தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு.
தமிழகத்தில் அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பள்ளிகள் வருகிற ஜூன் 13ம் தேதி அன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமோ என்ற குழப்பம் உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு. |
தமிழகத்தில் பள்ளி திறப்பு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் வரும் கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
அதன்படி வரும் கல்வியாண்டு திறக்கப்படுவதற்கான தேதிகளை குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது,
- 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்
- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்று அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
📲TNEA (Engineering) CUT OFF Calculator* https://www.padavelai.com/2022/06/engineering-tnea-cut-off-mark.html
*💻TNAU (Agriculture) CUT OFF Calculator* https://www.padavelai.com/2022/06/agricultural-tnau-cut-off-mark.html
*💻Paramedical Courses CUT OFF Calculator* https://www.padavelai.com/2022/06/paramedical-courses-cut-off-mark.html
*💻Arts & Science Courses CUT OFF Calculator* https://www.padavelai.com/2022/06/arts-science-cut-off-mark-calculator.html
📲அனைவருக்கும் பகிரவும்📲
அதனால் 2022-2023 புதிய கல்வியாண்டில் பள்ளி திறப்பு திட்டமிட்டபடி திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது, தமிழகத்தில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொடும்போது பள்ளி திறப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.