தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் அறிமுகம்!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் அறிமுகம்!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மேள தாளம் முழங்க வரவேற்றனர். இதை தொடர்ந்து வரும் 20-ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் , 27-ம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் அறிமுகம்!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் அறிமுகம்!

இன்று முதல் பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நேரடி வகுப்புகள் சரியாக நடைபெறாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால் 2019 ம் ஆண்டுக்கு பின்னர் வழக்கம்போல் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் தோரணம், வாழை மரங்கள் கட்டி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகளில் ஒரு வாரத்திற்கு பாடங்கள் நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான பாடங்களை அட்டவணைப்படி நடத்தலாம். 

இதையடுத்து காலை 9.10 முதல் மாலை 4.10 வரை பள்ளிகள் செயல்படுவதற்கான மாதிரி நேரத்தை வெளியிட்டதோடு, 

8 பாடவேளை கொண்டதாக பள்ளிகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில் பள்ளிகளின் அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்டற்றவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே மேலாண்மை குழுக்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள்:

  1. வாரத்தில் ஒரு நாள் நீதிபோதனை பாடம் நடத்த வேண்டும். அதே போல் நூலக செயல்பாடுகளையும் நடத்த வேண்டும்.
  2. மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகு மாணவர்கள் 20 நிமிட நேரம் செய்தித்தாள், புத்தகங்கள் வாசிக்க செய்ய வேண்டும்.
  3. தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் காலை வணக்கக் கூட்டம் நடக்க வேண்டும். இந்த கூட்டத்தில் மாணவர்களை தவறாமல் பங்கேற்க செய்ய வேண்டும்.
  4. பள்ளிகளில் கூட்டு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  5. இலக்கிய மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் சுமார் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கவிமாமணி விருது வழங்கப்படும்.
  6. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தி, பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டமும் நடத்தி பெற்றோரிடம் மாணவர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்

Post a Comment

0 Comments