தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் மாத நாட்காட்டி வெளியீடு!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் மாத நாட்காட்டி வெளியீடு!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான ஜூன் மாத கல்வி நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் மாத நாட்காட்டி வெளியீடு!

ஜூன் மாத கல்வி நாட்காட்டி:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

அதன் படி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முடிந்துள்ளது. 2 ஆண்டுகள் கழித்து தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுத வந்தனர். மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கான ஜூன் மாத கல்வி நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஜூன் மாத கல்வி நாட்காட்டி

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் திருத்தும் பணி நாளை (2.6.22) முதல் தொடங்கப்பட இருப்பதாகவும், வரும் 23-ம் தேதி +2 முடிவுகளும், 17-ம் தேதி 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • BEO அலுவலக குறைதீர் கூட்டம் 04.06.2022 ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 1 முதல் 10 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 13.06.2022 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 1 முதல் 3 ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 06.06.2022 முதல் 10.06.2022 வரை 5 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 4 மற்றும் 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு SPOKEN ENGLISH பயிற்சி 23.06.2022 & 24.06.2022 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறும்.
  • STEM TRAINING DIST LEVEL பயிற்சி 17.06.2022 ஆம் தேதி ( 6-8 ம் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்கு) நடைபெற இருக்கிறது.
  • 6 முதல் 8 ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்களுக்கு SPOKEN ENGLISH TRAINING 24.06.2022 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
  • CRC MEETING 18.06.2022 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
  • 20.06.2022 ஆம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்
  • 27.06.2022 ஆம் தேதி 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்
  • R.L இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...