TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இதை படித்தால் போதும்! ஈஸி டிப்ஸ் இதோ!
தமிழகத்தில் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது வருகிற ஜூலை 24ம் தேதி அன்று குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. தற்போது இத்தேர்வில் வெற்றி பெற எப்படி படிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இதை படித்தால் போதும்! ஈஸி டிப்ஸ் இதோ! |
தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களில் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுவார்கள். இதையடுத்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டது. இந்நிலையில், அறிவித்தப்படி குரூப் 2,2ஏ தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து 4ம் நிலை பணியிடத்திற்கு குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்வு மூலமாக சுமார் 7,382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது ஒரே ஒரு தேர்வு மட்டுமே கொண்டது. இதில் 100 வினாக்கள் தமிழ் மொழிப் பாட பகுதியிலிருந்தும் 75 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்தும், 25 வினாக்கள் திறனறி தேர்வு பகுதியில் இருந்தும் என மொத்தமாக 200 வினாக்கள் கேட்கப்படுகிறது. தற்போது TNPSCயின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தாளாக உள்ளதால் இதில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவுப்பகுதி மதிப்பீடு செய்யப்படும்.
இத்தேர்வுக்கு தயாராக 6 முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்கள் நன்றாக படித்தாலே போதுமானது. இதையடுத்து நேரம் இருந்தால் 11,12ம் வகுப்பு புத்தகங்களை படிக்க வேண்டும். அடுத்ததாக திறனறி பகுதிக்கும் 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை படித்தால் மட்டும் போதுமானது. மேலும் பொது அறிவியல் பகுதியில் பள்ளி புத்தகங்களை படித்தால் போதுமானது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, அரசியலமைப்பு மற்றும் இந்திய தேசிய இயக்கம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் உள்ளிட்டவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கிய கேள்விகள்:
1. புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன
(A) எட்வர்டு மைபிரிட்சு
(B) ஈஸ்ட்மன்
(C) தாமஸ் ஆல்வா எடிசன்
(D) பிரான்சிஸ் சென்கின்சு
2. மன்னிப்பு – எம்மொழிச் சொல்
(A) தமிழ்
(B) தெலுங்கு
(C) மலையாளம்
(D) உருது
3. “அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?
(A) ரழ வரும்
(B) தந வரும்
(C) றன வரும்
(D) யத் தோன்றும்
4.“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே” – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
(A)வேற்றுமையணி
(B) இல்பொருள் உவமையணி
(C) ஏகதேச உருவக அணி
(D) எடுத்துக்காட்டு உவமையணி
5. ‘தேம்பாவணி’ என்பது?
(A) கிறித்தவக் காப்பியம்
(B) இசுலாமியக் காப்பியம்
(C) வைணவக் காப்பியம்
(D) சைவக் காப்பியம்
0 Comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.