தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 13) பள்ளிகள் திறப்பு – பெற்றோருக்கு ஷாக் நியூஸ்!
தமிழகத்தில் வருகிற ஜூன் 13 ல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். அதில் முக்கியமாக ஒரு புது வகுப்பு செல்லும் மாணவர்கள் அனைத்தையும் புதிதாக வாங்க ஸ்டேஷனரி கடைகளுக்கு பெற்றோர்களுடன் செல்வர். அந்த வகையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடைக்கு சென்று பொருட்களை வாங்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் விலையை குறித்து கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 13) பள்ளிகள் திறப்பு – பெற்றோருக்கு ஷாக் நியூஸ்! |
ஸ்டேஷனரி கடை வியாபாரிகள்:
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணத்தால் நாட்டில் பல மாற்றங்கள் அமைந்ததில் கல்வியும் ஒன்று. அதாவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வாயிலாகத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பள்ளி திறப்பு தேதி முடிவு செய்வதில் குழப்பம் நீடித்தது. இந்த ஆண்டு 2022ல் கொரோனோ தாக்கம் குறைந்ததால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி தேர்வுகளும் முடிவடைந்து கடந்த ஒரு மாதமாக பள்ளி கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டு தற்போது பள்ளி திறப்பு தேதியும் நெருங்கிவிட்டது.
இவ்வாறு முன்னதாக சொன்ன படி, நாளை மறுதினம் (ஜூன் 13) பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் இன்றும், நாளையும் ஸ்டேஷனரி கடைகளில் விற்பனையை எதிர்பார்த்து வியாபாரிகள் சுறுசுறுப்பாகியுள்ளனர். அதாவது அனைத்து பள்ளிகளிலும் தமிழ்நாடு பாடநுால் கழகம் மூலம் அனைத்து வகுப்புக்கான புத்தகங்களும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் இதர தேவைகளான நோட்டு, பேப்பர், பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வெளி கடைகளில் தான் வாங்கித்தருகின்றனர். இதை பயன்படுத்தி வியாபாரிகளும் விற்பனையை எதிர்பார்த்து கூடுதலாக விற்க தொடங்கியுள்ளனர். இதனால் பெற்றோர்கள் விலையை குறித்து கவலையில் உள்ளனர்.
ஆனால் இதை குறித்து ஸ்டேஷனரி வியாபாரிகளிடம் கேட்கும் போது அவர்கள் இதுவரை நோட்டு, ஸ்டேஷனரி பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் நடப்பாண்டு ஜி.எஸ்.டி தொகையும் சேர்க்கப்பட்டு விற்பதால் விலை கூடுதலாக தெரிகிறது. அதாவது பெரிய நோட்டு இதுவரை ரூ.28 , ரூ.32 மட்டுமே ஆனால் தற்போது ரூ.36 முதல் ரூ.38 என உயர்ந்துள்ளது. அவ்விதமாக பேனா, பென்சில், ரப்பர், ஜாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் நடப்பாண்டும் பள்ளி மாணவர்களுக்கு ‘பேக்’ தர இருப்பதால், பெற்றோரில் பலரும் இந்த ஆண்டு புதிய பேக் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை என அவர்கள் தரப்பில் உள்ள கருத்துக்களை கூறியுள்ளனர்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.