தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் என்று வெளியிட்டுள்ளார்.
தேர்வு முடிவுகள்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத சூழ்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு 10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பான முறையில் மே - 5 தொடங்கி மே 31-ஆம் தேதி வரை தேர்வுகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டன .
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 ம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதி முடிவடைந்தது. 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன .
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவதாக இருந்த சூழ்நிலையில் தற்போது பள்ளி கல்வித் துறையில் இருந்து தேர்வு முடிவுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன .
அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதியும்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது அதுவும் மாற்றம் செய்யப்பட்டு ஜூன் 20ஆம் தேதி
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ல் வெளியீடு*
*நாளை வெளியாவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளி வைப்பு*
*10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ம் தேதி காலை 9.30க்கு வெளியீடு – தேர்வுத்துறை*
*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்*
*தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்து கொள்ளலாம் – தேர்வுத்துறை
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.