தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விடுப்பு எடுக்க புதிய செயலி அறிமுகம்!

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விடுப்பு எடுக்க புதிய செயலி அறிமுகம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விடுப்பு எடுக்க புதிய செயலி அறிமுகம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விடுப்பு எடுக்க புதிய செயலி அறிமுகம்!

தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல் உள்ளிட்ட தேவைகளுக்காக உயர் அலுவரிடம் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு விடுப்பு எடுப்பதற்கான செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றுள்ளது. இதையடுத்து இந்த கல்வியாண்டு நேற்று (ஜூன் 13) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கான TNSED-Schools என்ற இணையதள செயலியை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மேலும் இது போன்ற தேவைகளுக்கு உயர் அலுவலரிடம் சென்று எழுத்து வடிவில் விண்ணப்பிக்க வேண்டும். இதனால் ஆசிரியர்களுக்கு கால தாமதமும் அத்துடன் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் TNSED-Schools என்ற செயலியை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி கடந்த மே 25ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த செயலியை பயன்படுத்தி இனி அரசு / அரசு உதவி பெறும் / தொடக்கப் பள்ளிகள் / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தங்களின் கைப்பேசியை பயன்படுத்தி தங்கள் பணி சார்ந்த தேவைகள் மற்றும் விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி உள்ளிட்ட தேவைகளை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் TNSED-Schools என்ற செயலியை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி தலைமையசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...