100% ஸ்காலர்ஷிப் தேர்வு,வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம்
வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம் சார்பில்சென்னை, மதுரையில் 2024 நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 14-ம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து வெற்றி ஐஏஎஸ் கல்வி மைய இயக்குநர் மு.சண்முகம் கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளாக யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முன்னணி நிறுவனமாகத் திகழும் வெற்றி ஐஏஎஸ் கல்வி மையம், நீட் தேர்வு பயிற்சிக்காக 'வெற்றி நீட் கேட்வே' (Vetri NEET Gateway) என்ற பயிற்சிப் பிரிவைத் தொடங்கி இருக்கிறது.
இதை ஐபிஎஸ் அதிகாரி பிரசன்ன குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நீட் பிரிவு செயல் அதிகாரி ஆர்.தினகரன் மற்றும் பயிற்சி மையத்தின் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
2024-ம் ஆண்டுக்கான நீட் தேர்வை முன்னிட்டு, வெற்றி நீட் கேட்வே சார்பில் சென்னை மற்றும் மதுரை அலுவலகங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என தனித்தனியே விடுதி வசதி, 50-க்கும் மேற்பட்ட தேர்வு தொடர்கள், நேரடி, ஆன்-லைன் மற்றும் பதிவு செய்யப்பட்ட பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.
நாள்தோறும் 60 கேள்விகள் கொண்ட தேர்வு, வாரந்தோறும் 120 கேள்விகளை உள்ளடக்கிய யூனிட் தேர்வு மற்றும் மாதந்தோறும் 200 கேள்விகளுடன் கூடிய நீட் மாடல் தேர்வு நடைபெற இருக்கிறது.
100% ஸ்காலர்ஷிப் தேர்வு: மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தேர்வு வரும் 9, 12, 23 ஆகிய தேதிகளில் (காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை) நடைபெறுகிறது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 9884421666, 9884432666 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.www.vetriineet.comஎன்ற இணையதளத்தைக் காணலாம் என்றார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.