தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வருகிற ஜூன் 13 ல் பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்ற பெற்றோர்களது கேள்விகளுக்கு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 2022-2023:

கடந்த 2 ஆண்டுகளாக நாட்டை புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் இந்த ஆண்டும் மீண்டும் உருவெடுத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பரவலின் தாக்கம் குறித்த சமயத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்த கையோடு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. மேலும், ஜூன் 13ம் தெத்து பள்ளிகள் திறப்பு என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து பாதிப்படைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

  1. இந்த சமயம் எப்படி பள்ளிகள் திறக்க முடியும்? 
  2. திறப்பது மாணவர்களுக்கு பாதுகாப்பா? 

என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அதற்க்கு கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, இன்று செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. பொதுவாக மாற்றங்கள் எதுவும் வருகிறது, ஊரடங்கு வருகிறது, மாஸ்க் கட்டாயம் என இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டால் முதலில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

முதல்வர் தான் மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து இதுதொடர்பான முடிவை எடுப்பார். எனவே முதல்வரின் உத்தரவை நாம் அனைவரும் பின்பற்றுவோம். அதுவரை ஏற்கனவே அறிவித்தபடி 

  1. 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல, 
  2. 12ஆம் வகுப்பிற்கு ஜூன் 20ஆம் தேதியும், 
  3. 11ஆம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும் 

பள்ளிகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...