தமிழக 10 - 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி?

தமிழக 10 - 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி?

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 வெளியாகிறது. முன்பு ஜூன் 17 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது இன்று அது மறுக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை வெளியாகும் தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழக 10 - 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி?
தமிழக 10 - 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி?


தேர்வு முடிவு:

தமிழகத்தில் கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைந்தை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், 2021 – 2022 கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 12 ஆம் வகுப்புக்கு மே 5ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.

மேலும் 10ம் வகுப்புக்கான முடிவு ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல்,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்றது.

மேலும்  விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே   ஜூன் 20 காலை 9.30 மணிக்கு www.dge.tn.gov.in இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in, tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்

அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.dge.tn.gov.in செல்லவும்

இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் ‘TN SSLC முடிவுகள் 2022’ என்ற இணைப்பைக் காணலாம் – அதை க்ளிக் செய்யவும்

அங்கு கேட்கப்பட்டுள்ள தேவையான தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் Submit-ஐ க்ளிக் செய்யவும்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் உங்கள் திரையில் காட்டப்படும் – அதனை Download செய்து கொள்ளலாம்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...