WhatsApp பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி ஒரு குரூப்பில் 512 நபர்கள் வரை சேரலாம்!

WhatsApp பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி ஒரு குரூப்பில் 512 நபர்கள் வரை சேரலாம்!

WhatsApp குரூப்பில் தற்போது வரைக்கும் 256 உறுப்பினர்கள் வரை சேர்ந்துகொள்ளும் படியான வசதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கூடுதலாக ஒரு குரூப்பில் மட்டுமே 512 பேர் வரை சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி ஒரு குரூப்பில் 512 நபர்கள் வரை சேரலாம்!
WhatsApp பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி ஒரு குரூப்பில் 512 நபர்கள் வரை சேரலாம்!


WhatsApp Group 512:

Meta நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் whatsapp செயலியை உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கில் மக்கள் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். மற்ற App களை காட்டிலும் whatsapp app இல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளதால் தங்களது வேலை விஷயத்திற்காகவும் வாட்ஸ்ஆஃப் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். மேலும், வாட்ஸ்ஆஃப் பயனாளர்களுக்கு அவ்வப்போது கூடுதல் வசதிகளுடன் கூடிய அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளர் உலகில் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கூட இலவசமாக புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் வாட்ஸ்ஆஃப் செயலியில் குறுஞ்செய்திக்கு ரியாக்ட் செய்யும்படியான வசதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாட்ஸ்ஆஃப் குரூப்பில் அனுப்பப்படும் செய்தியை அனுப்பும் பயனாளர் மட்டுமே நீக்கும்படியான வசதி கொடுக்கப்பட்டது. ஆனால், வாட்ஸ்ஆஃப் குரூப்பில் மற்றவர் அனுப்பும் செய்தியை குரூப் அட்மின் நீக்கும்படியான வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தேவையற்ற வதந்திகள் தவிர்க்கப்படும் என்பதற்காக தான் குரூப் அட்மின் செய்தியை டெலிட் செய்யும்படியான அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே வாட்ஸ்ஆஃப் குரூப்பில் 256 உறுப்பினர்கள் சேர்க்கும்படியான வசதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக ஒரு வாட்ஸ்ஆஃப் குரூப்பில் மட்டுமே 512 உறுப்பினர்கள் வரைக்கும் சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்ஆஃப்பில் 2GB வரைக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிரலாம் எனவும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...