தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் அறிவித்தபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து தற்போது பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

மாணவர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதனால் அறிவித்தபடி தற்போது 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பொறியியல் சேர்க்கை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதனால் இதனை தவிர்க்க நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை வருகிற 20ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து ஜூலை 20ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் வாயிலான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். மேலும் முதல் கட்ட கலந்தாய்வில் 15000 பேருக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15000 பேருக்கும் என 4 கட்டங்களாக மொத்தமாக 50000 மாணவர்களுக்கு நடைபெற உள்ளது. அத்துடன் இந்த கலந்தாய்வின் மூலமாக தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஒரு வார காலத்திற்குள் கல்லூரிக் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments