தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை எழுதாமல் ஆப்சென்ட் ஆனதை தொடர்ந்து, அவர்களை கண்டறிந்து உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அதிரடி உத்தரவு. |
தேர்வு துறை அதிரடி உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாகத் தொடங்கியது. இதனால் பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் கடந்த மாதம் இறுதி வரை நடைபெற்றது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 முதல் மே 28 வரை நடைபெற்றது. அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 9-ந்தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 6-ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடைபெற்றது.
அறிவிப்பின்படி, 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்ட கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் 10, 11, 12-ம் வகுப்பு வரை சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர். இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளில் 45 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 6,79,467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1.95 லட்சம் மாணவர்களும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5.28 லட்சம் மாணவர்களும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2.25 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் தேர்வில் பங்கேற்காத 10,11,12ம் வகுப்பு மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் நடைபெறும் துணைத் தேர்வுகளில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் .
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.