தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆசிரியர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆசிரியர்கள் அதிருப்தி!

தமிழ்நாட்டில் 2022-23 கல்வியாண்டில், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, விடுமுறையில் பள்ளிக்கு வரவழைத்து, ‘ரீடிங்’ மாரத்தான் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆசிரியர்கள் அதிருப்தி!

ஆசிரியர்கள் அதிருப்தி:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு, நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் பேரில் 1ம்‌ வகுப்பு முதல்‌ 9ஆம்‌ வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மே 13ம் தேதியுடன்‌ முடிவடைந்தது. பின்பு மே 14 முதல்‌ கோடை விடுமுறை தொடங்கியது. மேலும் பொதுத்தேர்வு கடந்த மாதம் இறுதி வரை நடைபெற்றதால், 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் ஆணை

இதை தொடர்ந்து “தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, 2022-23 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் கல்வியாண்டு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் சேலம் மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார வள மைய மேற்பார்வையாளருக்கு, ஆன்லைனில் ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார். அந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்.

கூகுள் ரீடிங் அலாங் : Reading Marathon

அதில் ஆண்ட்ராய்டு போனில், ‘கூகுள் ரீடிங் அலாங்’ எனும் செயலியை, ஆசிரியர் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள கதைகளை, ஒன்று முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினமும் வாசிக்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியது, எங்களுக்கு விடுமுறை கொடுக்கக்கூடாது என்பதற்காகவே பல்வேறு பணிகளை யோசித்து வழங்குகின்றனர். விடைத்தாள் மதிப்பீடு, பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு செல்லாத ஆசிரியர்கள், பள்ளியில் இருந்து கொண்டு, மாணவர்களை தினமும் வரவழைத்து கதைகளை வாசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது ஆசிரியர்களை பழிவாங்கும் உத்தரவாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ளனர்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...