12th Standard - 1st Mid Term Question Papers & Answer Keys 2023-2024

12th Standard - 1st Mid Term Question Papers & Answer Keys 2023-2024

Tamil

12th Tamil - Unit Test 1 ( First Mid term) original Question paper 2023 - Salem District - Download here

12th Tamil - First Mid Term Exam Original Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Model Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

English

12th English first mid term original Question paper 2023 - Chennai district | Focus tution center - English Medium Download Here

12th English - First Mid Term Exam Original Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th English - First Mid Term Exam Model Question Paper 2023-2024 | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

Maths 

12th Maths - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website - English Medium Download Here

12th Maths - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website - Tamil Medium Download Here

12th Maths - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website - English Medium Download Here

12th Maths - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website - Tamil Medium Download Here

Physics

12th Physics - First Mid Term Exam Original Question Paper 2023-2024 | Kalvikavi website - English Medium Download Here

12th Physics - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website  - Tamil Medium Download Here

12th Physics - First Mid Term Exam Model Question Paper 2023-2024 | Kalvikavi website - English Medium Download Here

12th Physics - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - Tamil Medium Download Here

Chemistry

12th Chemistry First mid term Original Question 2023 - Dindigul - PDF English Medium Download here

12th Chemistry First mid term Original Question 2023 - Dindigul - PDF Tamil Medium Download here

12th Chemistry - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - English Medium Download Here

12th Chemistry - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - Tamil Medium Download Here

12th Chemistry - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website English Medium Download Here

12th Chemistry - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - Tamil Medium Download Here

Biology

12th Biology - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - English Medium Download Here

12th Biology - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - Tamil Medium Download Here

12th Biology - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - English Medium Download Here

12th Biology - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - Tamil Medium Download Here

Botany

12th Botany - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - English Medium Download Here

12th Botany - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - Tamil Medium Download Here

12th Botany - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - English Medium Download Here

12th Botany - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed - Tamil Medium Download Here

Zoology

12th Zoology - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website - English Medium Download Here

12th Zoology - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website - Tamil Medium Download Here

12th Zoology - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website-  English Medium Download Here

12th Zoology - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website - Tamil Medium Download Here

Commerce

12th Commerce - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

Accountancy

12th Accountancy - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th Accountancy - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th Accountancy - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th Accountancy - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

Economics

12th Economics - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th Economics - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th Economics - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th Economics - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

History

12th History - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th History - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th History - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th History - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

Computer Science

12th Computer Science - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th Computer Science - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th Computer Science - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th Computer Science - First Mid Term Exam Model Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

Computer Applications

12th Computer Applications - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- English Medium Download Here

12th Computer Applications - First Mid Term Exam Original Question Paper 2023-2024  | Kalvikavi website P.Sivasamy M.A.,B.Ed- Tamil Medium Download Here

12th All Subjects - First Mid Term Question paper 2022-23

12th ( Plus Two ) - First Mid Term Exam - Model Question Papers with Answer Keys 2022 - 2023

Tamil

Tamil

12th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tenkasi District ) - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Kanchipuram District ) - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District )  - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tirupattur District ) - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Ramnad District ) - Tamil Medium Download Here

12th Tamil - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Dindigul District ) - Tamil Medium Download Here

English

12th English - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District )  - English Medium Download Here

12th English - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tenkasi District ) -  English Medium Download Here

12th English - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Namakkal District ) -  English Medium Download Here

12th English - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Dindigul District ) -  English Medium Download Here

Maths

12th Maths - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Vollore District )  - Tamil Medium Download Here

12th Maths - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudunagar District )  - Tamil Medium Download Here

12th Maths - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Kanchipuram District ) - Tamil Medium Download Here

12th Maths  - First Mid Term Exam Question Paper 2022-2023 ( salem District ) - English  Medium Download Here

12th Maths  - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Chennai District )- English  Medium Download Here

12th Maths - First Mid Term Exam Question Paper 2022-2023 ( tirupattur District ) - English  Medium Download Here

12th Maths - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tenkasi District ) - English  Medium Download Here

Physics

12th Physics - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tirupattur District )  - Tamil Medium Download Here

12th Physics - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Kanchipuram District ) - Tamil Medium Download Here

12th Physics - First Mid Term Exam Question Paper 2022-2023 ( tirupattur District ) - English  Medium Download Here

12th Physics - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tenkasi District ) - English  Medium Download Here

Chemistry

12th Chemistry - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Namakkal District ) | English Medium Download Here

12th Chemistry - First Mid Term Exam 2020 - 2021 - Answer Keys ( Namakkal District ) | Mr. P.Sivasamy.,M.A.B.ed - English Medium Download Here

12th Chemistry - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Mr. P.Sivasamy.,M.A.B.ed - English Medium Download Here

12th Chemistry - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Mr. P.Sivasamy.,M.A.B.ed - Tamil Medium Download Here

Biology

12th Biology - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Ramnad District )  - Tamil Medium Download Here

12th Biology - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tirupattur District )  - Tamil Medium Download Here

12th Biology - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Kanchipuram District ) - Tamil Medium Download Here

th Biology - First Mid Term Exam Question Paper 2022-2023 ( tirupattur District ) - English  Medium Download Here

12th Biology - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tenkasi District ) - English  Medium Download Here

Botany (Pure Science)

12th Botany PS - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - Tamil Medium Download Here

12th Botany PS - First Mid Term Exam Original Answer Key 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - English Medium Download Here

12th Botany PS - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tirupattur District ) - Tamil Medium Download Here

Zoology (Pure Science)

12th Zoology - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tirupattur District ) - Tamil Medium Download Here

Computer Science

12th Computer Science - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Mr. Mr. Vigneshwaran - Tamil Medium Download Here

12th Computer Science - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - English Medium Download Here

12th Computer Science - First Mid Term Exam Original Answer Key 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - English Medium Download Here

Computer Applications

12th Computer Application - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Mr. Mr. Vigneshwaran - Tamil Medium Download Here

12th Computer Application - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - English Medium Download Here

12th Computer Application - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - Tamil Medium Download Here

12th Computer Application - First Mid Term Exam Original Answer Key 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - English Medium Download Here

12th Computer Application - First Mid Term Exam Answer Key 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - Tamil Medium Download Here

12th Computer Application - First Mid Term Exam Answer Key 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - English Medium Download Here

Computer Technology

12th Computer Technology - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Mr. Mr. Vigneshwaran - Tamil Medium Download Here

12th Computer Technology - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - Tamil Medium Download Here

Commerce

12th Commerce - First Mid Term Exam Original Question Paper 2022-2023 with Answer Keys ( Kaniyakumari District ) | Mr. P. Karthic - Tamil Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Original Question Paper 2022-2023 with Answer Keys ( Madurai District ) | Mr. M. Muthuselvam - Tamil Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Namakkal District ) | Mr. S. Manikandan, SVB - Tamil Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Answer Key 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - Tamil Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Mr. Mr. Vigneshwaran - English Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Mr. Mr. Vigneshwaran - Tamil Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Vellore District ) | Mr. Koteeswaran - English Medium Download Here

12th Commerce - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tirupattur District ) - Tamil Medium Download Here

Accountancy

12th Accountancy - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Vellore District ) | Mr. A. Kotteeswaran - English Medium Download Here

12th Accountancy - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Mr. M. Muthuselvam - English Medium Download Here

12th Accountancy - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Namakkal District ) | Mr. S. Manikandan, SVB - Tamil Medium Download Here

12th Accountancy - First Mid Term Exam Answer Key 2022-2023 ( Namakkal District ) | Shri Krishna Academy - Tamil Medium Download Here

12th Accountancy - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Mr. Mr. Vigneshwaran - English Medium Download Here

Economics

12th Economics - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Namakkal District ) |  - Tamil Medium Download Here

12th Economics - First Mid Term Exam Answer Key 2022-2023 ( Namakkal District ) | - Tamil Medium Download Here

12th Economics - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | - English Medium Download Here

12th Economics - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Madurai District ) | Tamil Medium Download Here

12th Economics - First Mid Term Exam Model Question Paper 2022-2023 | Tamil Medium Download Here

History

12th History - First Mid Term Exam Question Paper 2022-2023 ( Tirupattur District ) - Tamil Medium Download Here


Share:

தமிழகத்தில் 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு!!

 தமிழகத்தில் 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு!!

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகமான பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் மேலும் மூன்று பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தஞ்சாவூரில் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி. சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தைச் சேர்ந்த 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.  அவை, திருவண்ணாமலை ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, தஞ்சை, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 58 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று இதுவரை 17 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share:

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழ் - அமைச்சர் அன்பில் மகேஸ்...!!

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழ் - அமைச்சர் அன்பில் மகேஸ்...!!

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் நோக்கில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மாவட்டப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.

சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் 24 ஆயிரம்மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் வெளியிடும் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் 2500 பிரதிகள் இந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ச.மார்ஸ் முன்முயற்சியில் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழ் அரசு பள்ளிகளுக்கு வாங்கப்படவுள்ளது.

பள்ளி கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வாசிப்பு நேரத்தில் ‘வெற்றிக்கொடி’ நாளிதழை வாசித்து, மாணவர்களின் தமிழ்மொழித்திறனை மேம்படுத்துவதோடு, பிழையின்றி தமிழை வாசிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், ராயப்பேட்டை அரசினர் ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அண்ணாசாலையிலுள்ள அரசினர் மதரஸா இ-ஆசம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை வழங்கினார்.சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கும் விழாவில், பள்ளி மாணவர்களிடம் ‘வெற்றிக்கொடி’ மாணவர் பதிப்பு நாளிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்


Share:

சமவேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு..!!

 சமவேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு..!!

சமவேலைக்கு சம ஊதியம்.மாநில அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியருக்கு கொடுக்கும் ஊதியத்திற்கு சமமான ஊதியம் வழங்கக்கோரி  பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் போராட்டத்தை அறிவித்து உள்ளது.அது குறித்த செய்திகள் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

அதன் தொகுப்பு கீழே.





Share:

கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு...!!!

 கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு...!!!

பிரதமரின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அம்ரித் அறிக்கை: 2023- 24 ம் நிதியாண்டில், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த, 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் மாநிலத்தில், 3,093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட பள்ளிகளில், 9 அல்லது 11 ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக, 75 ஆயிரம் ரூபாய், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக, 1.25 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவு தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இத்தேர்விற்கு வருபவர்கள் ஆக., மாதம், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளை அணுகலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முடிவு வெளியீடு...!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முடிவு வெளியீடு...!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள்இணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டுள்ளது.

ஜிப்மரில் சேர்ந்த மாணவர்: நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜெ.பிரபஞ்சன், தமிழக அரசின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அந்த மாணவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

நீட் தேர்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 6-வது இடத்தையும், மாநில அளவில் 2-வது இடத்தையும் பிடித்த சென்னையைச் சேர்ந்த என்.சூர்யா சித்தார்த், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், நீட் தேர்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 9-வது இடத்தையும், மாநில அளவில் 3-வது இடத்தையும் பிடித்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.வருண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர்.

அதேபோல், நீட் தேர்வில் 716 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழக மாணவர் கவுஸ்தவ் பவுரி, நீட் தேர்வில் 711 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 24-வது இடத்தைப் பிடித்த தமிழக மாணவர் சாமுவேல் ஹர்ஷித், நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 36-வது இடத்தைப் பிடித்த தமிழகமாணவர் ஜேக்கப் பிவின் ஆகியோர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்த 3 பேரில் சாமுவேல் ஹர்ஷித், மாநில அரசின் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு விண்ணப்பித்திருந்தார். மற்ற இரண்டு மாணவர்கள் மாநில அரசு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share:

பி.ஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஆக.11-ல் தரவரிசை பட்டியல்...!!!

 பி.ஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஆக.11-ல் தரவரிசை பட்டியல்



பி.ஆர்க் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஆக.11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 41 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,905 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதுவரை 3,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஆக.4-ம் தேதி நிறைவு பெறுகிறது.

எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் https://barch.tneaonline.org/ எனும் வலைதளம் வழியாகதுரிதமாக தங்களின் விண்ணப்பங்களை சான்றிதழ்களுடன் பதிவுசெய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு டிஎஃப்சி எனும் சேவை உதவி மையங்கள் மூலம் ஆக.5முதல் 8-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும். அதன்பின் தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆக.11-ம் தேதி வெளியிடப்படும்,

அதைத்தொடர்ந்து, ஆக.17 முதல் 31-ம் தேதி வரை இணையவழியில் கலந்தாய்வுநடைபெறும்.இதுதொடர்பான கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது

Share:

AWD - ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களின் இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆக, 3ல் நடக்க உள்ளது. அன்றைய தினமே, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கும் கலந்தாய்வு நடக்கும்.


இத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள, பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் பெற, ஆக., 4 கலந்தாய்வு நடக்க உள்ளது.

* இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., வகுப்புகளை செப்., 1ம் தேதி துவங்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப அகில இந்திய கவுன்சிலிங் திட்ட அட்டவணை வெளியிட்டுள்ளது.

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்படும், மாணவர்கள் விடுதிகளை ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்விச் சூழல், உணவுத்தரம், பாதுகாப்பு போன்றவற்றை மறு சீரமைக்க, அரசுக்கு பரிந்துரை அளிக்க, மாவட்ட, மாநில அளவில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது

Share:

பள்ளி வகுப்புகளில் பயன் தரும் மாற்றங்கள்!

பள்ளி வகுப்புகளில் பயன் தரும் மாற்றங்கள்!


இடை நிற்றலைத் தவிர்த்தல், தேர்ச்சி சதவீதத்தைக் கூட்டுதல், கற்றலில் சிக்கல் கொண்ட மாணவர்களின் திறன்களை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்தல், பெற்றோருடன் கலந்து ஆலோசித்துத் தீர்வு காண முயலுதல், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெறுமனே ‘ஆய்வு’ செய்தல், குறை கூறுதல், குற்றம் கண்டுபிடித்தல், கடிந்து கொள்ளுதல் என்கிற பாணியில் இருந்து முற்றிலும் மாறி களத்தில் இறங்கி, பள்ளித் தலைமையாசிரியர், பிற ஆசிரியர்களுடன் கைகோத்து, நேரடியாகப் பயன்தருகிற பணிகளை முன்னெடுப்பதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வகையில், மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்காக, ஜூலை 26 அன்று, பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ‘பள்ளிக் குழுக் கட்டமைப்பு’ கூட்டம் பயன் உள்ளதாய் இருந்தது.


இன்று தமிழக மாணவர்களிடம், குறிப்பாக அரசுப் பள்ளிகளில், நாம் காணும் கவலைக்குரிய அம்சம் – கற்றலில் ஆர்வம் இன்மை. சில புதிய முயற்சிகள் மூலம் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க முடியும். பெரும்பாலும் எல்லாப் பள்ளிகளிலும் மாணவ மாணவியர், வகுப்பறையில் குறிப்பிட்ட ஓர் இடத்திலேயே அமர்கிறார்கள். இந்த நடைமுறையை மாற்றி, ஒவ்வொரு வகுப்பு தொடங்கும் போதும், மாணவர்களை இடம் மாறி அமரச் செய்யலாம். வாரத்துக்கு ஒருமுறையேனும் இந்த நடைமுறையைச் செயல்படுத்தலாம். ‘புதிய இடம்’; ‘புதிய கோணம்’- மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

எந்தெந்த நாட்களில் என்னென்ன பாடங்கள் நடத்த வேண்டும் என்று முறையாக அட்டவணைப்படுத்தப்பட்டு அவ்வாறே வகுப்புகள் நடைபெறுகின்றன. இயந்திர கதியில் இயங்குகிற இந்த முறையில் சிறிய திருத்தம் செய்யலாம். ஒரு நாளைக்கு ஒரு வகுப்பேனும் ‘அட்டவணைக்கு உட்படாத’ வகுப்பாக அன்றன்று தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப அமைந்தால் ஒரு ‘நிவாரணம்’ தருவதாய் இருக்கும்.


இதேபோன்று ஒவ்வொரு பாடத்துக்கும் (`சப்ஜெக்ட்’) குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் நடத்துவதில் இருந்துசற்றே மாற்றி, மாதம் ஒருமுறையேனும் அதே பள்ளியின் வேற்றுத் துறை ஆசிரியர் பாடம் எடுக்கலாம். உதாரணத்துக்கு, தமிழ் ஆசிரியர் - அறிவியல்; கணித ஆசிரியர் – ஆங்கிலம் என்று மாறிப் பாடம் எடுத்தால், ஆசிரியர்களுக்குப் புத்துணர்வு; மாணவர்களுக்குப் ‘புதிய பார்வை’ கிட்டும். யோசித்துப் பாருங்களேன்….. உடற்பயிற்சி ஆசிரியர், வேதியியல் பற்றிப் பேசினால்…. ஆங்கில ஆசிரியர் கம்பராமாயணம் வகுப்பு எடுத்தால்..? மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அப்போதே தூண்டிவிடும். அல்லவா? சோதனை முயற்சிதான்; ஏன் முயற்சிக்கக் கூடாது.? ஒரு பாடம் முடிந்தவுடன் கையோடு அந்த குறிப்பிட்ட பாடத்தின் மீது மாதிரித் தேர்வு நடத்தி, அப்போதே மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார் செய்யலாம்.


இயன்றவரை மாதம் ஒரு நாளேனும் மாணவ, மாணவியரில் இருந்து ஒருவரை அழைத்து. நடத்தி முடித்த பாடத்தைப் பிறருக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுமாறு பணிக்கலாம். அவ்வப்போது மாணவரிடம் இருந்து யாரேனும் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்தப்படுகிற முறை குறித்து பின்னூட்டம் தரச் சொல்லி வாய்ப்பு தரலாம். பல சமயங்களில் மாணவரின் கருத்துகளில் உள்ள நியாயத்தை, பெற்றோர் உட்பட யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்தக் குறை நீக்கப்பட வேண்டும்.


ஒரு மாணவி அல்லது மாணவனின் தனித்திறனை, அவ்வந்த வகுப்புகளில் அவ்வப்போது வெளிக் கொணர்ந்து மனதாரப் பாராட்ட வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு மாணவி நன்றாகப் பாடுகிறார் என்றால், கால இடைவெளியில், தனது வகுப்பில் அவ்வப்போது பாட வாய்ப்பு கொடுத்து வாழ்த்தினால் எப்படி இருக்கும்..? பள்ளிப் போட்டிகளில் கலந்து கொண்டு வென்றால் கிடைக்கிற பரிசுகளை விட இது மிகுந்த மனமகிழ்ச்சியுடன் வகுப்புக்கு வரத் தூண்டும்.

வகுப்புகளில் அவ்வப்போது மாணவர்களுக்கு உடல்ரீதியாக ஏதேனும் ‘வேலை’ தந்து கொண்டே இருக்க வேண்டும். எழுந்திருக்க, இடம் மாறி அமர்ந்து கொள்ள, வகுப்புக்குள் நடக்க, குதிக்க…ஏதேனும் ‘உடல் அசைவு’ அவசியம் ஆகும். இதே போன்று, மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாகப் புதிர்கள், வினாடி - வினா போன்ற பயிற்சிகள் வகுப்பு நேரத்தை சுவாரஸ்யம் ஆக்கும்.


இவையெல்லாம் விட மிக முக்கியமானது – யாரெல்லாம் தவறாமல் எல்லா நாளும் பள்ளிக்கு வந்து 100% வருகை புரிகிறார்களோ, அவர்களுக்கு ஒவ்வொரு மாத முடிவிலும் ஊக்கப் பரிசு வழங்க வேண்டும். கல்வியாண்டு முடிவில் பரிசு தந்து என்ன பயன்..? மாதந்தோறும் ஊக்கப் பரிசு – அதுவும், ‘வீட்டுக்கு’ பயன் தருகிற விதத்தில் கிண்ணம், மின்னணுப் பொருட்கள், ஏன்… அரிசி பருப்பாகக் கூட இருக்கலாம். வழங்கினால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில், வறிய நிலையில் உள்ள பெற்றோருக்கும் ஆர்வம் கூடும். அதிக நிதிச் செலவு இல்லாமலே இதனை நிறைவேற்ற முடியும். நூறு சதவீத வருகையை உறுதிப்படுத்தும் மிக நல்ல திட்டமாக இது விளங்கும். இதை பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்கலாம்.


நிறைவாக, கல்வி நிலையங்கள் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும். தனித்தனியே ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்று இருக்கும் நடைமுறையை மாற்றி அமைத்தால் ‘ஆரோக்கியமான’ சமுதாயம் உருவாகும். வரும் ஆண்டில் முதல் வகுப்பில் தொடங்கினாலும் அடுத்த 12 ஆண்டுகளில் எல்லா பள்ளிகளுமே பொதுப் பள்ளிகளாக மாறி விடும். தமிழ்நாடு அரசு இதனைக் கொள்கை முடிவாக அறிவித்தால், பாலினப் பாகுபாடு இல்லாத பள்ளிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழ்நாடு மிளிரும். நாளடைவில் எல்லா மாநிலங்களிலும் ‘தமிழ்நாடு மாடல்’ பின்பற்றப்படும். அப்போது, இன்று நாம் காணும் அல்லது கேள்விப்படும் ‘பல பிரச்சினைகள்’ தானாக மறைந்து போகும். சரிதானே..?

Share:

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 670 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

Hss HM Vacant List - Download here

Share:

தொடக்கக் கல்வி இயக்கங்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநர் கலந்துரையாடல் ( 01.08.2023 )!

பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக் ) பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் 01.08.2023 மு.ப. 10.30 மணி அளவில் அன்று நடைபெற உள்ளமை சார்பாக 

Dir Proceedings - Download here...

Share:

ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!


கொரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக "ராக்கெட் சயின்ஸ்" என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தொடங்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பயிற்சி அளித்தார்.

தற்போது அதில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் சிலர் ரஷியாவில் உள்ள "யூரி ககாரின்" விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட இருக்கின்றனர். ரஷிய விண்வெளி ஏவுதளத்தை பார்வையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 50 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மைய வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவுக்கு ரஷியா அதிக உதவிகள் செய்துள்ளது. அங்கு நம் பள்ளி மாணவர்கள் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவைகளை கற்றுக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

விஞ்ஞானி சிவதானு பிள்ளை போல் பலர் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் நிலையில் அரசு சார்பிலும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்:

ஆசிரியர் சங்கங்களுடன் தனித்தனியாக பேசி இருக்கிறோம். அவர்களின் 10 கோரிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சருடன் பேச இருந்தோம். ஆனால் முதல்-அமைச்சருடன் அவர் சந்திக்க வேண்டியிருந்ததால், எங்களுடைய சந்திப்பு தள்ளிப்போனது.

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தபோதுகூட நிதி அமைச்சரிடம் அது பற்றி பேசியிருக்கிறேன். அவர் சென்னை வந்த பிறகு, நானும், எங்கள் துறை முதன்மைச்செயலாளரும் இணைந்து பேசி முதலில் எந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது என்பது பற்றி ஆலோசித்து, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

ஆசிரியர் பணியிடங்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்புகள் வர உள்ளது. மிக விரைவில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல விஷயத்தில்...

இதையடுத்து அவரிடம், 'தமிழ்நாட்டின் கல்வித்துறை சி.ஆர்.எஸ். நிதியையும், மத்திய அரசு கொடுக்கும் நிதியையும் சரியாக பயன்படுத்துவதில்லை என்று கவர்னர் கூறியிருக்கிறாரே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை அதிகளவில் நல்ல விஷயத்தில் பயன்படுத்தக்கூடிய துறை பள்ளிக்கல்வித்துறைதான். கவர்னர் எதில் சரியாக நிதியை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டு சொன்னால், அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். அதேபோல், சி.ஆர்.எஸ். செயல்பாட்டை பொறுத்தவரையில், நல்ல விஷயத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் அது. நல்ல விதத்தில் அது பயன்படும்' என்றார்
Share:

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் - "புதுமைப் பெண்" திட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!


மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் - "புதுமைப் பெண்" திட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!

 Press Release 1513 - Download here

செய்தி வெளியீடு எண் :1513

நாள் : 29.07.2023

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்

கல்வி கற்ற பெண்களால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை உருவாக்கிட இயலும் என்பதற்கேற்ப. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உள்ளத்தில் உதித்த உன்னத திட்டம் “மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் உயர்கல்வி உறுதி - புதுமைப் பெண் திட்டம்" ஆகும்.


தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர். பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, இந்த மாணவிகளின் கல்வி தடைபடாமல், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து. மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பயனடைய தேவையான தகுதி விவரங்கள் :-

  • 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் அவசியம்
  • அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள். மாநகராட்சி பள்ளிகள். பழங்குடியினர் நலப் பள்ளிகள். கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலும்.
  • இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6-ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர். 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும்.
  • முதன் முதலில் இளநிலை படிப்பில், கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமா, ITI, இளநிலை மற்றும் முதுநிலை இணைந்த படிப்புகள் ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவியருக்கு. அப்படிப்பு முடியும் வரை உதவித்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
  • கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு முதல் மூன்று ஆண்டுகளும் தொழிற்படிப்புகளில் பொறியியல் படிப்பிற்கு முதல் நான்கு ஆண்டுகளும், மருத்துவக் கல்வியில் முதல் 5-ஆம் ஆண்டு மாணவிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படும். வரை பயிலும்
  • பயிற்சி காலத்திற்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
  • கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
  • அஞ்சல்வழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது. வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.
  • ஏற்கெனவே உயர்கல்வியில் சேர்ந்த மாணவியரும், மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான விண்ணப்பிக்கலாம்.
  • இத்திட்டத்திற்கென மறுசீரமைக்கப்பட்ட (https://www.pudhumaipenn.tn.gov.in) உருவாக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள்

  • வலைதளம் தாங்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்திட இயலும்.


திட்டத்தின் நோக்கம்

  • பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
  • குழந்தை திருமணத்தை தடுத்தல்
  • குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
  • பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல்
  • பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்
  • உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல்.
  • உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில்
  • வாய்ப்புகளை அதிகரித்தல்
  • பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி "புதுமைப் பெண் திட்டம்"
  • மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று முதல் கட்டமாகவும், 08.02.2023 அன்று 2-ஆம் கட்டமாகவும் துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதற்கட்டமாக அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் சுமார் 1.16,260 மாணவிகளும், இரண்டாம் கட்டமாக 93:105 மாணவிகளும் பயனடைந்த வகையில் ரூ. 100.11 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது

மேலும், இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் நிதியாண்டிற்கு ரூ.349.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டதில், நாளது வரை ரூ.60.86 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் 2:11.506 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

ஆக இத்திட்டம் துவங்கப்பட்டது முதல் நாளது வரை இத்திட்டத்திற்கென ரூ.160.97 கோடி பணப்பலனாக மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவிகள் தங்களது குறைகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண்' திட்டமானது, மாணவியர், கல்விக்கு ஊக்கமளிப்பதுடன், வரும் காலங்களில் யாரும் மறுக்க முடியாத பெரும் பயன்களை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Share:

12th Computer Science - First Mid term Important Questions 2023

12th Computer Science - First Mid term Important Questions 2023

Lesson 1. செயற்கூறு (2 மதிப்பெண்)

1. துணைநிரல் என்றால் என்ன?

2.நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும். 3.X=(78) இதன் மூலம் அறிவது என்ன?

(3 மதிப்பெண்)

1. இடைமுகத்தின் பண்புக்கூறுகள் யாவை?

2. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது? 3. impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக?

(5 மதிப்பெண்)

1.செயலுருபுகள் என்றால் என்ன?

(அ) தரவு வகை இல்லாத அளபுருக்கள்

(ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் ?

3. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

Lesson 2. தரவு அருவமாக்கம்

(2 மதிப்பெண்)

1. தரவு அருவமாக்கம் வகை என்றால் என்ன? 2.ஆக்கிகள் மற்றும் செலக்டர்கள் வேறுபாடு தருக.

(3 மதிப்பெண்)

2. நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? யுக்தியை வரையறுக்க. 4. list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக. 1. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

(5 மதிப்பெண்)

Lesdon 3.வரையெல்லை

(2 மதிப்பெண்)

1.வரையெல்லை என்றால் என்ன? 3.மேப்பிங் என்றால் என்ன?

4. Namespaces சிறுகுறிப்பு வரைக?

(3 மதிப்பெண்)

4. அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது? 

(5 மதிப்பெண்

 2. தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எழுதுக?

)

(அல்லது)

LEGB விதியை 

1.மாறியின் வரையெல்லைகளின் எடுத்துக்காட்டுடன் விளக்குக? (3 & 5 மதிப்பெண்

3. தொகுதி நிரலாக்கத்தின் பயன்களை எழுதுக? 4.நெறிமுறையின் யுக்திகள்

1.நெறிமுறை என்றால் என்ன?

(2 மதிப்பெண்)

4.வரிசையாக்கம் என்றால் என்ன?

5.தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

(3 மதிப்பெண்

 1.நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

3. இடம் மற்றும் இடசிக்கல்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

4.Asymptotic குறியீடு-குறிப்பு வரைக.

(5 மதிப்பெண்)

2.வரிசைமுறை தேடல் நெறிமுறையை விவாதிக்கவும்.

3. இருமத்தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டென் விளக்குக. 4.குமிழி வரிசையாக்க நெறிமுறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

Share:

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களும் இது இலவசம்…, உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழக அரசானது பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதே உறுதி செய்வதுடன், அவர்களை ஊக்கப்படுத்தி எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களை அரசு சிறப்பாக வழங்கி வருகிறது.

இதில் இலவச சைக்கிள், நடப்பு கல்வி ஆண்டுக்கான விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு, இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். இதன் பிறகு பேசிய அமைச்சர் பொன்முடி, +1 மற்றும் +2 மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் நிதி நிலைக்கேற்ப அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share:

தமிழக பள்ளி பாடத்திட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றம்.., வெளியான அதிரடி அறிவிப்பு!

தமிழக பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை குறைக்கவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிகளில் உள்ள பாடத்திட்டங்களை ஒவ்வொரு நாளும் மாற்றினால் மாணவர்களின் கற்கும் ஆர்வம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். அதாவது எந்தெந்த நாட்களில் என்னென்ன பாடங்கள் எடுக்க வேண்டும் என்பதை முறையாக அட்டவணை படுத்த வேண்டும். இத்துடன் ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட ஆசிரியர் மட்டும் பாடம் எடுக்காமல் மற்ற துறை ஆசிரியர்களும் பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும்

உதாரணமாக ஆங்கில ஆசிரியர், தமிழ் பாடம் எடுத்தால் அது மாணவர்களுக்கு சற்று வித்தியாசத்தை கொடுக்கும். இதே போன்று கணித ஆசிரியர் சமூக அறிவியல் பாடத்தை எடுத்தால் புதுவித வித்தியாசமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு ஆசிரியரின் கருத்தும் ஒவ்வொன்றாக இருக்கும். இதனால் மாணவர்களின் படிக்கும் ஆர்வமும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். மேலும் பாட புத்தகத்தைத் தவிர மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்கள், வினாடி வினா போன்ற பயிற்சி வகுப்புகளும் நடந்தால் மாணவர்கள் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Share:

8th English - First Mid Term Exam Original Question Paper 2023 - 2024

8th English - First Mid Term Exam Original Question Paper 2023 - 2024

8th English

8th English - First Mid Term Exam 2022 Original Question Paper  - English Medium Download Here

8th English - First Mid Term Exam Original Question Paper 2022-2023 (Madurai District) - English Medium Download Here

8th English - First Mid Term Exam 2022 Original Question Paper | Tirupattur District - English Medium Download Here

8th English - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tenkasi District ) | Mr. M. Sivakumar - English Medium Download Here

8th English - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudhunagar District) - English Medium Download Her

Share:

8th standard - First Mid Term Question paper 2023 ( All subjects )

8th standard - First Mid Term Question paper 2023

8th Tamil

8th Tamil - First Mid Term Exam Original Question Paper (Madurai District) - Tamil Medium Download Here

8th Tamil - First Mid Term Exam 2022 Answer Key ( Tirupattur District ) - Tamil Medium Download Here

8th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tenkasi District ) | P.Sivasamy,M.A.B.Ed - Tamil Medium Download Here

8th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudhunagar District) - Tamil Medium Download Here

8th Tamil - First Mid Term Exam Original Question Paper - Tamil Medium Download Here

8th English

8th English - First Mid Term Exam 2022 Original Question Paper  - English Medium Download Here

8th English - First Mid Term Exam Original Question Paper 2022-2023 (Madurai District) - English Medium Download Here

8th English - First Mid Term Exam 2022 Original Question Paper | Tirupattur District - English Medium Download Here

8th English - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tenkasi District ) | Mr. M. Sivakumar - English Medium Download Here

8th English - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudhunagar District) - English Medium Download Here

8th English - First Mid Term Exam Original Question Paper 2019 - English Medium Download Here

8th Maths

8th Maths - First Mid Term Exam 2023 Original Question Paper - English Medium Download Here

8th Maths - First Mid Term Exam 2022 Original Question Paper - Tamil Medium Download Here

8th Maths - First Mid Term Exam 2022 Original Question Paper | Tirupattur District - English Medium Download Here

8th Maths - First Mid Term Exam 2022 Original Question Paper | Tirupattur District - Tamil Medium Download Here

8th Maths - First Mid Term Exam 2022 Original Question Paper | Madurai District - Tamil Medium Download Here

8th Maths - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tenkasi District ) | Mr. M. Sivakumar - English Medium Download Here

8th Maths - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudhunagar District) - Tamil Medium Download Here

8th Maths - First Mid Term Exam Original Question Paper 2019 - Tamil Medium Download Here 

8th Science

8th Science - First Mid Term Exam 2022 Original Question Paper | Tirupattur District - English Medium Download Here

8th Science - First Mid Term Exam 2022 Original Question Paper | Tirupattur District - Tamil Medium Download Here

8th Science - First Mid Term Exam 2022 Original Question Paper | Madurai District - English Medium Download Here

8th Science - First Mid Term Exam 2022 Original Question Paper | Madurai District - Tamil Medium Download Here

8th Science - First Mid Term Exam 2022 Original Question Paper | Mayiladuthurai District | Mrs. Prakash Geetha - English Medium Download Here

8th Science - First Mid Term Exam 2022 Original Question Paper | Mayiladuthurai District | Mrs. Prakash Geetha - Tamil Medium Download Here

8th Science - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tenkasi District ) | Mr. M. Sivakumar - English Medium Download Here

8th Science - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudhunagar District) - Tamil Medium Download Here

8th Science - First Mid Term Exam Original Question Paper 2019 - Tamil Medium Download Here 

8th Social

8th Social - First Mid Term Exam 2022 Original Question Paper | Tirupattur District - English Medium Download Here

8th Social - First Mid Term Exam 2022 Original Question Paper | Tirupattur District - Tamil Medium Download Here

8th Social - First Mid Term Exam 2022 Original Question Paper | Madurai District - English Medium Download Here

8th Social - First Mid Term Exam 2022 Original Question Paper | Thiruvallur District - English Medium Download Here

8th Social - First Mid Term Exam 2022 Original Question Paper | Thiruvallur District - Tamil Medium Download Here

8th Social - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tenkasi District ) | Mr. M. Sivakumar - English Medium Download Here

8th Social - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudhunagar District) - Tamil Medium Download Here

8th Social - First Mid Term Exam Original Question Paper 2019 - Tamil Medium Download Here 

Share:

8th Tamil - First Mid Term Exam Original Question Paper 2023 - 2024

8th Tamil - First Mid Term Exam Original Question Paper 2023 - 2024

8th Tamil

8th Tamil - First Mid Term Exam Original Question Paper (Madurai District) - Tamil Medium Download Here

8th Tamil - First Mid Term Exam 2022 Answer Key ( Tirupattur District ) - Tamil Medium Download Here

8th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Tenkasi District ) | Mr. M. Sivakumar - Tamil Medium Download Here

8th Tamil - First Mid Term Exam Original Question Paper 2022-2023 ( Virudhunagar District) - Tamil Medium Download Here

8th Tamil - First Mid Term Exam Original Question Paper 2019 - Tamil Medium Download Here 

Share:

12th Accountancy - First Mid term Question 2023

12th Accountancy - First Mid term Question 2023

12th Accountancy 2023 - 2024

12th Accountancy - First Mid term Original Question paper 2023 -Tamil Medium  PDF Download Here

12th Accountancy - First Mid term Original Question paper 2023 -English Medium  PDF Download Here

12th Accountancy 2022 - 2023

12th Accountancy - First Mid term Original Question paper ( Kanchipuram ) -Tamil Medium  PDF Download Here

12th Accountancy - First Mid term Original Question paper ( Tenkasi) - English Medium PDF Download Here

Share:

12th commerce - First Mid term Question 2023

12th commerce - First Mid term Question 2023

12th commerce

12th commerce - First Mid term Original Question paper ( Kanchipuram ) -Tamil Medium  PDF Download Here

12th commerce - First Mid term Original Question paper ( Tirupattur) - PDF Download Here

12th commerce - First Mid term Original Question paper ( Tenkasi) - English Medium PDF Download Here

Share:

பள்ளி மாணவர்களே., இந்த நாளில் மட்டும் “Bag” தேவையில்லை? கல்வித்துறை அறிவிப்பு!


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் மட்டுமல்லாமல் திறனறிவுகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதந்தோறும் கடைசி வேலை நாள், மத்திய அரசின் “பையில்லா தினம்”ஆக கொண்டாடப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நாளில் மாணவர்கள் தங்களது பாடப்புத்தகம் அடங்கிய பேக்குகளை கொண்டு வர தேவையில்லை. மாறாக நுண்ணறிவு, வினாடி வினா, விளையாட்டு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Share:

ஆக.3 மற்றும் ஆக.9-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு...!!

ஆக.3 மற்றும் ஆக.9-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு...!!


சேலத்தில் ஆக.3 மற்றும் ஆக.9-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஆடி 18 மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆக.3-ம் தேதியும், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி ஆக.9-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது;

“சேலம், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 09.08.2023, புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச் சட்டம் 1881(Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 02.09.2023, சனிக்கிழமை அன்று ஈடுகட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Share:

பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி (12.08.2023.)..!!

 பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் - விண்ணப்பிக்க கடைசி தேதி (12.08.2023.)..!!

மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமமந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் (PM-YASASVI) தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

2023-24 நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் ,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர்(OBC,EBC  மற்றும் DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ/ மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்ப்டடுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ/ மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://vet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும் 

11 மற்றும்12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 

தேசியத் தேர்வு முகமை நடத்தும் YASASVI நுழைவுத் தேர்வில் (YASASVI Entrance Test) பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத் தேர்விற்கு 10.08.2023 க்குள் https://vet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு (OMR Based) 29.09.2023 ஆம் தேதி நடைபெறும் விண்ணப்பத்துடன் கைப்பேசி எண். ஆதார் எண். ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://soclaljustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.


Share:

மாணவரின் இடுப்பு , தோள்பட்டை ஆசிரியர்கள் கை , கால் அளவெடுக்கும் டெய்லர்களாக மாற்றும் ' எமிஸ் '..!!

மாணவரின் இடுப்பு , தோள்பட்டை ஆசிரியர்கள் கை , கால் அளவெடுக்கும் டெய்லர்களாக மாற்றும் ' எமிஸ் '..!!

மாணவர்களின் இடுப்பு, தோள்பட்டை, கை, கால் அளவெடுத்து அவற்றை 'எமிஸ்'ல் பதிவேற்றும் செய்ய ஆசிரியர்கள் 'டெய்லர்களாக மாறி' படாதபாடு படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.


அரசு வழங்கும் இலவச சீருடைக்காக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் சட்டை, பேன்ட், மாணவிகளுக்கான பேன்ட், சுரிதாருக்கு அந்தந்த வகுப்பு ஆசிரியர்களே அளவு எடுத்து 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனால், இதுவரை எண்ணும் எழுத்து திட்டத்திற்காக தாங்களே இரவில் விழித்து துணை கருவிகள் (டி.எல்.எம்.,) தயாரித்து பைகளில் துாக்கிச் செல்லும் ஆசிரியர்கள் தற்போது 'டேப்'யையும் (அளவெடுக்க) கையோடு எடுத்துச் செல்கின்றனர்.


தற்போது எடுக்கப்படும் மாணவர் அளவு விபரம் வரும் டிசம்பரில் வழங்கப்படவுள்ள சீருடைக்காக எடுக்கப்படுகிறது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்கு பின் இந்த அளவு சரியாக இருக்குமா என குழப்பம் உள்ளது. மேலும் இப்பதிவுகளை 'எமிஸ்' இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிறது. இதனால் கற்பித்தல் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.


அவர்கள் கூறியதாவது:


ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தோள்பட்டை அளவு பெரும்பாலும் 13 முதல் 16 செ.மீ., உள்ளது. ஆனால் 'எமிஸ்'ல் மாணவர்களின் தோள்பட்டை அளவு குறைந்தது 20 செ.மீ., இருந்தால் தான் பதிவேற்றம் செய்ய முடிகிறது. அதற்கு கீழ் உள்ள செ.மீ., அளவுகளை பதிவேற்றம் செய்ய 'ஆப்ஷன்' இல்லை. மாணவர், ஆசிரியர் வருகை பதிவு உட்பட 'எமிஸ்'ல் உள்ள 'ஆப்'களில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பதிவுகளை தினமும் ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.


அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுவதால் பதிவேற்றம் செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் இடுப்பை, கை கால் அளவை பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன் எடுக்கப்படும் அளவு சரியாக இருக்குமா.

கற்பித்தல் அல்லாத பணிகள்


'மாஸ் டிரில்' (Mass drill) வாரம் இரண்டு பாடவேளை, கல்விசாரா செயல்பாடு வாரம் இரண்டு, இணை செயல்பாடுகள் வாரம் இரண்டு,கலையரங்கம் வாரம் இரண்டு, சிறார் திரைப்படம் மாதம் மூன்று பாடவேளை, தினம் ஒரு நுாலக பாடவேளை, மாதத்தில் ஒரு வாரம் கணினியில் தேர்வு என கற்பித்தல் அல்லாத பணிகள் பின்பற்றப்படுவதால் கற்பித்தல் பணி ஏற்கனவே கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது மாணவர்களுக்கு அளவான சீருடை கிடைக்க ஆசிரியர்கள் டெய்லர்களாக மாறி வருகிறோம். ஆனால் அதற்கேற்ப சீருடை தரமாக இருந்தால் சரி. மாணவர்களுக்காக எல்லாமுமாக மாற தயாராக உள்ளோம், என்றனர்.

கற்பித்தல் அல்லாத பணிகள் பின்பற்றப்படுவதால் கற்பித்தல் பணி ஏற்கனவே கேள்விக்குறியாகி வருகிறது. தற்போது மாணவர்களுக்கு அளவான சீருடை கிடைக்க ஆசிரியர்கள் டெய்லர்களாக மாறி வருகிறோம்.

தினமலர் செய்தி :



Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support