தமிழகத்தில் ஜூன் 20, 27ம் தேதிகளில் பள்ளிகள் திறப்பு – 11 - 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கும் நிலையில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் ஜூன் 20, 27ம் தேதிகளில் பள்ளிகள் திறப்பு – 11 - 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு! |
பள்ளிகள் திறப்பு:
இந்த கல்வியாண்டில் மாணவர்கள் பழைய முறைப்படி வகுப்புகளுக்கு வர இருக்கின்றனர். அதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வர தயாராகி வருகின்றனர். கொரோனா அச்சம் இல்லாமல் இந்த ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் எந்தவித கால தாமதமும் இல்லாமல் திட்டமிட்டபடி வகுப்புகள் நடைபெற இருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் மே 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13 ஆம் தேதி முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை சரியான நேரத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு எந்தவித அச்சமும் இல்லாமல் மாணவர்கள் செல்ல இருப்பதால் மாணவர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
1 Comments
Ohh super
ReplyDelete1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.