தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு ஜூன் 17 தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. மாணவர்களுக்கு எப்படி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது என்பதற்கான அறிவிப்பு முழுவதும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முடிவுகள் வெளியீடு!

தேர்வு முடிவுகள்:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளும் மாணவர்களுக்கு தேர்வு எதுவும் வைக்காமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததனால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வும் நடத்தப்பட்டன. ஆன்லைன் வகுப்பில் சரியாக பாடங்கள் எதுவும் நடத்தாத காரணத்தினால் அனைத்து பொதுத்தேர்விலும் வினாக்கள் எளிமையாகவும் இரண்டு திருப்புதல் தேர்வுகள் அடிப்படையிலும  கேட்கப்பட்டன.10ம் வகுப்பு கணிதம் மட்டும் சற்று கடினமாக இருந்த்தாக கிராமப்புற மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியில் தொடங்கி மே 30 ஆம் தேதி வரைக்கும் நடைபெற்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரைக்கும் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜூன் 17 தேர்வு முடிவு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனரகம்  தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு எழுதியதால் தேர்வு முடிவு எப்படி வர இருக்கிறதோ என பதட்டத்தில் உள்ளனர்.

மேலும், 12 ஆம் வகுப்பு பொதுதேர்வெழுதிய மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி தேர்வு முடிவினை வெளியிடவும் கல்வி அமைச்சர் திட்டமிட்டுள்ளார். ஜூன் 17 வெளியாகவுள்ள பொதுத்தேர்வு முடிவினை மாணவர்கள் http://www.tnresults.nic.in/ or https://www.dge.tn.gov.in/results.html என்கிற அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23 வெளியாக இருக்கும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவினையும் ஜூலை 7 ம் தேதி வெளியிடவுள்ள 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவினையும் http://www.tnresults.nic.in/. என்கிற இணையதள முகவரியில் பார்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments