1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு!

1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 

1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு!
1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு!


அதே போல் தமிழகத்தில் 

  1. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதியும்
  2. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதியும் 
  3. 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் அதில் எவ்வித மாறுபாடும் கிடையாது என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் அவர்களும் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு 2022 கல்வியாண்டு:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பேரலை கடந்த 2020ம் ஆண்டு முதல் மிகவும் மோசமான அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் பாடங்கள் முழுவதுமாக ஆன்லைன் முறையில் தான் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் இதே நிலை நீடித்ததால் ஆன்லைன் வழி கல்வி தான் தொடர்ந்தது.

ஆனால் அதன்பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கியதால் முன்னதாக உயர்வகுப்பு மாணவர்களுக்கும், அதன்பின்னர் ஆரம்ப நிலை வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டு வெற்றிகரமாக முடிந்து தற்போது மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது, புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 

  • 1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23, 2022 முதல் திறக்கப்படும் 

என்று தெரிவித்துள்ளார். மேலும், 

  • 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் 

என்றும் அவர் கூறினார். 

  • 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மீண்டும் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் 

என தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments