தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் – கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!
புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் முடிவு செய்யப்பட்டதற்கான அறிக்கையை கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான அக்பர் அலி, முதலமைச்சர் ரங்கசாமியின் சமர்ப்பித்தார்கள்.
தனியார் கல்வி கட்டணம்
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு உத்தரவு விடுத்திருந்தது. தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை முறையாக 40 மற்றும் 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி இந்த வழக்குகள், பள்ளிகள் 85 சதவீத கட்டணம் வசூலித்து கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கம் செய்யப்படமாட்டார்கள் எனவும், தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகள் அதை விட அதிகமாக கட்டணம் வசூலித்தாக தெரிகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் முடிவு தொடர்பாக கல்விக் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கி இருக்கிறார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.