்லாமல் வாங்கி இருந்தால் இது போன்ற பரிகாரங்கள் மூலம் அதை அடைப்பதற்கான வழி தேடி கொள்ளலாம். ஆனால் நாம் ஆடம்பரமாக வாழ்வதற்கோ வீண் செலவுகளுக்காக பணத்தை கடன் வாங்கி இருந்தால் நீங்கள் இன்னும் இது போல எத்தனை பரிகாரங்களை செய்தாலும் அதில் பலன் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். -

  கடன் தீர கிராம்பு பரிகாரம்

 இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை 3:30 மணி முதல் 8:30 மணிக்குள்ளாக செய்து விட வேண்டும். இதற்கு முதல் நாளே அதாவது வியாழக்கிழமை மாலையில் பூஜை அறையை சுத்தம் செய்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலையில் குளித்து முடித்து விட்டு, மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிகுந்த மலரால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். தாயாரின் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விடுங்கள். அடுத்து ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஏழு கிராம்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிராம்பு உடையாத நல்ல கிராம்பாக இருக்க வேண்டும். அதன் பிறகு இந்த கிராம்பிற்கு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை முடித்துக் கொள்ளுங்கள். இந்த கிராம்பு அந்த மஞ்சள் துணியில் வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜை அறையிலேயே இருக்கட்டும். அன்று இரவு இந்த கிராம்புடன் சேர்ந்த மஞ்சள் துணியை கைகளில் வைத்துக் கொண்டு மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து உங்களுக்கு இருக்கும் கடன் சுமை அனைத்தையும் சொல்லி இது எனக்கு தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த கிராம்பை மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி வைத்து விடுங்கள். இதை முடிச்சு போடுவதற்கும் மஞ்சள் நிற நூலையே பயன்படுத்துங்கள். - - இந்த மூட்டையை இரவு உறங்கும் போது உங்களின் தலையணை அடியில் வைத்து விட்டு உறங்கி விடுங்கள்.




 அடுத்த நாள் சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்து பிறகு இந்த மூட்டையை, வீட்டின் அருகில் உள்ள அரச மரத்தின் கிளையில் கொண்டு கட்டி விட வேண்டும். ஒரு வேளை கிளையில் கட்ட முடியவில்லை என்றால் மரத்தின் அடிப்பாகத்தில் இந்த முடிச்சை வைத்து விடுங்கள். அவ்வளவு தான் இந்த பரிகாரம் முடிந்தது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லை விரைவில் அடைவதற்கான வழியை மகாலட்சுமி தாயார் காட்டுவார் என்று சொல்லப்படுகிறது. 

சனிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயார் விஷ்ணு பகவானோடு அரச மரத்தடியில் வாசம் செய்வார் என்பது ஐதீகம். அன்றைய நாளில் நம்முடைய இந்த வேண்டுதல் முடிச்சினை செலுத்தும் பொழுது நிச்சயம் அதற்கான பலன் அதிகம். இதையும் படிக்கலாமே: இந்த 2 பொருட்கள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் வீட்டில் பணக் கஷ்டம் கட்டாயம் வராது. பஞ்சத்தை விரட்டி அடிக்கும் அந்த ரகசிய பொருள் என்னவாக இருக்கும்? இந்த பரிகாரத்தை செய்த பிறகு கடன் அடைக்க நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் விரைவில் கைக்கூடி உங்களின் முழு கடனும் அடைவதோடு, நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்து அது திரும்ப வராத பட்சத்தில் இதே போன்ற பரிகாரத்தை அதற்கும் செய்யலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Share:

சம்பாதிக்கும் பணம் பல மடங்கு பெருகிக் கொண்டே செல்ல இந்த எளிமையான வழி .....





 சம்பாதிக்கும் பணம் பல மடங்கு பெருகிக் கொண்டே செல்ல இந்த எளிமையான ஏழு விஷயங்களை கடைப் பிடித்தால் போதும். ஒரு ரூபாய் சம்பாதித்தாலும் அது பல ரூபாயாக நிச்சயம் பெருகிக் கொண்டே செல்லும்.அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் எல்லாருக்கும் இவ்வுலகம் இல்லை என்ற திருவள்ளுவரின் கூற்றுக்கேற்ப பணம் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது நிதர்சனமான உண்மை அந்த பணத்தை பல மடங்கு பெருக்க எண்ணற்ற பரிகாரங்கள் இருந்தாலும் கூட நாம் அன்றாட வாழ்வில் செய்யும் சில விஷயங்களால் பண ஈர்ப்பு ஏற்பட்டு ஒரு ரூபாய் வருமானம் வந்தால் கூட அது பல மடங்கு பெருகும் வாய்ப்பு அதிகம். அது என்ன மாதிரியான பரிகாரங்கள் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பணம் சேர எளிமையான ஏழு பரிகாரங்கள் இந்த பரிகாரம் அனைத்துமே நாம் ஒரே ஒரு பொருளைக் கொண்டு தான் செய்யப் போகிறோம்.


 அது வேறு ஒன்றும் இல்லை மகாலட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு பொருளான கல் உப்பை வைத்து தான் செய்யப் போகிறோம். செல்வத்தை வாரி வழங்குபவர் மகாலட்சுமி தாயார் அவரின் பிறந்த வீடான கடலில் இருந்து தோன்றிய இந்த கல்லுப்பிற்கும் அதே தன்மை இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பரிகாரங்களும் இந்த உப்பை வைத்து தான் இப்போது நாம் செய்யப் போகிறோம். வருமானம் உங்கள் கையில் வந்த உடனே அதில் எந்த வித செலவு செய்யாமல் அந்த பணத்தை நேரடியாக கொண்டு வந்து ஒரு மண் குடுவையில் முழுவதுமாக கல் உப்பை நிரப்பி அதில் வைத்து விடுங்கள். இந்த கல்லுப்பு வீட்டில் இருந்து எடுத்து பயன்படுத்த கூடாது. புதிதாக கடையில் இருந்து வாங்கி வந்த கல்லுப்பாக இருக்க வேண்டும். அடுத்தது இந்த கல் உப்பை ஒரு சிறிய கவரில் சேர்த்து முடிச்சாக கட்டி நீங்கள் பணம் வைக்கும் பீரோவில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலமும் பணவரவு அதிகரிக்கும். இதே போல உங்களுடைய மணிப் பர்சிலும் கூட ஒரு சிறிய கவரில் கல் உப்பை போட்டு வைத்து விடுங்கள்.


 தொழில் செய்பவராக இருந்தால் வியாபாரம் செய்யும் இடத்தில் கட்டாயமாக இப்படி ஒரு சிறிய கல் உப்பு மூட்டையை வைத்து விடுங்கள். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும் வியாபாரம் பெருகும். இதே போல வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி வைத்து விடுங்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் நெகட்டிவிட்டி அனைத்தையும் இந்த கல்லுப்பு ஈர்த்து வீட்டில் நல்ல பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். இதே போல் நாம் எந்த செலவிற்காக பணத்தை கொடுப்பதாக இருந்தாலும் குறிப்பாக வாடகை அல்லது கடன் கொடுப்பது போன்றவற்றை செய்வதற்கு முன்பாக பணத்தை கல் உப்பில் வைத்த பிறகு கொடுத்தால் அந்த பணம் ஏதேனும் ஒரு வகையில் திருப்பி நமக்கு வரும். சம்பாதிக்கும் பணம் பலமடங்கு பெருகவும் நம்மிடம் இருந்து செல்லும் பணம் திரும்பி பல மடங்காக கிடைக்கவும் பணம் எப்பொழுதும் கையில் தாராளமாக புழங்கவும் இந்த கல்லுப்பை வைத்து செய்யப்படும் ஏழு பரிகாரங்களை தொடர்ந்து செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்கள் செய்து பார்த்து பலனடையலாம்

Share:

பாக்கியலட்சுமி சீரியலில் புதிய கோபி இவரா? தீயாய் பரவும் தகவல்!

பாக்கியலட்சுமி சீரியலில் புதிய கோபி இவரா? தீயாய் பரவும் தகவல்!

Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து சதீஷ் விலகுவதாக அறிவித்த நிலையில் கோபி கதாப்பாத்திரத்தில் புதிதாக நடிக்க உள்ள பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்கியா, ராதிகா, கோபி ஆகியோரை மைய்யப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இல்லத்தரசிகள் மட்டுமின்றி பல இளசுகளும் ஆண்களுமே இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலில் கோபி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சதீஷ், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் சதீஷூடன் இணைந்து `எழில்' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜே விஷால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷூடன் இணைந்து போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், `அப்பா.. நீங்க எங்கேயும் போகக் கூடாது நான் போகவும் விடமாட்டேன்!' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஹாஸ்டேக்கில் கோபி சார் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார் விஜே விஷால். இதனை தொடர்ந்து சதீஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `வாழ்க்கையில் பேசி தீர்த்துக்க முடியாத பிரச்சனை என்று எதுவுமில்லை. எவ்ளோ பெரிய பிரச்சனை என்றாலும் நம்ம நண்பர்களுடன் நமக்கு வேண்டப்பட்டவங்களோடு உட்கார்ந்து பேசினா நிச்சயம் தீர்வு கிடைக்கும்.



உங்களுக்குப் புரியுதா நான் என்ன சொல்ல வர்றேன்னு?' என ஒரு வீடியோவில் பேசியிருந்தார். மற்றொரு வீடியோவில், `இன்பாக்ஸில் நிறைய பேர் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து நான் விலகுறேன்னு சொன்னதும் போகாதீங்க என்று சொல்றீங்க, அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும், உங்களின் அன்புக்கும் ரொம்ப நன்றி. என்னால முடிஞ்ச அளவுக்கு உங்க எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன். ஷூட்டிங் பிசியா போயிட்டு இருக்கு அதனால பலருக்கு ரிப்ளை அனுப்ப முடியல.. ஃப்ரீயானதும் கண்டிப்பா ரிப்ளை பண்றேன் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோவை தொடர்ந்து சதீஷ் பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் கோபி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என தகவல் பரவியது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் பப்லூ பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பப்லு பிரீத்திவிராஜ் பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் நடித்திருந்தார் பப்லு பிரீத்திவிராஜ், சமீபத்தில் தன்னை விட 30 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்ததால் விம்ர்சனத்துக்குள்ளானார் பப்லு பிரித்திவிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


Share:

என்ன கொடுமை இது சனி நினைத்தால் எப்படியும் சாதிச்சுடுவாரோ !

ஒருதடவை பார்வதி W/o சிவபெருமான்  அழகா  ஒரு மாளிகை  கட்டினாங்க.... அதோட கிரஹபிரவேசத்துக்கு ஒரு ஜோசியர்கிட்ட  நாள் குறிக்க சொன்னாங்க... அந்த மாளிகை கட்ட  கடக்கால் போட்ட நாளை  ஆராய்ஞ்ச அந்த ஜோசியர் சொன்னார்..." நீங்க  இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட  நேரம் சனி உச்சத்துல  இருந்த நேரம்.. அதனால  நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும்  இந்த  மாளிகை நிலைக்காது... அதனால  நீங்களே  இடிச்சுடுங்க"

இத கேட்ட பார்வதி  செம்ம கடுப்ப்பாயிட்டாங்க.... லோகத்துக்கே பெரிய சாமியோட  பொண்டாட்டி நான்.... பிசாத்து சனி  என்னோட மாளிகைய  இடிக்கிறதா.... நெவெர்... அப்படின்னு  பொங்கல் வச்சாங்க....  


புருஷன  கூப்பிட்டு.... "யோவ்..... நீ  இப்போவே  அந்த சனிய பார்த்து..... இன்ன மாதிரி  எம்பொண்டாட்டி  ஒரு  பங்களா  கட்டி இருக்கா.... அதுல  நீ என்னவோ வேலை காட்ட  போறியாம்... அதெல்லாம்  வேண்டாம்"ன்னு  சொல்லிட்டு  வா" ன்னாங்க..


உடனே  சிவன் சொன்னார்...  புரிஞ்சுக்கோ  பாரு..... நான் பெரிய சாமியா  இருந்தாலும்... மத்தவங்க வேலைல குறுக்கிட்றது இல்ல.... தவிர... சனி  எப்போவுமே  பெர்பெக்ட்....  நானே சொன்னா  கூட  அவன்  மாத்தமாட்டான் ன்னு  சொன்னார்...


புருஷன் சொன்னத   எந்த பொண்டாட்டி தான் கேட்டிருக்கா.... நம்ம சிவன் பொண்டாட்டி மட்டும் கேட்க??


சோ.....  சிவன  பட்னி போட்டுட்டா.... வேற வழி இல்லாம  சனிய பார்க்கலாம்னு  கிளம்பிட்டார்... ஆனா, போறதுக்கு  முன்னாடி  பாருவ  கூப்பிட்டு..... "இதோ  பார்  பாரு....  உடனே  நீ ஒரு  பொக்லைன்  ரெடி பண்ணி  வை......நான் போய் சனிகிட்ட பேசி  பார்க்கிறேன்.... அவன் ஒத்துகிட்டா  ஒன்னும் பிரச்சினை  இல்ல... இன்கேஸ்  அவன் ஒத்துக்கலன்னா.... நான்  அங்க  இருந்து  என்னோட  உடுக்கைய  அடிக்கிறேன்.....   நீ உடனே  பொக்லைன்  வச்சு  மாளிகைய  இடிச்சுடு.... யாரும்  கேட்டா  , எனக்கு டிசைன் புடிக்கல.... வேற  கட்ட போறேன்னு  கெத்தா  சொல்லிடு..."ன்னு சொன்னார்...

சரின்னு  பார்வதியும் ஒத்துகிட்டாங்க....

சிவன் சனிகிட்ட  போய் " உன்கிட்ட  கேக்க  ஒரு  மாதிரியாத்தான்  இருக்கு.... ஆனா  வேற  வழி  இல்ல....... இந்த பார்வதி  பெரிய  பிரச்சினை பண்றா... நாலுநாளா   உலை கூட  வைக்கல.....  உன்னால  அந்த  பில்டிங்க்கு  ஏதும் பிரச்சினை வராம  பார்த்துக்க...." என்றார்...


உடனே  சனி...."அய்யனே... இதுக்கு  நீங்க  நேர்ல  வரணுமா... ஒரு போன் பண்ணி  இருக்கலாமே..."ன்னு சொல்லிட்டு.....  "நீங்களே  சொன்னப்புறம்  நான் எப்படிய்யா  மறுக்க  முடியும்....  சரி.... நான் ஒன்னும்  பண்ணல.... ஆனா  எனக்கொரு  ஆசை.... அத  நீங்கதான்  நிறைவேத்தனும்.."ன்னு கேட்டார்...


சனி  ஒத்துகிட்ட  சந்தோஷத்துல  சிவனும்..."சொல்லு.. சொல்லு.... நம்ம  புள்ள  நீ.... உனக்கு  செய்யாம  வேற  யாருக்கு  செய்ய போறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டார்...

"உங்க  உக்கிர தாண்டவத்த  பார்த்து  ரொம்ப  காலமாச்சு.... எனக்காக  ஒருதடவை  ஆடிக்காட்ட  முடியுமா "- சனி


"அதுக்கென்ன.... பேஷா  ஆடிடலாம்" ன்னு  சிவன்  ஆட  ஆரம்பிச்சார்.... சிவன்  ஆட  ஆட... உடுக்கை  தன்னால  குலுங்கியது.....  உடுக்கை சத்தம் கேட்டதும்... பார்வதி... "ஆஹா.... இந்த  சனிப்பய  ஒத்துக்கல  போல..... எங்கயாச்சும்  சிக்காமையா  போய்டுவான்....  அப்போ  இருக்கு  அவனுக்கு..." என்று  கருவிக்கொண்டே, பொக்லைன் டிரைவர  கூப்பிட்டு  நீ உடனே  அந்த  பில்டிங்க  உடைச்சுடு...ன்னு  ஆர்டர்  போட்டாங்க...

சிவன்  திரும்பி வந்து  பார்த்தா... பில்டிங்  தரைமட்டமா  கெடக்கு..... "ஏன்  பாரு  ... நான் சொன்னதும் தான்  சனி  ஒத்துகிட்டானே.... பின்ன  ஏன்  இடிச்ச...."


"நீங்கதானே  சொன்னீங்க... உடுக்கை சத்தம் கேட்டா  இடிக்க சொல்லி.."ன்னா  பாரு...

ஆக... சனி  நினைச்சுட்டா  யார் தடுத்தாலும்  அவன் நினைச்சத  சாதிச்சுடுவான்...

நம்மள ரொம்ப சோதிக்காம எதார்த்த நடையில் எழுதி இருந்ததால் என்னை கவர்ந்த நட்பின் பதிவு .

நான் படிச்ச பதிவுகள்ல அதிகமா சிரிச்சு வச்ச ஒரு பதிவும் நடைமுறை எதார்த்தத்தை சொன்ன பதிவும் இது🙏🙏🙏😊😍


Share:

தொடக்கக்கல்வி - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான உத்தேச வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் (Leave List) மற்றும் பயிற்சி நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்!


தொடக்கக்கல்வி - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான உத்தேச வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் (Leave List) மற்றும் பயிற்சி நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்  DEE - Details of proposed working days, holidays and training days for academic year 2023-2024 - on one page  School Calendar 2023 - 2024

 ( Single Page ) Pdf - Download here

Share:

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 2023 - help line Number

IMPORTANT MESSAGE

இனி பள்ளி அளவில் EMIS சார்ந்து technical issues ஏதேனும் இருந்தால், தற்போது மாறுதல் விண்ணப்பத்தில் ஏற்படும் சந்தேகம் இருந்தால்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 14417 என்ற மாநில அளவிலான help line எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் போது அழைப்பதற்கான  நோக்கத்துடன் 

School - udise number

Tracher - Tr 8 digit ID

Students - emis number 

உடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.

Here after, Please call 14417 for any kind of EMIS related issues

Thank you.

Share:

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த 6 மாதம் அவகாசம்!


தமிழகம் முழுதும் உள்ள, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு, தகுதியான உறுப்பினர்களை சேர்க்கும் வரை, தேர்தல் நடத்த தடை கோரி, ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.   வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''உறுப்பினர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.    கூட்டுறவு சங்கங்கள், தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சினேகா, ''குறைகளை நிவர்த்தி செய்ய, அரசு, ஆறு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது; இதுகுறித்து, நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்,'' என்றார்.    இதைப்பதிவு செய்த நீதிபதிகள், உறுப்பினர் பட்டியலை திருத்த, ஆறு மாத கால அவகாசம் வழங்கினர். அதன்பின் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Share:

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் குறைத்து வழங்குவதாக புகார்.!

 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் குறைத்து வழங்குவதாக புகார்.!



பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணியின்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மதிப்பெண்களை குறைத்து வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 60,000 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், பாரபட்சமாக செயல்படுவதாகவும், அரசுப் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களுக்கு குறைத்து மதிப்பெண் தருவதாகவும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாரபட்சத்தோடு தான் செயல்படுகின்றனர். விடைத்தாள் திருத்தும் போது ‘கீ வேர்டு’ விடைகளுக்கு முழு மதிப்பெண் அளிக்கலாம். ஆனால், முழு மதிப்பெண்ணை அவர்கள் தருவதில்லை. அதேபோல், கணிதப் பாடத்தில் விடை சரியாக இருப்பின் முழு மதிப்பெண் அளிக்க முடியும். அதிலும் அவர்கள் குறைத்தே மதிப்பெண் அளிக்கின்றனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்.

இதுபற்றி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மான்ட் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் விடைத்தாள் தமிழிலும், தனியார் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் ஆங்கிலத்திலும் இருக்கும். இதைவைத்து திருத்துதல் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் விடைத்தாள்களை அடையாளம் காண முடியும். அரசுப் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைத்துதான் மதிப்பெண் வழங்குகின்றனர்.

கடந்தாண்டு திண்டுக்கல் மாவட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் நாமக்கல் மாவட்டத்தில் திருத்தப்பட்டது. அதில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 13 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளே அதிகம். இதன்மூலமே அவர்கள் விடைத்தாள்களை எப்படி திருத்தியிருப்பார்கள் என அறியமுடியும்.

அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை பொறுத்தவரை, ஒரு மாணவர் 33 மதிப்பெண் பெற்றிருந்தால் கூட, கீ வேர்டு விடைகளுக்கு முழு மதிப்பெண் அளித்து, அவர்களை தேர்ச்சி பெற வைப்பர். ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதுபோல் செய்வதில்லை. இதனால் தோல்வி பெறும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.


இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மேல்நிலைப் பள்ளி உதவியாளர் செந்தில்குமார் கூறுகையில், ‘‘எந்தவொரு ஒரு ஆசிரியரும் தனது விருப்பு வெறுப்பு அடிப்படையில் விடைத்தாள்களை திருத்த இயலாது. அரசு விடைத்தாள் திருத்துவதற்கு விதிமுறைகள் வகுத்து, கீ வேர்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விடை அளித்திருந்தால் முழு மதிப்பெண் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒரு ஆசிரியர் மதிப்பெண் திருத்தி முடித்தபின், அந்த விடைத்தாளை 2 மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்வர். அப்போது ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் கண்டுபிடித்து நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர். எனவே மதிப்பெண்களை குறைத்தோ, அதிகரித்தோ வழங்க வாய்ப்பில்லை’’ என்றார்.

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘பொதுவாக தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துதல் முறை சற்று கண்டிப்புடனே இருக்கும். சரியான பதில்கள் இருந்தால் மட்டுமே முழுமதிப்பெண் வழங்குவர். மற்றபடி திட்டமிட்டு மதிப்பெண்களை குறைத்து வழங்க முடியாது. ஏனெனில், விடைத்தாள் திருத்தும் மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களே இருப்பதால் தவறுநடக்க வாய்ப்பில்லை’’ என்றனர்.


Share:

School Academic Calendar 2023 - 2024 ( Single Page )

 School Academic Calendar 2023 - 2024 ( Single Page )




தொடக்கக்கல்வி - 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான உத்தேச வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் (Leave List) மற்றும் பயிற்சி நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில் 

DEE - Details of proposed working days, holidays and training days for academic year 2023-2024 - on one page


School Calendar 2023 - 2024 ( Single Page ) Pdf - Download here

Share:

முதலமைச்சரின் மண்டல வாரியான ஆய்வு கூட்டத்திற்கு அனுப்ப வேண்டிய விவரங்கள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 முதலமைச்சரின் மண்டல வாரியான ஆய்வு கூட்டத்திற்கு அனுப்ப வேண்டிய விவரங்கள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

முதலமைச்சரின் மண்டல வாரியான ஆய்வு கூட்டத்திற்கு அனுப்ப வேண்டிய விவரங்கள் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.




Share:

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 2023 - help line Number..!

 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 2023 - help line Number..!

இனி பள்ளி அளவில் EMIS சார்ந்து technical issues ஏதேனும் இருந்தால், தற்போது மாறுதல் விண்ணப்பத்தில் ஏற்படும் சந்தேகம் இருந்தால்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 14417 என்ற மாநில அளவிலான help line எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் போது அழைப்பதற்கான  நோக்கத்துடன் 

School - udise number

Tracher - Tr 8 digit ID

Students - emis number 

உடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.

Here after, Please call 14417 for any kind of EMIS related issues

Thank you.

Share:

2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்..!!

 2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்..!!

2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு இன்று (28.04.2023) அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்.




Share:

TNPSC - தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!


டிஎன்பிஎஸ்சி குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. https://www.tnpsc.gov.in/ என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Share:

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்!

2022-2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு இன்று (28.04.2023) அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கை விண்ணப்பம்.





Share:

2023 - 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!


2023 - 2024  ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!

TN SCHOOL CALENDAR 2023 -2024 - PDF DOWNLOAD

Share:

4 ,5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 01.06.23 முதல் 03.06.23 வரை வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி!


4 ,5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பருவம் 1க்கான வட்டார அளவிலான  எண்ணும் எழுத்தும் பயிற்சி 01.06.23 முதல் 03.06.23 வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஜூன் 2023 மாத நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share:

எண்ணும் எழுத்தும் மூன்று பருவங்களுக்கான மதிப்பெண் பட்டியல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியதில்லை தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவிப்பு..!!

 எண்ணும் எழுத்தும் மூன்று பருவங்களுக்கான மதிப்பெண் பட்டியல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியதில்லை தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவிப்பு..!!

Kind attention all BEOS

Don't insist submission of all 3 terms Ennum Ezhuthum results hard copy by schools as it will be provided through EMIS


Director DEE

Share:

கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.!

 கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.!

கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் தொடங்கும். 2024 மார்ச் 18ல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Share:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் மீண்டும் ஆலோசனை!

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் மீண்டும் ஆலோசனை!

தமிழகத்தில் 1-9 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நாளை சனிக்கிழமை (ஏப்.29)  முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் (2022-23) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த ஜூன் 13-இல் திறக்கப்பட்டன. எனினும், பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் பொதுத் தோ்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான ஆண்டு இறுதித் தோ்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்டவாரியாக ஏப்.11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நிகழாண்டு அனைத்து வகை பள்ளிகளுக்குமான வேலை நாள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இறுதிநாளில் எஞ்சியுள்ள தோ்வு மட்டும் மாணவா்களுக்கு நடத்தப்படவுள்ளது.

அதன்பிறகு, மாணவா்களுக்கு சனிக்கிழமை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. சுமாா் ஒரு மாதம் விடுப்பு முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரம் திறக்கப்படும்.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Share:

1 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகத்தில் பள்ளி மீண்டும் திறக்கும் தேதி -அதிரடி அறிவிப்பு!

பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிகின்றன. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள், 18ம் தேதி முதல் நடத்தப்பட்டன. இன்றுடன் அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் முடிகின்றன.

நாளை முதல், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன் 1ல் பள்ளிகளை திறக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கத்துக்கு ஏற்ப, பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

Share:

மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என பெயர் வைத்து அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 20.03.2023 - ஆம் நாளன்று 2023-2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை முன்வைத்து மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையில் ஏனையவற்றுடன் மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் குறித்து கீழ்க்கண்டவாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



Share:

பணியிட மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)!



பணிமாறுதல் செய்திகள்:
மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)
1. முற்றிலும் கண் பார்வையற்றவர் (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)

2. மாற்றுத்திறனாளிகள் (40%க்கும் மேல் உள்ளவர்கள்)- (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)

3. மனவளர்ச்சி குன்றிய/ மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் - (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)

4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை/ டயாலிசிஸ் சிகிச்சை/ இருதய அறுவை சிகிச்சை/ புற்றுநோயாளிகள் / மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - (அரசு/தனியார் சிவில் சர்ஜன் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ ஆவணம்)

5. இராணுவத்தில் பணிபுரியும் துணைவர் உடையவர்கள் (சான்று)

6. கணவன்/ மனைவியை இழந்தவர்கள் (வருவாய் கோட்டாட்சியர் சான்றிதழ்)

7. தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் (பதவி உயர்வு/ மாறுதல் ஆணை)

8. கணவன் மனைவி பணி முன்னுரிமை

(Spouse certificate) CLICK HERE 


Share:

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காகித மாற்றுச் சான்றித ழுக்கு பதில், 'டிஜிட்டல்' மாற்றுச் சான்றிதழ்!


அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காகித மாற்றுச் சான்றித ழுக்கு பதில், 'டிஜிட்டல்' மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளி மாறும்போது மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த சான்றிதழை வைத்தே, மாணவர்கள் மற்ற பள்ளிகளில் சேருவர். இந்த மாற்றுச் சான்றிதழ்கள், ஆண்டாண்டு காலமாக பதிவேட்டு புத்தகமாக, பள்ளிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளதால், பள்ளிக் கல்வியில் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தளமான 'எமிஸ்' வழியே இணைக்கப்பட்டு உள்ளன.

இதை பயன்படுத்தி, இனிவரும் காலங்களில், மாணவர்களுக்கு டிஜிட்டல் மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு, பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

இந்த டிஜிட்டல் மாற்றுச் சான்றிதழை, அச்செடுத்து பெற்றோர் பயன்படுத்தலாம். இதனால், போலியான மாற்றுச் சான்றிதழ்கள் பயன்படுத்தப்படாமல் தடுக்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Share:

மே 1ம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறை.. ஜூன் 12ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!


மே 1ம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறை.. ஜூன் 12ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை:

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் மாநில வாரியாக வெளியாகி வருகிறது. மேலும், 2022- 2023ம் கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் வெயில் மிகவும் அதிகமாக இருப்பதால் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில், ஆந்திரா மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாகவும், ஏப்ரல் 30ம் தேதி தான் இறுதி வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் தேர்வு முடிவுகளை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்தாய்வு நடத்தி தெரிவிக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் கட்டாயம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதி முதல் 2023 – 2024 ம் கல்வி ஆண்டு தொடங்கும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில்:

  தமிழகத்தைப் பொருத்தவரை 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4ம் தேதியும் ,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதியும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 20 ம் தேதியுடனும் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 28 கடைசி வேலை நாளாக இருந்த பட்சத்தில் தமிழகத்தினுடைய பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தற்போது பள்ளிகள் திறப்பு என்பது அறிவிக்கப்படவில்லை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது வரை தமிழகத்தில் பள்ளி திறக்கும் தேதி என்பது நிச்சயிக்கப்படாத நிலையில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் வழக்கம் போல் என்ற நிலை உள்ளது. இதன் படி பார்த்தால் பள்ளிகள் திறக்கும் தேதி என்பது இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


Share:

TNTET Paper 2 - நியமனத் தேர்விற்கான பாடத்திட்டம் தெரியுமா? பார்க்கலாம் வாங்க! பதிவறக்கம் இங்கே உள்ளது..


TNTET Paper 2 - நியமனத் தேர்விற்கான பாடத்திட்டம் தெரியுமா? பார்க்கலாம் வாங்க! பதிவறக்கம் இங்கே உள்Syllabus

 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்விற்கான தாள் ஒன்று தாள் இரண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிந்த அவர்கள் நியமன தேர்விற்கான பாடத் திட்டத்தை பதிவிறக்கம் செய்வது எப்படி உங்களுக்கான பாடத்திட்ட வரைவு என்னென்ன? என்பதனை இங்கே நீங்கள் காணலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து டிஆர்பி official வெப்சைட்டில் இருந்து பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை ஆனால் தாள் இரண்டு மற்றும் தாள் ஒன்றிற்கான நியமனத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு 2021ல் வெளியிடப்பட்ட நிலையில் ஆசிரியர் தேர்வு துறையில் இருந்து தேர்வு வரைவு பாடத்திட்டம் இப்படி இருக்கலாம் என்ற ஒரு கண்ணோட்டத்தில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு நியமன தேர்விற்கான பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டது அந்த பாடத்திட்ட வரைவினை  நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இது வெளியிடப்பட்ட ஆண்டு 2021 .இப்பொழுது இருந்து நீங்கள் தேர்விற்கு தயாராவதன் மூலமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமன தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே இருந்து நீங்கள் தொடங்கலாம்.

UGTRB SYLLABUS (SGT,GT SYLLABUS)

Tamil UGTRB Syllabus

English UGTRB Syllabus

Maths UGTRB Syllabus

Physics UGTRB Syllabus

Chemistry UGTRB Syllabus

Botany UGTRB Syllabus

Zoology UGTRB Syllabus

Geography UGTRB Syllabus

History UGTRB Syllabus

Share:

Paper 2 UGTRB - Geography நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

Paper 2 UGTRB - Geography நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

 Geography

Paper 2 UGTRB - Geography நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus) 👇 

Download here

Share:

Paper 2 UGTRB - History நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

Paper 2 UGTRB - History நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

 History

Paper 2 UGTRB - History நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus) 👇 

Download here

Share:

Paper 2 UGTRB - Zoology நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

Paper 2 UGTRB - Zoology நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

 Zoology

Paper 2 UGTRB - Zoology நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus) 👇 

Download here

Share:

Paper 2 UGTRB - Botany நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

Paper 2 UGTRB - Botany நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

 Botany

Paper 2 UGTRB - Botany நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus) 👇 

Download here

Share:

Paper 2 UGTRB - Chemistry நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

Paper 2 UGTRB - Chemistry நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

 Chemistry

Paper 2 UGTRB - chemistry நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus) 👇 

Download here

Share:

Paper 2 UGTRB - Physics நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

Paper 2 UGTRB - Physics நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

 Physics

Paper 2 UGTRB - Physics நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus) 👇 

Download here

Share:

Paper 2 UGTRB - Maths நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

Paper 2 UGTRB - Maths நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

 Maths

Paper 2 UGTRB - Maths நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus) 👇 

Download here

Share:

Paper 2 UGTRB - English நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

Paper 2 UGTRB - English நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

 English

Paper 2 UGTRB - English நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus) 👇 

Download here

Share:

Paper 2 UGTRB - Tamil நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

Paper 2 UGTRB - Tamil நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus)

 Tamil

Paper 2 UGTRB - Tamil நியமனத்தேர்வு பாடத்திட்டம் ( Syllabus) 👇 

Download here

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support