அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் -  பள்ளிக்கல்வித்துறை

2022-2023ம் கல்வி ஆண்டில் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் உயர் கல்வி பயில்வதற்கான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பிற வகுப்புகளுக்கு சேர்க்கை பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது கொரோனா படம் பெற்று அதிகரித்து வரும் காரணத்தினால் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து பள்ளிகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அனுப்பி இதை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செயல்முறைகளில் பின்வருமாறு விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோவிட் 19 பெருந்தொற்று அதிகரித்து வரும் காரணத்தினால் மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகங்களில் நுழையும்போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதித்த பின்னர் வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் அவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அவருக்கு உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாய முக கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்திற்குள் Soap, Hand Wash முதலியவை இருப்பதையும் தலைமை ஆசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.

தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

வகுப்பறைக்குள் உரிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே சுகாதாரத் துறை தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...