அரசுப் பள்ளிகளில் 2022 - 2023 மாணவர் சேர்க்கை துவங்க உத்தரவு - ஆசிரியர், SMC, ITK பணிகள் குறித்து இயக்குனர் உத்தரவு - Director Proceedings

அரசுப் பள்ளிகளில் 2022 - 2023 மாணவர் சேர்க்கை துவங்க உத்தரவு - ஆசிரியர், SMC, ITK பணிகள் குறித்து இயக்குனர் உத்தரவு - Director Proceedings

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை -06

ந.க.எண்.010886 / ஜெ2 / 2022, நாள்: 30.05.2022

பொருள் : தொடக்கக் கல்வி - 2022-23ஆம் கல்வி ஆண்டு -

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தொடர்பாக,

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 202223ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86வது சட்டத் திருத்தத்தின்படி தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே, மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் தொடக்கக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். எனவே, 5 வயது பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம். * மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்

- ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்தித்தாட்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.

 தொடக்கக் கல்வி பதிவேடு

பள்ளிவாரியாக 5+ மாணவர்கள் ஏற்கனவே எடுத்துள்ள கணக்கெடுப்பை உறுதி செய்தல் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பை வீடுகள்தோறும் சென்று சரியாகவும் துல்லியமாகவும் எடுத்து தொடக்கக் கல்வி பதிவேடானது (EER) ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. இந்த பதிவேட்டில் ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும். 

பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல்

அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொது மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.

விழிப்புணர்வு மற்றும் சேர்க்கை பேரணி நடத்துதல்

அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் வழிப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சார்ந்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின் படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.


விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரமானது பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்கள் இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை கோடை விடுமுறை இறுதியில் பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே நடைபெறச் செய்யுமாறு பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திற்கு கட்டாயமாக உயர்த்த அறிவுறுத்த வேண்டும். 

விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்

பேரணிக்கான முன்னேற்பாடு சார்பான கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட வேண்டும். பேரணி நடத்துவதற்கான இடம், நேரம், நிகழ்வுகள், விளம்பரம் போன்ற விவரங்களை விரிவாக கலந்துரையாடி தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக பேரணி நடத்திடவும் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றிடவும், இந்தியாவிலேயே தமிழகம் பள்ளி வயது அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்துவிட்டது என்று பெருமை அடையும் வகையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

பள்ளி அளவிலும், ஊராட்சி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் ஒரே நேரத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற வேண்டும். பள்ளி செல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களை இனம் கண்டு, அவர்களையும் அழைத்து அறிவுரைகள் வழங்கிப் பேரணியில் இடம் பெறச் செய்திட வேண்டும். இப்பேரணிக்காகக் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

  • கல்வி தொலைக்காட்சி, 
  • TAC TV மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்தல்
  • பேரணி பற்றிய சுவரொட்டிகள். 
  • வரவேற்பு வளைவுகள் . -
  • துணி / Flex board விளம்பரங்கள். 
  • ஆட்டோ / வேன் மூலம் ஒலிபெருக்கி விளம்பரம்.

Click Here to Download - School Admission 2022 - 2023 - Director Proceedings - Pdf

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Tamilnadu state council Educational Research and Training Published Samacheer kalvi TN Text Books .Our Kalvi kalvi Website provide these TN textbooks (EBooks) PDF Download direct link for all classes .you can download samacheer kalvi All classes Term wise All subject Ebooks .( TN SCHOOLS Textbook) 
ஒன்றாம் வகுப்பு Click Here
இரண்டாம் வகுப்பு Click Here
மூன்றாம் வகுப்பு  Click Here
நான்காம் வகுப்பு Click Here
ஐந்தாம் வகுப்பு Click Here
ஆறாம் வகுப்பு Click Here
ஏழாம் வகுப்பு Click Here
எட்டாம் வகுப்பு Click Here
ஒன்பதாம் வகுப்பு Click Here
பத்தாம் வகுப்பு Click Here
பதினோராம் வகுப்பு Click Here
பன்னிரண்டாம் வகுப்பு Click Here