தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல்வர் தொடங்கி வைக்கும் புதிய திட்டம்!

தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல்வர் தொடங்கி வைக்கும் புதிய திட்டம்!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 13ம் தேதி அன்று என்னும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல்வர் தொடங்கி வைக்கும் புதிய திட்டம்!
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல்வர் தொடங்கி வைக்கும் புதிய திட்டம்!

எண்ணும் எழுத்தும்:

தமிழகத்தில் பள்ளிக் கல்வியில், அரசு தொடர் கவனம் செலுத்தி வருகிறது. மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் நோக்கில் அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு கல்விதொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் ஊரடங்கு காலத்திலும் வீட்டில் இருந்து கல்வி பயின்று வந்தனர். அதனை தொடர்ந்து இல்லம் தேடி கல்வி திட்டம் நடைமுறைப்படுத்த பட்டது. பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல்வர் தொடங்கி வைக்கும் புதிய திட்டம்!
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல்வர் தொடங்கி வைக்கும் புதிய திட்டம்!

அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்க 1 – 3ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 2025 ம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை செயல்படுத்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் மூன்று வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் பாடக்கருத்துகளுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும். 2022-2023 ஆம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளன்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...