தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பள்ளிகளில் தூய்மை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!

முக்கிய உத்தரவு:

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாகவே, பொதுத் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி மே இறுதி வாரம் வரை நடைபெற்றது. இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் தற்போது கோடை விடுமுறையில் உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தொடங்கும் தேதிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் உத்தரவில், தமிழகத்தில் வரும் 2022- 23 ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், வரும் கல்வியாண்டிலிருந்து கொரோனா கால அட்டவணை போல அல்லாமல், வழக்கம் போல பள்ளிகள் செயல்படத் தொடங்கும் என்ற முக்கிய அறிவிப்பினையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வருகிற 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், சென்னை முழுவதும் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் படுவேகமாக நடந்து வருகின்றன. மேலும் தமிழகம் முழுவதும், தூய்மை பணியாளர்கள் தீவிரமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், குடோன்களில் இருந்து பாடப்புத்தகங்கள், சீருடைகள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...