10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
அதன் படி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடத்தப்பட்டு முடிந்துள்ளது. 2 ஆண்டுகள் கழித்து தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுத வந்தனர். மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதவில்லை:
இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் தேர்வுகளை எழுதாமல் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 5-ந்தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் 31-ந்தேதி வரை நடைபெற்றது. 10, 11, 12-ம் வகுப்பு வரை சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர். இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளில் 45 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
12ம் வகுப்பு தேர்வுகளில் 1,95,292 மாணவர்களும், 11 ம் வகுப்பு தேர்வில் 2,58,641 மாணவர்களும், 10 ம் வகுப்பு தேர்வில் 2,25,534 மாணவர்களும் என மொத்தமாக 6,49,467 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
துணைத்தேர்வு:
இதையடுத்து அந்த மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் நடைபெறும் உடனடித் தேர்வுகளில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இதற்கான செயல்திட்டத்தை தயார் செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வாட்ஸப் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.