தமிழக பொதுமக்களின் கவனத்திற்கு – காவல்துறையின் முக்கிய அறிவுறுத்தல்!
தமிழகத்தில், நம்பகமற்ற செயலிகள் மூலம் கடனை பெறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. செயலிகள் மூலம் கடன் பெறுவதற்கு முன்பு கடன் நிறுவனம், செயலி பற்றி ஆராய வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக பொதுமக்களின் கவனத்திற்கு – காவல்துறையின் முக்கிய அறிவுறுத்தல்! |
கடன் வாங்க வேண்டாம்:
பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நம்பகமற்ற செயலிகளின் மூலம் கடன் வாங்க வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக நிகழ்ச்சி காவல் அதிகாரி கூறியது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நம்பகமற்ற செயலிகள் மூலம் மக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்த மோசடிக் கும்பலை சென்னை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், கடன் செயலிகளைக் கண்டறிந்து, அவற்றை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
Loan App மீது நடவடிக்கை
இத்தகைய தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் குறைந்திருந்த கடன் செயலிகள் தற்போது மீண்டும் ப்ளேஸ்டோர் மற்றும் வெப்சைட்டுகளில் பரவலாக அதிகரித்து வருகின்றன. செயலிகளின் மூலம் கடன் வாங்கும் போது, கடன் பெறுபவரின் செல்போனில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படம் மற்றும் தனிப்பட்டவிவரங்களை அந்த செயலிகள் சேகரித்து வைத்துக் கொள்கின்றன. மேலும் கடன் வாங்கும் தொகையில் சுமார் 30 சதவீதம் பணத்தை பிராசஸிங் கட்டணமாகப் பிடித்துக் கொண்டு, மீதமுள்ள பணம் கடன் வாங்குபவரின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கப்படும்.
மேலும், கடன் பெற்றவர்களின் நண்பர்கள், உறவினர்களின் செல்போனுக்கு, கடன் பெற்ற நபர் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்திகளை மோசடிக் கும்பல் அனுப்புகிறது. இதனால், லோன் செயலிகள் மூலம் கடன் பெறுவோர், பணிபுரியும் இடத்திலும், உறவினர்களிடமும் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரிய அளவிலான பண இழப்பும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் அவசரத் தேவைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இத்தகைய லோன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.