பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - CEO Proceedings
பள்ளிக் கல்வி - 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான அரசு / நகராட்சி /ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி பெறும் / மெட்ரிக் / சுயநிதி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளமை - அனைத்து தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் -தொடர்பாக,
![]() |
பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - CEO Proceeding |
அறிவுரைகள்:
2022 - 2023 ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல / அரசு நிதியுதவி பெறும் மெட்ரிக் / சுயநிதி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01 முதல் 10 ஆம் வகுப்புகள் வரை 13.06.2022 அன்றும் 12-ஆம் வகுப்புகள் 20.06.2022 அன்றும் மற்றும் 11-ம் வகுப்பு 27.06.2022 அன்றும் திறக்கப்படவுள்ளது. அதன்படி உரிய அறிவுரைகள் அனைத்து பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
1. பள்ளி வளாகங்களில் உள்ள புதர்கள், குப்பைகள் மற்றும் இலை சருகுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி பள்ளி வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது,
2. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்க தொட்டிகளை கிராம ஊராட்சி பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்திடவேண்டும்.
3. பள்ளியில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு / மின் கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து உடனே சரிசெய்திடவேண்டும்.
4. பள்ளியில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, கழிப்பறைகள் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
5. பள்ளி திறக்கப்படும் நாளுக்கு முன்னதாக பள்ளி பேருந்து முழுவதும் பரிசோதிக்கப்பட்டு நல்ல நிலையில் பாதுகாப்பாக இயங்கக்கூடிய நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்யப்பட்ட பின்னர் பேருந்து இயக்கப்படவேண்டும். இதனை தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் உறுதிப்படுத்தவேண்டும்.
6. பள்ளியில் உள்ள சத்துணவு கூடங்களை சுத்தப்படுத்தி முறையாக பராமரிக்கப்படுவதை கண்காணித்து மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள்உறுதி செய்திடல் வேண்டும்.)
7. பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்கள் எண்ணிக்கைகேற்ப பாடநூல்கள் பள்ளியில் பெறப்பட்டதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும்.
8. மேலும் அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்.
மேற்காண் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி செயல்படுமாறு அனைத்து தொடக்க / நடுநிலை / அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நல / அரசு நிதியுதவி பெறும் / மெட்ரிக் | கயநிதி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கிடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.