தமிழக 1 முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்கள் கவனத்திற்கு – விரைவில் பயிற்சி வகுப்புகள்!
தமிழகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 2022-2023ம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 12ம் வகுப்பு வரை என அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக 1 முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்கள் கவனத்திற்கு – விரைவில் பயிற்சி வகுப்புகள்! |
ஆசிரியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு தாமதமாக கல்வியாண்டு தொடங்கப்பட்டது. அதனால் பொதுத்தேர்வுக்குரிய பாடங்கள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும் என்று பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் வரை வகுப்புகள் நடத்தப்பட்டது. அதாவது, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் நடைபெற்றது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் மனச்சுமையாக இருப்பதால் இந்த ஆண்டில் கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தனர்
அதன்படி 2022-2023ம் ஆண்டிற்கான கல்வியாண்டு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களை கையாள ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களின் வருகையை மின்னணு முறையில் பதிவேடுகளை பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.