தமிழக மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.

தமிழக மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதனால் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கடந்த ஒரு வரமாக கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னையில் 9, 13 வது மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஐடிஐ மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் மாணவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகள் திறப்பு மாற்றப்படுமா

இதனால் பள்ளிகள் திறப்பு ஓத்தி வைக்கபடுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடி செய்யப்பட்டு படியாக பள்ளிகள் மீண்டும் திறக்க ஆரம்பித்தது. அதனால் 2021 – 2022 ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு வகுப்பு வாரியாக தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. 12-ஆம் வகுப்பிற்கு ஜூன் 20-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பிற்கு ஜூன் 27-ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்றும் 1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு மாற்றப்படுமா என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது வரை 2022 – 2022ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு தகவல்கள் வரும். மேலும் எதுவாக இருந்தாலும் முதல்வர் தான் மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார் முதல்வரின் உத்தரவை நங்கள் பின்பற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...