தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டுதல்கள்!

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டுதல்கள்!

கடந்த கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெற்றது. இதனிடையே 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டுதல்கள்!
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டுதல்கள்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதையடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3-ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. இந்தச் சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தோ்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோ்வுகள் தொடங்கி நடைபெற்று முடிந்தது.

இந்தப் பொதுத்தோ்வு மே இறுதியில் முடிவடைந்து, தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 

  1. 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  2. மேலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும்
  3. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது

இதே போல் அடுத்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் பேரில் நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

1. பள்ளி வளாகங்களில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளை கிராம ஊராட்சி பணியாளர்களை கொண்டு தூய்மைபடுத்த வேண்டும்.

2. பள்ளி பேருந்து பரிசோதிக்கப்பட்டு பாதுக்காப்பாக இயங்கக்கூடிய நிலையில் உள்ளது என்பதை உறுதிசெய்த பின்னரே பேருந்து இயக்கப்பட வேண்டும்.

3. பள்ளிகளில் உள்ள கழிவறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, கழிப்பறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

4. பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின் கசிவு , கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து சரி செய்திட வேண்டும்.

5. பள்ளி வளாகங்களில் புதர்கள், குப்பைகள் மற்றும் இலை சருகுகளை அப்புறப்படுத்தி வளாகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

6. சத்துணவு கூடங்களை சுத்தப்படுத்தி சுத்தமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

7. பள்ளி திறக்கும் நாள் அன்று மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடநூல்கள் பள்ளிகளில் பெறப்பட்டதை உறுதி செய்தல் வேண்டும்.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...